க. ரத்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
க. ரத்னம்
பிறப்புதிசம்பர் 28, 1931(1931-12-28)
கீரணத்தம் ,கோயம்புத்தூர் மாவட்டம்
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

க. ரத்னம் (பிறப்பு: டிசம்பர் 28, 1931) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம், கீரணத்தம் எனும் ஊரில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடக்கத்தில் படைப்பிலக்கியங்களில் ஆர்வங்காட்டிய இவர் பின்னாளில் பறவையியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக “தென்னிந்தியப் பறவைகள்” எனும் நூலைப் படைத்தார். இவர் எழுதிய "தமிழ்நாட்டுப் பறவைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

எழுதிய நூல்கள்[தொகு]

  • தமிழில் பறவைகளின் பெயர்கள்[1]
  • தென்னிந்தியப் பறவைகள் [2]

ஆதாரம்[தொகு]

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ரத்னம்&oldid=2616722" இருந்து மீள்விக்கப்பட்டது