உரோமாலா சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோமோலா சின்கா (Romola Sinha ;1913-2010) இந்தியாவின் மேற்கு வங்காளத்தின்கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர் ஆவார். [1] [2] [3] இவர் சிறு வயதிலிருந்தே சமூகப் பணிகளிலும் பெண்கள் உரிமைச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டார். தேவதாசி முறையை ஒழித்தல், பால்வினைத் தொழில், பாலினத் தொழிலாகளின் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக போராடியதற்காக இவர் குறிப்பிடப்பட்டார்.[4] [5]

குடும்பம்[தொகு]

இவர் திருமதி ச. பி. சின்ஹா என்றும் அறியப்பட்டார். இந்திய ஆட்சிப் பணியாளரும் சிறந்த வழக்கறிஞருமான இவரது கணவர் சுசில் குமார் சின்ஹா, புகழ்பெற்ற குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியராக இருந்தார். மேலும் ராய்பூரின் நன்கறியப்பட்ட பரோன் சின்ஹா குடும்பத்தைச் சேர்ந்தவர் . [6] இவரது கணவர் ராய்பூரின் சத்யேந்திர பிரசன்னோ சின்காவின் இரண்டாவது மகன் ஆவார். பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தின் ஒரே இந்திய ஆளுநராக இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு பிரபுக்களின் இல்லத்திற்கு உயர்த்தப்பட்ட ஒரே இந்தியரும் ஆவார்.

பணிகள்[தொகு]

சாருலதா முகர்ஜி, கூச் பெகரின் மகாராணி சுனிதி தேவி, மயூர்பஞ்சு மகாராணி சுசரு தேவி, டி.ஆர். நெல்லி போன்ற வங்காளத்தைச் சேர்ந்த மற்ற பெண் ஆர்வலர்களுடன் 1932 முதல் அனைத்து வங்காள பெண்கள் சங்கத்தின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். 1933இல் ஒழுக்கக்கேடு சட்டம் நிறைவேற்றிய பிறகு, அனைத்து வங்காள பெண்கள் சங்கம் சிறுமிகளை மீட்டு, தம் தம்மில் அனைத்து வங்காள மகளிர் தொழில்துறை நிறுவனம் என்ற மறுவாழ்வு இல்லத்தைத் தொடங்கியது. இவர், பின்னர் மேற்கு வங்கத்தில் மத்திய சமூக நல வாரியத்தின் முதல் தலைவரானார். இது துர்காபாய் தேஷ்முக் மூலம் தேசிய அளவில் நிறுவப்பட்டது. [7] 1932இல் கூச் பெகாரின் மகாராணி சுனிதி தேவியின் தலைமையில் நிறுவப்பட்ட அனைத்து வங்காள மகளிர் சங்கத்தின் முதல் செயலாளராகவும் இருந்தார் [8]

பின்னர் பல ஆண்டுகள் அனைத்து வங்காள பெண்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் இவர் தனது மற்ற சமகாலத்தவர்களான ரேணுகா ரே, சீதா சௌத்ரி , ஆரத்தி சென் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். மேற்கு வங்காளத்தில் இருந்து ஷீலா தவார், பெலா சென், மானேக் மோடி, ஜெய சலீஹா, பிரணாதி கோசல், கோர்செத் நாரீவாலா போன்ற பிற தலைமுறை பெண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டுபவராகவும் இருந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Women Show The Way in Bengal". பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
  2. Datta-Ray, Sunanda K.. "Grande Dames of Service". http://www.telegraphindia.com/1030215/asp/opinion/story_1667972.asp. 
  3. "Remains of the Past". http://www.telegraphindia.com/1020707/editoria.htm. 
  4. Gupta, Ashoka (2005). In the Path of Service: Memories of a Changing Century By Ashoka Gupta, Sipra Bhattacharya. பக். 158, 246, 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185604565. https://books.google.com/?id=Zz3eKF7NdlAC&pg=PA158&dq=romola+sinha+calcutta#v=onepage&q=romola%20sinha%20&f=false. 
  5. Spink, Kathryn (1981). The miracle of love: Mother Teresa of Calcutta, her Missionaries of Charity, and her co-workers. பக். 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780060674977. https://books.google.com/?id=eDRNRsK6VJgC&q=romola+sinha+calcutta&dq=romola+sinha+calcutta. 
  6. The women's movement and colonial politics in Bengal: the quest for political rights, education, and social reform legislation, 1921–1936 by Barbara Southard pp X, 232, 242.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-10-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "Hidden behind a modest restaurant, decades of worth, 21 October 2010". INDIA TOGETHER. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமாலா_சின்கா&oldid=3545219" இலிருந்து மீள்விக்கப்பட்டது