உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரலழற்சி பி தீநுண்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரலழற்சி பி நச்சுயிரி
Hepatitis B virus
டெம்வகை நுண்வரைவி காட்டும் ஈரலழற்சி பி நச்சுயிரிகள்
தீநுண்ம வகைப்பாடு
குழு:
Group VII (dsDNA-RT)
வரிசை:
Unassigned
குடும்பம்:
Hepadnaviridae
பேரினம்:
Orthohepadnavirus
இனம்:
Hepatitis B virus

ஈரலழற்சி பி நச்சுயிரி (Hepatitis B virus) (HBV) அல்லது கல்லீரல் அழற்சி பி நச்சுயிரி ஒரு பகுதி இரட்டைப்புரி டி.ன்.ஏ நச்சுயிரியாகும்;[1] இது ஆர்த்தோகெபடுனா நச்சுயிரிப் பேரினத்தில் உறுப்பான ஓரினமாகும். இது கெபடுனாவிரிடே நச்சுயிரிக் குடும்பத்தில் உள்ளது.[2][3] இந்த நச்சுயிரி ஈரலழற்சி பி நோயை உருவாக்குகிறது.[4]

நோய்

[தொகு]

ஈரலழற்சி பி நச்சுயிரி தவிர்க்க ஊசிமருந்து இருந்தபோதும் இது உலகநலவாழ்வுச் சிக்கல்லாகவே நிலவுகிறது. இது கடும் நிலையில் இருந்து பின்னர் நாட்பாடநிலைக்கு முதிர்ந்து பிறநோய்களையும் நலவாழ்வுசிக்கல்களைத் தரவல்லத்தாக உள்ளது.[5]ஈரலழற்சியை உருவாக்குவதோடு, எச்.பி.வி தொற்று கல்லீரல் இழைநார் வளர்ச்சி, ஈரல்கலப் புற்று ஆகியவற்றையும் தருகிறது.[6] இது கணையச்சிரைப் புற்று இடரையும் கூட்டவல்லதாக உள்ளது.[4]

நோயில் நச்சுயிரியின் பாத்திரம்

[தொகு]

எச்.பி.வி தொற்று பலவகை ஈரல்கல மாற்றங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்குகிறது. நேரடியான மாறறம், நச்சுயிரியால் குறிமுறையேற்றமுற்ற புரதமான HBx வழியாகவும் மறைமுக மாற்றங்கள் தொற்றுக்குப் பிறகு உயரும் உயிர்க்கலத்திடையிலான எதிர்வினை உயிரக இணங்களாலும் ஏர்படுகின்றன. இந்த HBx புரதம் பலவகை உயிர்க்கல வினைத்தடங்களை ஒழுங்கு குலையச் செய்கிறது. இது டி.என்.ஏ மரபுத்தொகுதியுடன் பிணைந்து, நுண் ஆர்.என்.ஏக்களின் வெளிப்பாட்டுப் பாணிகளை ஒழுங்கு குலைத்து மாற்றுவதோடு, இழைய மீத்தைல்பெயர்நொதி களையும் தாக்கமுறச் செய்கிறது; மேலும், சிர்ட்டியூன் 1 எனும் புரதத்துடன் பிணைந்து படியெடுப்பை முனைவுறச் செய்கிறது; இழைய மீத்தைல் ஆக்க நொதியுடனும் மீத்தைல் இறக்க நொதியுடனும் ஒருங்கிணைந்து உயிர்க்கல வெளிப்பாட்டுப் பாணிகளை மாற்றுகிறது.[7]நாட்பட்ட எச்.பி.வி தொற்றின்போது, HBx ஓரளவு உயிர்க்கலத்திடையுள்ள எதிர்வினை உயிரக இனங்கள் (ROS) கிட்டதட்ட 10,000-மடங்கு உயர்வதற்குக் காரணியாகிறது.[8]

ஊன்குருத்து டி.என்.ஏ வுடன் HBx அகமயப்படும்போது ROS அளவை உயர்த்தி ஊன்குருத்தின் மென்படல மின்னிலையைக்(வல்லமையைக்) குறைக்கிறது.[9]மேலும், HBsAg எனும் மற்றொரு எச்.பி.வி புரதமும், ROS அளவை அகக்கணிக வலையுடன் இடைவிணை புரிந்து உயர்த்துகிறது.[9]எச்.பி.வி தொற்றுக்குப் பிறகான ROS உயர்வு அழற்சியை உருவாக்கி, மேலும் ROS அளவை உயர்த்தும்.[8] ROS cause more than 20 types of DNA damage.[10]உயிரகமேற்ற டி.என்.ஏ சிதைவு சடுதி மரபியல் மாற்றங்களை உருவாக்கும்.[11]மேலும், டி.என்.ஏ சிதைவு பழுதுபார்ப்பு, டி.என்.ஏ சிறைவுற்ற களங்களில் முழுமரபியல் உருமாற்றங்களை உருவாக்குகிறது.[12]

புற்றுநோய் முழுமரபியல் உருமாற்றங்கள் சடுதிமாற்றங்களும் உயிர்க்கல இயங்கமைப்புகளில் குறைகளைத் தோற்றுவித்து, கணையநோய்க்கும் வழிவகுக்கின்றன. தொடர்ந்த் திரளும் முழுமரபியல் உருமாற்றங்களும் சடுதிமாற்றங்களும் ஈரல்கலப்புற்றையும் உருவாக்குகின்றன; முழுமரபியல் உருமாற்றங்கள் சடுதிமாற்றங்களை விட புற்றாக்கத்தில் பெரும்பங்களிப்பு செய்கின்றன. ஒன்று அல்லது இரண்டு மரபன்களின் TP53[13] and perhaps ARID1A,[14]

