உளின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உளின்
Eusideroxylon zwageri.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலையிகள்
தரப்படுத்தப்படாத: Magnoliids
வரிசை: Laurales
குடும்பம்: Lauraceae
பேரினம்: Eusideroxylon
இனம்: E. zwageri
இருசொற் பெயரீடு
Eusideroxylon zwageri
தெயிசுமாண், பின்.
வேறு பெயர்கள் [1][2]

உளின் (இலத்தீன் இருசொற் பெயரீடு: Eusideroxylon zwageri) என்பது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன் ஆகியவற்றை உள்ளடக்கும் பிராந்தியத்தை இயலிடமாகக் கொண்டிருக்கும் ஒரு அரிய வெட்டுமர இனமாகும். இது ஆங்கிலத்தில் போர்னியோ இரும்பு மரம் என்ற பொருளில் Bornean ironwood[3] என்றும் உள்ளூர் மொழிகளில் பிள்ளியன் அல்லது உளின்[3] என்றும் அழைக்கப்படுகிறது.

பரவல்[தொகு]

இதன் இயலிடம் புரூணை, இந்தோனேசியாவின் புளோரசு, சாவகம், களிமந்தான், சுமாத்திரா என்பன, மலேசியாவின் சபா, சரவாக் ஆகிய மாநிலங்கள், பிலிப்பீனின் சுளு தீவுக்கூட்டம் ஆகியனவாகும்.[4] இதன் இருப்பு வாழிட இழப்பின் காரணமாக அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்தோனேசிய அரசாங்கமும் சரவாக்கு மாநில அரசாங்கமும் இத்தாவர இனத்தின் ஏற்றுமதியை உத்தியோகபூர்வமாகத் தடை செய்துள்ளன. ஆயினும் சட்டவிரோதமாக நடைபெறும் கள்ளக் கடத்தல் ஒரு பெரிய பிரச்சினையாகவுள்ளது.[5]

உளின் தாவரங்கள் கடல் மட்டத்திலிருந்து 625 மீற்றர் வரையான முதனிலை, இரண்டாம் நிலைத் தாழ் நிலக் காடுகளில் வளர்கிறது.[6] இது நன்கு நீர் வழிந்தோடுகின்ற, மணற்பாங்கான மண் முதல் களிமண் வரையான தன்மைகள் காணப்படுகின்ற மண்ணிலேயே வளர்கிறது. சில வேளைகளில் சுண்ணப் பாறைகளிலும் இவற்றைக் காணலாம். இது பொதுவாக ஆற்றோரங்களிலும் அவற்றை அண்மித்த குன்றுகளிலும் காணப்படுகிறது. இதற்கு ஆண்டுதோறும் 2,500–4,000 மி.மீ. மழை வீழ்ச்சி தேவைப்படுகிறது. இது ஆங்காங்கே பரவியோ தொகுதிகளாகவோ காணப்படலாம்.

இந்த மிக முக்கியமான தாவரம் உலகில் அதிகம் தாக்குப் பிடிக்கின்ற, அதிக திணிவுள்ள மரங்களில் ஒன்றாகும். இது இப்போது மிதமிஞ்சிய பாவனை, மீளுருவாக்கம் குறைவாயிருத்தல், பயிர்ச் செய்கை கடினமாயிருத்தல் என்பவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[7]

உசாத்துணை[தொகு]

  1. "The Plant List". 2016-01-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. Irawan, B. (2005). Ironwood (Eusideroxylon zwageri Teijsm. & Binn.) and its varieties in Jambi, Indonesia. Cuvillier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783865373205. http://books.google.co.uk/books?id=-C_sah3I3scC. 
  3. 3.0 3.1 "USDA GRIN Taxonomy".
  4. Eusideroxylon zwageri
  5. "Archived copy". மே 6, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 6, 2009 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி)CS1 maint: archived copy as title (link)|access date 06-04-2009
  6. "View crop". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. வார்ப்புரு:IUCNlink
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளின்&oldid=3404577" இருந்து மீள்விக்கப்பட்டது