உருகுக்கம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருகுக்கம்பியின் இலத்திரனிய குறியீடுகள்.
மின் உருகியின் வகைகள்

இலத்திரனியலிலும், மின்பொறியியலிலும், உருகுக்கம்பி அல்லது மின்னுருகி (fuse) என்பது ஓர் உலோக கலவையால் ஆன கம்பி ஆகும். இதில் 37% காரியம் 63% ஈயம் உள்ளது. அதிக மின்தடையும் குறைந்த உருகு நிலையும் கொண்டது இது. மின் சாதனத்தோடு மின் உருகி தொடராக இணைக்கப்படும். மின்சுற்றில் இணைக்கப்பட்டு உள்ளபோது, வரையறுக்கப்பட்ட அளவினை விட அதிக மின்னோட்டம் பாயும்போது உருகுக்கம்பி உருகி விடுகிறது. மின்சுற்று முறிக்கப்படுகிறது. இதனால் பிறகருவிகளில் அதிக மின்னோட்டம் தவிர்க்கப்படுகிறது. அங்குள்ள மதிப்பு மிக்க கருவிகள் காக்கப்படுகின்றன.

உருகுக்கம்பிகள் பல வகைப்படும். பயன்பாட்டினைப் பொறுத்து தேர்வு செய்யப்படுகின்றன. பொதுவாக தகரம் மற்றும் காரீயத்தால் இவை உருவாக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருகுக்கம்பி&oldid=2432584" இருந்து மீள்விக்கப்பட்டது