சடுதிமாற்றம் மட்டுமே 20% அளவு கணையப்புற்றுகளில் அமைகின்றன; ஆனால், அதேநேரத்தில் ஒவ்வொன்றிலும் மீ மீத்தைலாக்க மேம்படுத்தி(ஒடுக்கும் மரபன் வெளிப்பாடு) உள்ள 41 மரபன்களில் 20% அளவுக்கும் கூடுதலான கணையப்புற்றுகளில் அமைகின்றன. of liver cancers; இவற்றில் ஏழு மீ மீத்தைலாக்க மரபன்கள் 75% அளவுக்கும் கூடுதலான கணையப்புற்றுகளில் அமைகின்றன. [13]டி.என்.ஏ பழுதுக்களங்களை உருமாற்றுவதோடு, முழுமரபியல் உருமாற்றங்களும் HBx ஆல் ஏற்படுகின்றன. பின்னரான உருமாற்றம் குறிப்பிட்ட மரபன் இருப்புக்கு டி.என்.ஏ மீத்தைல் பெயர்நொதிகள், DNMT1 அல்லது DNA (சைட்டோசன்-5)-மீத்தைல்பெயர்நொதி 3A (DNMT3A) ஆகியவற்றை வரவழைத்து, புற்றுநோய் மீதைலாக்கத்தையும் மரபன் வெளிப்பாட்டையும் உருமாற்றுவதாலேயே ஏற்படுகிறது.[15]HBx இழைய அசெட்டைலேற்றத்தியும் அசெட்டைலிறக்கத்தையும் கூட உருமாற்றுகிறது; இதுவும் மரபன் வெளிப்பாட்டை தாக்குகிறது.[15]

HBx- பிணைப்புக் களங்களில் பல ஆயிரம் புரதக் குறிமுறையேற்ற மரபன்கள் காணப்படுகின்றன.[7][16] தம் மேம்படுத்திகளுடன் அமைந்த HBx பிணைப்புகளால் புரதக் குறிமுறையேற்ற மரபன்களோடு, கிட்டதட்ட 15 நுண் ஆர்.என்.ஏக்களும் 16 நீண்ட குறிமுறையேற்றமற்ற ஆர். என். ஏக்களும், தாக்கமுறுகின்றன.[16] ஒவ்வொரு மாற்றமுற்ற நுண் ஆர்.என்.ஏ வால் பலநூறு தூது ஆர்.என்.ஏக்களும் தாக்கமுறுகின்றன..

ஈரலழற்சி பி நச்சுயிரி வரலாறு

[தொகு]

இந்த நச்சூயிரியின் தோற்ற வரலாற்றை கி. மு ஐந்தாம நூற்றாண்டுக்கே கொண்டு செல்லலாம். பாபிலோனிய களிமண் வில்லைகளிலேயே இந்நோய் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போக்கிரேட்டிசு தனது நோயாளிகளில் அமைந்த வெண்விழிப்படலமும் தோலும் மஞ்சளாகிய மஞ்சட் காமாலை நோய்ப்பரவலை விவரிக்கிறார். மஞ்சட் காமாலை என்பது ஈரலழற்சி தொற்றுக்கான மருத்துவமனை அடையாளக் குறியாகும்.[17][18]> என்றாலும், நோயின் தாக்கத்துக்கு ஆட்பட்டு மஞ்சட் காமாலை நோய் வளர்ந்து அதைத் தெளிவாக உணர, பல வார நீண்ட கால இடைவெளி அமைவதால் இது 20 ஆம் நூற்றாண்டு வரை ஒரு தொற்று நோயாக கண்டறியப்படவில்லை.[19]

சிலருக்கு 1883 இல் பெரியம்மை நோய்க்கு மாந்த நிணநீர்த் தடுப்பூசி போட்ட பிறகு, முதல் ஈரலழற்சி பி நச்சுயிரித் தொற்று நிகழ்வு பதிவாகியுள்ளது.[19]பிறகு செருமானியத் துறைமுகக் கப்பல் தொழிலாளர்களுக்கும் பொது தொழிலாளர்களுக்கும் பெரியம்மை தடுப்பூசி போட்டபிறகும் ஈரலழற்சி அறிகுறிகள் உருவாகியுள்ளன.[19] சரியாகத் தூய்மைப்படுத்தாத மாசுள்ள ஊசிகளையும் ஊசிக்குழல்களையும் பயன்படுத்தும்போதும் அதே ஊசிகளையோ ஊசிக்குழல்களையோ பலருக்குப் பயன்படுத்தும்போதும் ஊனீர் ஈரலழற்சி(இப்போது ஈரலழற்சி பி) அடிக்கடி உருவாதல் நோக்கப்பட்டுள்ளது.[20]

பவுல் பீசன் 1943 குருதிமாற்றத்தின்போது உருவாகும் மஞ்சட்காமாலையைப் பற்றி விவரிக்கும்போது ஈரலழற்சி பி நோய் கடத்தப்படுவதை உறுதிபடுத்தியுள்ளார். இதேபோல, 1942 இல் படைவீரர்களுக்கு மஞ்சட்காய்ச்சலுக்குத் தடுப்பூசி போட்டபோது மஞ்சட்காமாலை பரவியுள்ளது.[20]

ஈரலழற்சி ஏ நச்சுயிரிக்கும் ஈரலழற்சி பி நச்சுயிரிக்கும். இடையில் உள்ள வேறுபாட்டை 1947 வரை தீர்மானிக்கப்படாமலே இருந்துள்ளது. இவையிரண்டும் தனியாகப் பிரிக்கவல்ல முகமைகள் என்பது பல்வேறு ஆர்வலர்களின் முனைப்பான ஆய்வுகளுக்குப் பிறகே தெரியவந்தது.[20]

