குறுக்குச் சுற்று
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குறுக்குச் சுற்று அல்லது கு/சு (Short circuit or s/c) என்பது பெரும்பாலும் மின்சார மறிப்பு இல்லாத அல்லது குறைவானதாக உள்ள இடத்தில், திட்டமிடாத பாதையில் மின்சாரம் பாயுமாறு அமைந்துவிடுகிற ஒரு மின்சாரச் சுற்று ஆகும். குறுக்குச் சுற்றின் எதிர்மறை திறந்த சுற்றாகும். அது மின்சுற்றின் இரு கணுக்களுக்கு இடையில் அளவுகடந்த மின்தடை சேரும் பொழுது நேரும். ஆங்கிலத்தில் சார்ட்டு சர்கியூட் என அழைக்கப்பெறும் இச்சொல்லை சில வேலைகளில் மின்சார தடங்கல் பிறவற்றிற்கும் கூட தவறாக பயன்படுத்துவது ஒரு பொது வழக்காகும்.