உள்ளடக்கத்துக்குச் செல்

ஊடுபயிர் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊடுபயிர் முறை (Intercropping) இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பசுமைப் புரட்சியின் போது மண் வளத்தையும் காத்து, உற்பத்தியையும் பெருக்க கையாண்ட முறைகளில் இதுவும் ஒன்றாகும்.[1] ஓர் இடத்தில் பல பயிர்களை ஊடுபயிராக நடவு செய்து வேளாண்மை செய்யும் முறையை இது குறிக்கும். எடுத்துக்காட்டாக வாழை மரம் நடவு செய்த வயலில் பயறு, அல்லது வேர்க்கடலை போன்ற இனங்களைப் பயிரிடும் முறையைக் குறிப்பிடலாம். இவ்வாறு பயிரிடும் முறையைப் பல்லுயிர் சாகுபடி முறையின் உத்திகொண்டே கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறான ஊடுபயிர் முறை மூலம் நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து வருமானத்தைப் பெருக்கி நீரைச் சேமிக்கலாம்.[2]

தென் அமெரிக்கா கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொலம்பியா நாட்டின் காவுகா துறை பகுதியில் காணப்படும் காப்பி தோட்டத்தின் நடுவே வளர்க்கப்படும் மிளகாய்த் தாவரத்தின் ஊடுபயிர்.
இந்தியாவில் கட்டிக் கேந்தியின் ஊடாகத் தென்னை மரம் வளர்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடுபயிர்_முறை&oldid=2747533" இலிருந்து மீள்விக்கப்பட்டது