பிறகு, 1965 இல் “ஆத்திரேலிய காப்பு எதிர்ப்பொருள்” HBsAg கண்டறியப்பட்டது. இது ஈரலழற்சி பி நச்சுயிரி மேற்பரப்புக் காப்புப்பொருள் என அறியப்பட்டது. இதுவே முதன்முதலில் நச்சுயிரி ஈரலழற்சித் தொற்றால் விளைந்த மஞ்சட்காமாலை நோயைப் புரிதலுக்கான முயற்சியாகும்.இந்தக் கண்டுபிடிப்பு நலவாழ்வுத் தொழில் வல்லுனருக்கு நோயாளிகளுக்குக் குருதியை ஏற்றுவதற்கு முன் எளிதாக ஈரலழற்சு பியைக் கண்டறிய வழிவகுத்தது.[20][19]

இன்று, ஏதாவதொரு ஈரலழற்சி பி ஊசியால் இந்த நச்சுயிரி எச்.பி.வி யால் வரும் தொற்றைத் தவிர்க்கலாம். கணிகவழித் HepB தொற்றூசிக்கு 1981 இல் உரிமம் வழங்கப்பட்டது. பின்னர் 1986 இல் மீள்சேர்மான HepBனஊசிக்கு மீள உரிமம் தரப்பட்டது. Engerix B ஊசிக்கு 1989 இலும் Heplisav-B ஊசிக்கு 2017 இலும் ஒப்புதல் வழங்கப்பட்டது.[21][22][19] அனைத்துமே எச்.பி.வி நோய்க்கு எதிரகப் பாதுகாப்பு தருகின்றன.

ஐக்கிய அமெரிக்காவில் ஈரலழற்சி பி

[தொகு]

ஈரலழற்சி பி தொற்று வீதம் ஆ௶அவரிலும் மகளிரிலும் சமமாகவே அமைகிறது. ஈரலழற்சி பி ஆசிய அமெரிக்கர், பசிபிக் தீவு அமெரிக்கர், ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆகியவரிடத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பேறலவில் தொற்றுகிறது. இவர்கலில் 25% மக்களுக்கு நோயாய்வு மேற்கொள்ளப்படுகிறது.[23] எச்.பி.வி தொற்று, குருதிச் சிரைவழிப் போதைப்பொருள் ஏற்ரிக் கொள்வோர், பலர்கலவி பழக்கம் உள்ளோர், ஓரினப் பாலுறவு கொள்வோர் ஆகிய குழுக்களில் வேகமாகப் பரவுகிறது. [24]

உலக அளவில் ஓங்கலான ஈரலழற்சி பி

[தொகு]

ஈரலழற்சி பி நச்சுயிரி ஈரலழற்சி நோயை உருவாக்குகிறது. ஈரலழற்சி நோயே உலகில் பெரும்பாலான ஈரல் புற்று நோய்க்குக் காரணமாகிறது. ஈரலழற்சி பி நச்சுயிரி உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பெரும்பாலாக அமைகிறது. இது அகத்தொக உள்ள நாடுகளில் மிகவும் ஓங்கலாக உள்ளது. ஈரலழற்சி பி நச்சுயிரி ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியா ஆகிய நடுகளைல் பரவலான அகத்தொற்றாக அமைகிறது.[25]

தோராயமாக, இரண்டு பில்லியன் மக்களுக்கு, அதாவது மூன்றில் ஒருவருக்கு எச்.பி.வி தொற்று பரவியுள்ளது. ஒவ்வோராண்டும் 1.5 மில்லியன் மக்கள் புதுவதாக தொற்றால் தாக்கமுறுகின்றனர். ஏறத்தாழ, 10% மக்கள் நோயறியப்படாமலே உள்ளனர். ஒவ்வோராண்டும் 820,000 பேர் எச்.பி.வி நோயாலும் அது சார்ந்த சிக்கல்களாலும் இறக்கின்றனர்.[26]

கருவில் அமையும் எச்.பி.வி தொற்றின் பரவல் பிறக்கும் குழந்தைகளின் இளமைப் பருவத்தில் நாட்பட்ட ஈரலழற்சி பி நோய் ஏற்படும் உயரிடர் வாய்ப்பு உள்ளது. ஏறக்குறைய 90% தொற்றுள்ள குழந்தைகள் நாட்பட்ட தொற்றுள்ளவராக மாறுகின்றனர். ஒருமுறை தொற்றுக்கு ஆட்பட்டவரில் 2%-6% பேர் மட்டுமே முதிரகவையில் நாட்பட்ட தொற்றால் பீடிக்கப்படுகின்றனர். [27]

உலகளாவிய நாட்பட்ட எச்.வி.பி தொற்றுள்ள 350 மில்லியன் தனியர்களில், 50% அளவுக்கும் அதற்கு மேலும் அமைந்த தொற்றுகளில் பெருபாலானவை மகப்பேறுவழி அல்லது சிறுவர்களில் ஏற்படுவனவாக மதிப்பிடப்பட்டுள்ளன. இது அகத்தொற்றாக அமையும் நாடுகளில், HBeAg புரதம் உள்ள கருவுற்ற மகளிரில் அமைந்து எச்.பி.வி தொற்றைக் குழந்தைகளுக்குக் குத்துநிலையில் கடத்தும் வாய்ப்பு உயர்வீதத்தில் அமைதல் பேரளவு நலவாழ்வு இடரை உருவாக்குகிறது. இது அகத்தொற்றாக அமையும் , நோய் பரவல் உயரிடர் வாய்ப்புள்ள குழுக்களில் மட்டும் வரம்புறுவதில்லை. மாறாக, இத்தொற்று வேறு வழித்தடங்களில் பெரும்பாலும் சிறுவர்களில் கடத்தப்படுகிறது.[28]

மேலைநாடுகளில் ஈரலழற்சி பி நச்சுயிரித் தொற்று உடலுறவாலோ அல்லது போதைப்பொருள் ஏற்றும் ஊசிபகிர்வாலோ பெரும்பாலும் பரவுகிறது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசிபகிர்வாலேயே பொஎஉவீதத் தொற்று பரவுகிறது.[24] ஆண்பால் ஒரினப் புணர்ச்சியாளர்களிலும் கூட பெருவீதமான தொற்று பரவுகிறது. பலரோடு பாலுறவு வைத்துக்கொள்ளும் போதும் தொற்று பரவும் வாய்ப்பு கூடும் வாய்ப்புள்ளது.

