உள்ளடக்கத்துக்குச் செல்

ஈஷா ரெப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஷா ரெப்பா
மிர்ச்சி இசை விருது விழாவில் ஈஷா ரெப்பா
பிறப்பு19 ஏப்ரல் 1990 (1990-04-19) (அகவை 34)[1]
வாரங்கல், ஆந்திரப் பிரதேசம், (தற்போதைய தெலங்காணா), இந்தியா.[2]
பணிவடிவழகி, நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது வரை

ஈஷா ரெப்பா (Eesha Rebba) (பிறப்பு 19 ஏப்ரல் 1990) ஓர் இந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக தெலுங்குப் படங்களில் பணியாற்றுகிறார். அந்தக முந்து... ஆ தருவாத... (2013), பந்திபோடு (2015), ஓய் (2016), அமி துமி (2017), தர்சகுடு (2017), அவே(2018) போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்

ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்

[தொகு]

ஈஷா ரெப்பா, வாரங்கல் நகரில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். மேலும் ஐதராபாத்தில் வளர்ந்தார்.[2] முதுகலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே விளம்பர மாதிரிக் கலைஞராக வேலை செய்தார். அதன் பிறகு இயக்குனர் இந்திரகண்டி மோகன கிருஷ்ணனிடமிருந்து ஒரு அழைப்பைப் பெற்றார்.[1]

ரெப்பா, 2012இல் லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தக முந்து... ஆ தருவாத... என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றினார். இந்த படம் திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. மேலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த படமாகப் பரிந்துரைக்கப்பட்டது.[3]

2017இல் வெளியான அமி துமி என்ற காதல்-நகைச்சுவைத் திரைப்படத்தில் இவரது நடிப்பு பரந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், இவருக்கு இரண்டு விருதுகளைப் பெற்றுத் தந்தது.[4][5] அவே (2018) படத்தில் ஒரு அகனள் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்கள் பாராட்டினர்.[6][7] பின்னர், அதே ஆண்டு இவர் பிராண்ட் பாபு, அரவிந்த சமேத வீர ராகவா, சுப்ரமணியபுரம், சவ்யசாச்சி ஆகிய நான்கு படங்களில் நடித்தார். 2021 இல் ஒட்டு படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்.[8] இப்படத்துக்காக வில்வித்தையையும், காலுதைச்சண்டையையும் கற்றார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Eesha Rebba Birthday Special! 4 times the 'Awe' actress slipped into black outfits and proved she's a stunner". The Times of India (in ஆங்கிலம்). 2020-04-19. Archived from the original on 14 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.
  2. 2.0 2.1 "Why Telugu girl Eesha Rebba is an exception in Tollywood!". OnManorama. Archived from the original on 14 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
  3. "Telugu films find acclaim globally". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Telugu-films-find-acclaim-globally/articleshow/28012422.cms. 
  4. "Eesha Rebba Exclusive Interview- Ami Thumi Movie". ap7am.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  5. Dundoo, Sangeetha Devi (2017-06-09). "Ami Thumi: Battle of wits" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/reviews/many-laugh-aloud-moments-in-this-farcical-comedy/article18909901.ece. 
  6. Natarajan, Saradha (2020-06-25). "The Lesbian Love tale of Krishna and Radha". Q Plus My Identity (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  7. Awe! Review {4/5}: Go watch this movie if you’re looking for something definitely out of the box and fresh, ‘Awe’ will not disappoint you, பார்க்கப்பட்ட நாள் 2021-06-16
  8. "Telugu actress Eesha Rebba to debut in Malayalam through Ottu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
  9. Adivi, Sashidhar (2021-06-10). "Eesha Rebba picks up archery and kickboxing". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஈஷா ரெப்பா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஷா_ரெப்பா&oldid=4114567" இலிருந்து மீள்விக்கப்பட்டது