உன்முக் சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உன்முக் சந்த்
Unmukt Chand.jpg
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் உன்முக் சந்த் தாகூர்
உயரம் 5 ft 7 in (1.70 m)
வகை மட்டையாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை நேர்ச்சுழல்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2010/11-2019 தில்லி துடுப்பாட்ட அணி
2011-2013 டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 9)
2010/11-2013 வடக்கு தொகுதி
2014 ராஜஸ்தான் ராயல்ஸ்
2015-2016 மும்பை இந்தியன்ஸ் (squad no. 15)
2019-தற்போது வரை உத்தராகண்டம்
அனைத்துலகத் தரவுகள்
முததுப அஇ20
ஆட்டங்கள் 48 79 59
ஓட்டங்கள் 2690 2796 1188
துடுப்பாட்ட சராசரி 35.39 39.38 22.00
100கள்/50கள் 7/14 4/19 3/2
அதியுயர் புள்ளி 151 119 125
பந்துவீச்சுகள் 48 66
விக்கெட்டுகள் 0 0
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 53/0 30/3 38/1

2 செப்டம்பர், 2019, {{{year}}} தரவுப்படி மூலம்: கிரிக் இன்போ

உன்முக் சந்த் (Unmukt Chand) (பிறப்பு:26 மார்ச், 1993) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.[1] இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் . மேலும் இவர் 1994 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2010 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டில் இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 60 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3184 ஓட்டங்களையும் , 120 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 4505 ஓட்டங்களையும் ,77 இருபது20 போட்டிகளில் விளையாடி 1565 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.[2]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

இவர் 2010 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். நவம்பர் 17, தில்லியில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் குசராத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக அறிமுகமானார். பின் 2017 ஆம் ஆண்டில் ஆலூர் துடுப்பாட்ட அரங்கத்தில் கருநாடகத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

பட்டியல் அ[தொகு]

2010 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பெப்ரவரி 10 சிர்சா துடுப்பாட்ட அரங்கத்தில் சம்மு காஸ்மீர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் தெஹ்ரா தன் துடுப்பாட்ட அரங்கத்தில் உத்தரகாண்ட் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சிக்கிம் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

இருபது20[தொகு]

2010 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். மார்ச் 14 இந்தூர் துடுப்பாட்ட அரங்கத்தில் அசாம் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் மார்ச் 11 இந்தூரில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் தில்லி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

2012 ஆம் ஆண்டில் இவரின் தலைமையிலான 19 வயதிற்கு உட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணி துடுப்பாட்ட உலகக் கோப்பை வென்றது.டவுன்ஸ்வில்லில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்கள் எடுத்தார், [3] ஆஸ்திரேலியவின் முன்னாள் வீரரான இயன் சேப்பலின் பாராட்டைப் பெற்றார். [4]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

குமாவோனி ராஜ்புத் குடும்பத்தில் பரமத் சந்த் தாக்கூர் மற்றும் ஆசிரியர்களாக இருக்கும் ராஜேஸ்வரி சந்த் ஆகியோருக்கு மகனாக உன்முக் சந்த் பிறந்தார். [5] இவர் டி பி எஸ் பள்ளியில் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பரகம்பா சாலையில் உள்ள மாடர்ன் பள்ளிக்கு மாறினார்.[6]

ஐபிஎல்[தொகு]

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டத் தொடரில் இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பாக விளையாடினார். ஐபிஎல்லின் 6 ஆவது பருவத்திலும் இவர் விளையாடினார். ஐபிஎல்லின் 7 ஆவது பருவத்தில் 65 இலட்சம் ரூபாய்க்கு இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. 2015 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத் தேர்வானார்.[7]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்முக்_சந்த்&oldid=2894835" இருந்து மீள்விக்கப்பட்டது