பரவல்

[தொகு]

தாயில் இருந்து சேய்க்கு மகப்பேற்றின்போது ஈரலழற்சி பி நச்சுயிரி குத்துநிலையாகக் கடத்தப்பட்டுப் பரவுகிறது. ஈரலழற்சி பி நச்சுயிரி குருதி அல்லது உடல் பாய்மங்கள் வழியாக தொற்றுள்ள இணையருடன் உடலுறவு கொள்ளும்போது ஏற்படுகிறது.தொற்றுள்ளவருக்குப் போட்ட ஊசியைப் பகிர்ந்தாலோ அல்லது கூரான பொருட்களால் அடிபட்டாலோ இத்த்ற்று பரவுகிறது. தடுப்பூசிகள் போடும் ஊசிகளை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பயன்படுத்தாவிட்டாலோ சரியாக அழுத்த அனற்கலத்தில் இட்டு தொற்றுநீக்கம் செய்யப்படாவிட்டாலோ கூட தோற்று பரவ வாய்ப்புள்ளது. பச்சைக் குத்தும் ஊசிகளாலும் உடல் துளைக்கும் கருவிகளாலும் இத்தொற்று பரவுகிறது.[25]

மேலும், உடல் உறுத்தும் காதுத் தோடுகளும் வேறு உடல் துளைக்கும் நகைகளும் தொற்றைப் பரவச் செய்யும்..[26] இது HBeAg புரதம் உள்ள நோயாளிகளுக்கு குருதி வடிப்புக்குத் தரும் குருதி வழியாகவும் கூட பரவுகிறது. ஏனெனில், குருதிவடிப்புக் குருதி ஒரே நேரத்தில் பலருக்கு அளிக்கும்போது நோயாளிக் குருதியில் மாசுதொற்ற வாய்ப்புல்ளது. குருதிவடிப்புக் குருதி வழியான தொற்று அமெரிக்காவில் 1% ஆக உள்ளது. நலவாழ்வுப் பணியாளருக்கும் தொற்று பரவும் குட்டுதலான இடர் நேரலாம்.[29][30] ஈரலழற்சி தடுப்பூசி போட்டு எச்.வி.பி தொற்று கடத்தலைக் குறைக்கலாம். இத்தொற்று அகத்தொற்றாக அமையும் பகுதிகளில், குறிப்பாக ஊரகப்பகுதிகளில், மருத்துவமனைகள் அரிதாகவுள்ள தடுப்பூசிகள் அள்வாகவே பயன்படுத்தப்படுகின்றன.


ஈரலழற்சி பி நச்சுயிரி தொற்று புறப்பரப்பில் ஏழு நாட்களுக்கு நீடிக்கிறது. இது பாலூட்டுதல், உண்கலம் பகிர்தல், அணைத்தல், முத்தமிடல், கைக்குலுக்குதல், இறுமுல், தும்முதல் போன்ற நிகழ்வுகளால் பரவுவதில்லை. இத்தொற்று மாசுற்ற உணவாலோ நீராலோ பரவாது. தொற்றுள்ளவரோடு வாழ்ந்தால் இந்நச்சுயிரித் தொற்று பரவும் வாய்ப்பு கூடுகிறது.[19]

ஈரலழற்சி பி நச்சுயிரியுடன் பிற தொற்றுகள் இணைதல்

[தொகு]

ஈரலழற்சி பி நச்சுயிரியோடு இணைதொற்றாக, பலவகை நச்சுயிரிகள் தொற்றலாம். ஈரலழற்சி சி, ஈரலழற்சி டி, ஈரலழற்சி பியின் துணைத்தொற்றுகள், மாந்த ஏமவிழப்பு நச்சுயியிரி ஆகியன ஈரலழற்சி பி நச்சுயிரியுடன் இணைத்தொற்றாக தொற்றுகின்றன.

எச்.பி.வி, எச்.சி.வி இரண்டும் ஒரே முறைமையில் கடத்தப்படுவதால் இவற்றின் இணைத்தொற்றுகளுக்கு வாய்ப்புள்ளது. இவற்றின் இணைத்தொற்றுகள் ஊசிவழி போதைப்பொருள் ஏற்றிக் கொள்ளுபவர், வடிப்பற்ற குருதிப் பொருட்கள் அல்லது அழுக்கான ஊசிகள் அல்லது தொற்றுநீக்காத மருத்துவக் கருவிகள் பயன்படுத்துபவர் ஆகியோருக்கு தொற்றுகிறது. இவற்றின் இணைத்தொற்றுகள் கடும் ஈரல் நோயையும் முதன்மை ஈரல் புற்று உயரும் இடரும் ஏற்படும்.இவை இரண்டில் பி வக ஓங்கலாகி, ஏ வகையைக் கண்டறியவொட்டாமல் செய்வதால் உடலில் பி வகை உள்ளதே கண்டறியப்படாமல் போக வாய்ப்பு ஏற்படலாம்.[31]அண்மைய புள்ளிவிவரங்கள் எச்.ஐ.வி நோயுள்ள10% பேருக்கு எச்.வி.பி உள்ளமையைத் தெரிவித்துள்ளன. மேலும், இது தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு 20% ஆக உயர்கிறது. எச்.ஐ.வி நோயுடன் எச்.பி.வி தொற்று உள்ளவர்களே பேரளவில் மருத்துவமனைகளில் சேர்கின்றனர்; உடன் தரப்படும் நச்சுயிரித் தடுப்பு மருத்தவத்தால் இறந்தும் போகின்றனர்.எச்.ஐ.வி., எச்.பி.வி ஆகிய நச்சுயிரிகளின் இணைத்தொற்றுள்ளவர்களே நாட்பட்ட ஈரலழற்சி பி நோய் ஏற்பட ஆறுமடங்கு வாய்ப்புள்ளவர்காக அமைகின்றனர். இந்நிலை இணைத்தொற்றுள்ளவர்களில் குறைவான CD4+ T உயிர்க்கல எண்ணிக்கை அமைவதாலேயரேற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.[32]

