உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்
உருவாக்கம்19 மார்ச்சு 2013; 11 ஆண்டுகள் முன்னர் (2013-03-19)
நிறுவனர்மருத்துவர் நல்ல பழனிசாமி
வகைதொண்டு நிறுவனம்
நோக்கம்தமிழின் வளம் தமிழர் நலம்'
சேவைப் பகுதி
உலகம் முழுவதும்
வலைத்தளம்https://http://www.worldcenterfortamilculture.com/

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் (World Center for Tamil Culture) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும்.

தோற்றம்[தொகு]

தமிழின் வளம் தமிழர் நலம் என்னும் நோக்கோடு கோயம்புத்தூரைச் சார்ந்த கல்வியாளர் மருத்துவர் பழனி நல்லசாமி கோயம்புத்தூரில் 2013ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19ஆம் நாள் தொடங்கிய தமிழ்த் தொண்டு நிறுவனம் இதுவாகும்.

நோக்கம்[தொகு]

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நோக்கமாக,

  • இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சந்திப்புகளை நடத்துதல்
  • தமிழ் நூல் வெளியீடு
  • சிறந்த தமிழறிஞர் ஒருவர், சிறந்த தமிழ்ப் படைப்பாளி ஒருவர், வளரும் தலைமுறைத் தமிழார்வ அறிவியல்/ஊடகப் படைப்பாளி ஒருவர் என மூவருக்கு ஆண்டு தோறும் விருது வழங்குதல்[1][2]

விருது[தொகு]

ஆண்டு விருது விருது பெற்றவர்
2013 முதன்மை விருது கா மீனாட்சி சுந்தரனார்
கி. ராஜ நாராயணன்
2014 தமிழறிஞர் விருது ப. மருதநாயகம்
பிறதுறை வல்லுனர் விருது இரா. கலைக்கோவன்
படைப்பாளி விருது பூமணி
2015 தமிழறிஞர் விருது கா. செல்லப்பன்
பிறதுறை வல்லுனர் விருது திருப்பூர் கிருஷ்ணன்
படைப்பாளி விருது இரா.பூபாலன்
2016 தமிழறிஞர் விருது தொ. பரமசிவம்
பிறதுறை வல்லுனர் விருது தியோடர் பாஸ்கரன்
படைப்பாளி விருது சிவசங்கரி
2017 தமிழறிஞர் விருது சிலம்பொலி செல்லப்பன்
பிறதுறை வல்லுனர் விருது க. மணி
படைப்பாளி விருது வண்ணநிலவன்
2018 தமிழறிஞர் விருது ம. பெ. சீனிவாசன்
பிறதுறை வல்லுனர் விருது கி. முத்துச்செழியன்
படைப்பாளி விருது கு. சின்னப்பபாரதி
2019 தமிழறிஞர் விருது தெ. ஞானசுந்தரம்
பிறதுறை வல்லுனர் விருது செ. இராசு
படைப்பாளி விருது இமையம்
தனிநாயக அடிகள் அயலகத் தமிழ் விருது அழகப்பா ராம்மோகன், சிக்காகோ
சிறப்பு விருதுகள் க. ரத்னம்
பெ. சுப்பிரமணியன்
இரா. முத்துநாகு
2020 வழங்கப்படவில்லை
2021[3] உ.வே.சா. தமிழறிஞர் விருது இ. சுந்தரமூர்த்தி
டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது சா. பாலுசாமி (பாரதிபுத்திரன்)
பெரியசாமித் தூரன் தமிழ்ப் படைப்பாளி விருது ச. பாலமுருகன்
சிறப்பு விருதுகள் ப. அருளி
சூர்யகாந்தன்
எழுத்தாளர் தமிழ்மகன்
2022 உ.வே.சா. தமிழறிஞர் விருது சிற்பி பாலசுப்பிரமணியம்
டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது கு. வி. கிருஷ்ணமூர்த்தி
பெரியசாமித் தூரன் படைப்பிலக்கிய விருது ஆயிஷா இரா. நடராசன்
சிறப்பு விருது பாரதி கிருஷ்ணகுமார்
கு. அசோக் குமார்
சு. வேணுகோபால்
2023 உ.வே.சா. தமிழறிஞர் விருது பா. ரா. சுப்பிரமணியன்
டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது ஆ. இரா. வேங்கடாசலபதி
பெரியசாமித் தூரன் படைப்பிலக்கிய விருது நாஞ்சில் நாடன்
சிறப்பு விருது சு. சண்முகசுந்தரம்
ஆ. மணி
க. அம்சப்ரியா

மேற்கோள்கள்[தொகு]