வகைப்பாடு

[தொகு]

ஈரலழற்சி பி நச்சுயிரி 11 இனங்கள் அமைந்த ஆர்த்தோகெபடுனா நச்சுயிரிப் பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது. இந்தப் பேரினம் கெபட்னாவிரிடே குடும்பத்தின் ஒரு பகுதியாக அமைகிறது.இந்தக் குடும்பத்தில் அவிகெபடுனா நச்சுயிரி (Avihepadnavirus) தேமல்கெபடுனா நச்சுயிரி (Herpetohepadnavirus), உயர்கெபடுனா நச்சுயிரி(Metahepadnavirus), இணைகெபடுனா நச்சுயிரி (Parahepadnavirus) ஆகிய நான்கு பேரினங்களும் உள்ளன. ஈரலழற்சி பி நச்சுயிரி யில் தரை அணில் ஈரலழற்சி நச்சுயிரி (Ground squirrel hepatitis virus), உட்சக் ஈரலழற்சி நச்சுயிரி (Woodchuck hepatitis virus), ஊல்லிக் குரங்கு ஈரலழற்சி பி நச்சுயிரி (Woolly monkey hepatitis B virus) எனும் மூன்று இனங்களும் உள்ளன. இந்தக் குடும்பம் நச்சுயிரி சார்ந்த புளூபேர் வைரேல்சு(Blubervirales) எனும் வரிசையில் அமைந்த ஒரே குடும்பமாகும்.[33] ஈரலழற்சி பி போன்ற நச்சுயிரிகள் அனைத்து பழைய உலக வாலில்லாக் குரங்குகளிலும் (உர்ராங்குட்டான்கள், கிப்பன்கள், கொரில்லாக்கள், சிம்பன்சிக்கள்) புத்துலக்க கம்பளிக் குரங்கு போன்றவற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்பு உயர் இரத்த அழுத்த விலங்கினங்களில் இந்த நச்சுயிரிக்கான தொல்தொடக்கம் இருப்பதை அறிவிக்கிறது.

இந்த நச்சுயிரி அதன் உறைப் புரதங்களில் இருக்கின்ற எதிர்ப்பொருள் புறவிடத்திகளைப் பொறுத்து நான்கு முதன்மை குருதி ஊனீர் வகைமைகளாக (adr, adw, ayr, ayw) பிரிக்கப்படுகிறது. இந்த ஊனீர் வகைமைகள் பொதுத் தீர்மானிப்பி (a), தம்முள் இணைவிலக்கமுள்ள தீர்மானிப்பி இணைகள்(d/y and w/r) ஆகியவற்றைச் சார்ந்துள்ளன. மேலும் மரபுத்தொகுதியின் ஒட்டுமொத்த நியூக்ளியோட்டைடு வரிசைமுறை வேறுபாடுகளைச் சார்ந்து இந்த நச்சுயிரியின் கறைகள் எட்டு மரபியல் வகைமைகளாகவும் (A-H) மேலும், 40 உள்மரபியல் வகைமைகளாகவும் பிரிக்கப்படுகிறது. [34] [35][36]

மரபியல் வகைமைகள் தெளிவான புவியியல் பரவலைக் கொண்டுள்ளன. இது நச்சுயிரியின் படிமலர்ச்சியையும் கடத்தலையும் அறிய பயன்படுத்தப்படுகிறது. மரபியல் வகைமைகளுக்கு இடையில் உள்ள வேருபாடுகள் நோயின் கடுமை, வழித்தடம், ஏறபட வாய்ப்புள்ள சிக்கல்கள், கிடைக்கும் மருத்துவ முறைகளுக்கான துலங்கல்(எதிர்வினை) ஆகியவர்றை மாற்றுகின்றன Hootone Remedies பரணிடப்பட்டது 2023-01-17 at the வந்தவழி இயந்திரம்.[35][36] ஊனீர் வகைமைகளுக் மரபியல் வகைமைகளும் கட்டாயமாக ஒத்தமைய வேண்டும் என்பதில்லை.

மரபியல் வகைமை டி யில் 10 உள்மரபியல் வகைமைகள் அமைகின்றன.[37][34]

வகைபடுத்தாத இனங்கள்

[தொகு]

வவ்வால்களில் இருந்து ஈரலழற்சி பி யின் இன்னமும் வகைபடுத்தாத பல இணங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.[38]

படிமலர்ச்சி

[தொகு]

மற்ற நச்சுயிரிகளைப் போலவே எச்.பி.வி நச்சுயிரியின் தொடக்கநிலைப் படிமலர்ச்சியை நிறுவுதல் மிக அரிதாகவே உள்ளது. முதுகென்பிகளில் அமைந்துள்ள அகல்விரிவான கெபடுனா நச்சுயிரிகளின் இனங்காணல் மிகநீண்ட இணைப்படிமலர்ச்சியைக் காட்டுகிறது. பலவகைப் பறவை இனங்கள் பகிரும் அக கெபடுனாவிரிடே நச்சுயிரிக் கூறு, இது பறவைகளில் 70 மில்லியன் ஆண்டுகளாகவே நிலவுதலை இனங்காட்டுகிறது.[39] பாலூட்டிகளில் இதையொத்த சான்றுகள் கிடைக்காவிட்டாலும்மார்த்தோகெபடுனா நச்சுயிரிகள் அவிகெபடுனா நச்சுயிரியின் உடன்பிறப்புக் கவைப்பிரிவாக அமைதல், பனிக்குட உறை மூதாதைகளில் நச்சுயிரி நிலவியதாகவும் விரிநிலை படிமலர்ச்சிக்குப் பிறகு பாலூட்டிகளோடும் பறவைகளோடும் இது இணைப்படிமலர்ச்சியில் தொடர்ந்ததையும் தெரிவிக்கிறது(>300M ஆண்டுகளுக்கு முன்பே). புதிய உலக வவ்வால் கெபடுனா நச்சுயிரிகளே முதன்மிகளில் கெபடுனா நச்சுயிரி தோன்றியதைக் காட்டுகிறது எனும் முன்மொழிவு கூறப்படுகிறது.[40] அவிகெபடுனா நச்சுயிரியில் X புரதம் இல்லையெனினும், வாத்து கெபடுனா நச்சுயிரி மரபுத்தொகுதியில் எஞ்சியுள்ள X படிப்புச் சட்டகம் நிலவுகிறது.[41] இந்த X புரதம் டி.என்.ஏ இனிமநொதியில் இருந்து படிமலர்ந்திருக்கலாம்.

புறத்தோற்றவியல்

[தொகு]

கட்டமைப்பு

[தொகு]
ஈரலழற்சி பி நச்சுயிரி கட்டமைப்பு
எச்.பி.வி துகள், புறப்பரப்பு எதிர்ப்பொருளின் எளிய வரைபடம்

ஈரலழற்சி பி நச்சுயிரி (எச்.பி.வி) கெபடுனாவைரசு குடும்பத்தின் (Hepadnavirus family) உறுப்பாகும்.[42] நச்சுயிரித் துகள் டேன் துகள் எனவும் வழங்குகிறது[43]முதிர்நச்சுயிரி புறக் கொழும உறையையும் புரதத்தாலான இருபதின்பட்டக உட்கருவன்நச்சுயிரிக் கூடு அகட்டையும் கொண்டுள்ளது. உட்கருவன்நச்சுயிரிக் கூடு நச்சுயிரி டி.என்.ஏ வையும் டி.என்.ஏ பலபடியாக்கநொதியையும் கொண்டுள்ளது. இந்த பலபடியாக்கநொதி மீளியக்க நச்சுயிரிகளைப் போல மீள்படியெடுப்பு செயல்பாட்டைப் பெற்றுள்ளது.[44] வெளிப்புற உறையில் பொதிநிலைப் புரதங்கள் அமைகின்றன. இந்தப் பொதிநிலைப் புரதங்கள் ஆட்படத்தகும் உயிர்க்களங்களில் ஒட்டி உள்நுழைவதில் ஈடுபடுகின்றன. இந்த நச்சுயிரி மிகமிகச் சிறிய உறையுள்ள விலங்கு ந்நச்சுயிரியாகும். நச்சுயிரியன் விட்டம் 42 மீநுண்மீட்டராகும். இதன் படல, கோள மாற்றுரு வடிவங்களும் உள்ளன; இவற்ரில் அகடேதும் அமையாது. இந்த நச்சுயிரித் துகள்கள் தொற்றுவதில்லை. இவற்றில் நச்சுயிரியனின் மேற்பரப்புப் பகுதியாக அமையும் எதிர்ப்பொருளகளமுள்ள கொழும, புரதவடிவங்கள் உள்ளன. இது மேற்பரப்பு எதிர்ப்பொருள்கள் (HBsAg) எனப்படும். இது நச்சுயிரியின் வாழ்க்கை வட்டத்தில் கூடுதலாக உருவாகின்றன.[45]

ஆக்கக்கூறுகள்

[தொகு]

ஈரலழற்சி பி நச்சுயிரி பின்வரும் உட்கூறுகளைக் கொண்டுள்ளது:

  • HBsAg ( ஈரலழற்சி பி மேற்பரப்பு எதிர்ப்பொருள் தான் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஈரலழற்சி பி நச்சுயிரிப் புரதமாகும்.[46] இது சிறுநிலை( எசு), இடைநிலை(எம்), பெருநிலை(எல்) என மூன்று உருவளவுகளில் புரதங்களைக்கொண்டுள்ளது.[47]
  • HBcAg (ஈரலழற்சி பி அகட்டு எதிர்ப்பொருள்) என்பது ஈரலழற்சி பி நச்சுயிரியின் முதன்மைக் கட்டமைப்பு புரதமாகும் இது [icosahedral]] வடிவ உட்கருவனகட்டுப் புரதமாகும். இது நச்சுயிரியின் படிப்பெருக்க நேரச் செயல்பாட்லைப் பெற்ருள்ளதாகும்.[48]எச்.பி.வி யை ஆய்வக முறையில் நீக்கத்துக்கு HBcAg புரதம் வழிவகுக்கிறது; ஆனால், நச்சுயிரி நீக்கத்துக்குப் பங்களிக்க, HBcAg புரதம் அகட்டுரு வடிவத்தில் இருக்கவேண்டுமா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.[49]
  • ஈரலழற்சி பி நச்சுயிரி டி.என்.ஏ பலபடியாக்க நொதி உட்கருவன் அகட்டுருவில் முந்து மரபுத்தொகுதி ஆர்.என்.ஏ (pgRNA) உடன் அமைந்துள்ளது. பின்னது (pgRNA) மீள்படியாக்க நிகழ்வில் பங்கேற்று எதிர்மறை டி.என்.ஏ புரியை உருவாக்குகிறது. இதே நேரத்தில், பலபடியாக்கநொதியால் பெரும்பாலான ஆர்.என்.ஏ அச்சுருக்கள் புறந்தள்ளப்படுகின்றன. இது நேர்முக டி.என்.ஏ புரியைத் தொகுக்கிறது. பலபடியாக்க்கநொதி, எதிர்மறை டி.என்.ஏ புரியுடன் இணை இணைதிறப் பிணைப்பில் பிணைந்து வெளித்தள்ளப்படுகிறது.[50][51] புதிய உயிர்க்கலத்தை நச்சுயிரிப் புரதம் தொற்றியதும் பலபடியாக்கநொதியும் புறந்தள்ளப்படுகிறது.
  • HBeAg ( ஈரலழற்சி பி உறை எதிர்ப்பொருள்) icosahedra வடிவ உட்கருவன் அகட்டுருவுக்கும் கொழும உறைக்கும் இடையில் அமைந்திருக்கிறது; ஆனால், இது துகள் வடிவஅற்றதாக சுரந்து ஊனீரில் திரள்கிறது. HBeAg, HBcAg ஆகிய இருபுரதங்களும் ஒத்த படிப்பு சட்டகப் பாங்கில் உருவாகின்றன.[52]
  • HBx துகள் மிகவும் சிறியது;[53]154 அமினோ அமில நீளமுள்ளது; கட்டமைப்பற்றது. இதமெச்.பி.வி சார்ந்த ஈரல் நோயிலும் HepG2 உயிர்க்கலங்களில் HBV படிப்பெருக்கத்திலும் முதன்மைப் பாத்திரம் வகிக்கிறது. HBx வெளிப்பாடு பல செயல்பாடுகளோடு தொடர்பு கொண்டுள்ளது. என்றாலும், இச்செயல்பாடுகளின் மூலக்கூற்று இயங்கமைப்புக்கள் எவையும் அறியப்படவில்லை.[54] இந்தப் புரதம், உயிர்க்கலக் குறிகைத் தடவழிகள், நச்சுயிரித் தொற்று எனப் பலவகைச் செயல்களை ஊக்குவிக்கிறது.[55]

ஈரலழற்சி டி நச்சுயிரி வீறுறுமை பெறுவதற்கு எச்.பி.வி உறைத் துகள்கள் தேவைப்படுகின்றன.[56]

மரபுத்தொகுதி

[தொகு]

எச்.பி.வி மரபுத்தொகுதி கட்டமைப்பு. மரபன்கள் ஒன்றன்மேல் ஒன்று படிதல்.

அளவு

[தொகு]

எச்.பி.வி மரபுத்தொகுதி வட்ட டி.என்.ஏ வடிவத்தில் உள்ளது. ஆனால், இந்த டி.என்.ஏ வழக்கமான முழுமையான இரட்டைப் புரி டி.என்.ஏ அல்ல. இதன் முழுநீளப் புரியின் ஒருமுனையில் நச்சுயிரி டி.என்.ஏ பலபடியாக்க நொதி இணைந்துள்ளது. இதன் மரபுத்தொகுதியின் முழுநீளப்புரி 3020–3320 உட்கருவன்கள் அளவு நீண்டதாகவும் குறுநீளப்புரி 1700–2800 உட்கருவன்கள் அளவு நீண்டதாகவும் அமைகிறது.[57]

குறிமுறையேற்றம்

[தொகு]

எதிர்மறை (குறிமுறையேற்றமற்ற) புரி எம் ஆர்.என்.ஏ வின் மிகைநிரப்பாக அமைகிறது. உயிர்க்கலத்தில் தொற்று ஏற்பட்டதும் நச்சுயிரி டி.என்.ஏ கருக்கலத்தை அடைகிறது. பகுதி இரட்டைப்புரி டி.என்.ஏ முழு இரட்டைப்புரி டி.என்.ஏ நேர்முகப் புரியாக, கலப் பலபடியாக்க நொதியால் முழுமையுறுகிறது (நச்சுயிரி டி.என்.ஏ பிந்தைய கட்டத்தில் பயன்படுத்தப்படும்). இந்நிலையில் நச்சுயிரிப் பலபடியாக்க புரதம் (P) எதிர்மறைப்புரியில் இருந்தும் குறுவரிசைமுறை ஆர்,என்.ஏ நேர்முகப்புரியில் இருந்தும் நீக்கப்படுகின்றன. குறிமுறையேற்றமற்ற அடிகள் எதிர்மறைப்புரியின் முனைகளில் இருந்து நீக்கப்பட்டதால் முனைகள் மீள இணைந்துவிடுகின்றன.

இணை இணைதிற நிரப்பு வட்ட டி.ன்.ஏ அச்சுரு வழியாக, கலக்கருவில் உயிர்க்கல ஆர்.என்.ஏ பலபடியாக்கநொதியால் நச்சுயிரி மரபன்கள் படியெடுக்கப்படுகின்றன. மேம்படுத்தி-1, மேம்படுத்தி-2 எனும் இரண்டு மேம்படுத்திகள் எச்.பி.வி மரபுத்தொகுதியில் அமைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. ஈரல்கலங்களில் இந்த இரண்டு மேம்படுத்திகளும் செயல்வேகம் மிக்கனவாக உள்ளன. இவை இரண்டும் இணைந்து முழு நச்சுயிரி படியெடுப்புகளின் கோவையை முடுக்கி ஒழுங்கு செய்கின்றன.[58][59][60]

குறிமுறையேற்றக்கூடிய C, P, S, X எனும் நான்கு மரபன்கள் மரபுத்தொகுதியில் உள்ளன. அகட்டுப் புரதம் C (HBcAg) மரபனால் குறிமுறையேற்றப்படுகிறது. இந்தத் தொடங்குவகைக் குறிமுறையனுக்கு முன்னம் மேல் ஓடைச் சட்டக AUG தொடங்குவகைக் குறிமுறைய்ன அமைகிறது. பின்னது முந்து அகட்டுப் புரதத்தை உருவாக்குகிறது. முந்து அகட்டுப் புரத புரோட்டியோலிட்டிக் செயற்பாட்டால் HBeAg உருவாக்கப்படுகிறது. டி.என்.ஏ பலபடியாக்க நொதி P வகை மரபனால் குறிமுறையேற்றப்படுகிறது. S வகை மரபன் மேற்பரப்பு எதிர்ப்பொருள் (HBsAg)யைக் குறிமுறையேற்றுகிறது. இந்த HBsAg மரபன் ஒருநீண்ட, திறந்த வாசிப்புச் சட்டகமாகும். இந்தச் சட்டகம் மூன்று உட்சட்டக தொடங்குவகை (ATG) குறிமுறையன்களைக் கொண்டுள்ளது. இம்மூன்றும் மரபனை pre-S1, pre-S2, and S எனும் முப்பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இந்தப் பன்மைத் தொடங்குவகைக் குறிமுறையன்கள் பெரிய, இடைநிலை, சிறிய (pre-S1 + pre-S2 + S, pre-S2 + S1 அல்லது S) எனும் மூவேறு உருவளவுள்ள பெப்டைடுகளை உருவாக்குகின்றன.[61] X வகை மர்பனால் குறிமுறையேர்றப்படும் புரதத்தின் செயல்பாடு இதுவரை முழுமையாக உணரப்படவில்லை;[62] ஆனால் இது படியெடுப்புப் பெயர்ப்பை முனைவுறுத்தும் செயலூக்கியாக செயல்படுவதைச் சில சான்றுகள் காட்டுகின்றன. Interestingly ஒரு 40 kDa X-அகட்டுப் பிணைப்புப் புரதம் ஒரு நீண்ட நச்சுயிரி  3.9-kb படியால் குறிமுறையேர்ரப்படுகிறது. ஆனால், இதன் செயல்பாடு இதுவரை விளங்கவில்லை.[63] 3.9 kb ஆர்.என். ஏ(RNA) வின் தொகுப்பு X மரபன் ஊக்குவிப்பு மண்டலத்தைத் தொடங்கி வைக்கிறது; இந்தப் படியெடுப்பு இரண்டாம் தடவைப் படியெடுப்புக்குப் பிறகு தான் பாலி அடெனைலேட்டாக்கம் செய்யப்படுகிறது. இதொத்த நடத்தையையே மற்ற நீண்ட pregenomic/pre-core (pg/pc)டஆர்.என்.ஏ இனங்களும் பகிர்கின்றன. இவ்வாறு, எஅச்சுயிரிப் படியெடுப்பு இயங்முறை, முதல் படியெடுப்பு வட்டத்தில் பாலி(A) குறிகையைப் புறந்தள்ளி விடவேண்டும்.

பல குறிமுறையேற்றமற்ற ஆர்.என்.ஏ கூறுகள் எச்.பி.வி மரபுத்தொகுதியில் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுள் Hepatitis B virus PRE alpha, Hepatitis B virus PRE beta, Hepatitis B virus RNA encapsidation signal epsilon ஆகியன அடங்கும்.[64][65]

மரபியல் வகைமைகள்

[தொகு]

மரபியல் வகைமைகள் குறைந்த அளவில் 8% வரிசைமுறைகளில் வேறுபடுவதோடு தெளிவான புவிப்பரவல்களையும் பெற்றுள்ளன. மேலும் மானுடவியல் வரலாற்றோடும் பொருந்தி அமைகின்றன. மரபியல் வகைமைகளுக்குள் உள்வகைமைகளும் அமைகின்றன: இந்த உள்வகைமைகள் மரபுத்தொகுதிக்குள் 4–8% அளவுக்கு வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

A முதல் H வரையிலான எட்டு மரபியல் வகைமைகள் இருக்கின்றன.[35] வாய்ப்புள்ள புதிய "I" மரபியல் வகைமையும் விவரிக்கப்பட்டுள்ளது[66] ஆனால், இது பொதுக்கருத்தேற்பைப் பெறவில்லை.[67] மேலும் இரு மரபியல் வகைமைகளும் கண்டறியப்பட்டுள்ளன.[68] நடப்பில் 2014 பட்டியலில் A முதல் J வரை மரபியல் வகைமைகள் அமைந்துள்ளன. இவற்றின் பல உள்வகைமைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மரபணு அமைப்புகளுக்குள் 24 உபவகைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இவை 4-8% மரபுத்தொகுதி மூலமாக வேறுபடுத்தப்படுகிறது.

தனித்த மரபியல் வகைமைகள்

வகைமை F மற்ற மரபியல் வகைமைகளோடு ஒப்பிடும்போது 14% அளவுக்கு விரிந்த வேறுபாட்டைக் கொண்டு மிக விரிந்த வேறுபாடுள்ளதாக அமைகிறது. வகைமை A ஐரோப்பா, ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் உட்பட்ட தென்-கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் பரவியிருக்கிறது. வகைமை B, C ஆசியாவில் பேரளவில் பரவி இருக்கிறது; வகைமை D மத்தியதரைப் பகுதிகளான மத்திய கிழக்கு, இந்தியா பகுதிகளில் பொதுவாகப் பரவி இருக்கிறது. வகைமை E உட்-சகாரா ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது. வகைமை F அல்லது H மத்திய, தென் அமெரிக்காவில் பரவி இருக்கிறது. வகைமை G பிரான்சு, ஜெர்மனி நாடுகளில் காணப்படுகின்றது. A, D, F ஆகிய மரபியல் வகைமைகள் பிரேசிலில் பேரளவில் பரவி இருக்கின்றன. மேலும் அமெரிக்க ஒன்றியத்தில் இனத்தைப் பொறுத்து அனைத்து மரபியல் வகைமைகளும் இருக்கின்றன. வகைமைகள் E, F முறையே ஆப்பிரிக்க, புத்துலகத் தாயக மக்களில் தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. வகைமை A இரு உள்வகைமைகளைக் கொண்டுள்ளது: Aa (A1) வகைமை ஆப்பிரிக்கா/ஆசியா, பிலிப்பைன்சின்சு பகுதிகளிலும் Ae (A2) வகைமை ஐரோப்பா/ ஐக்கிய அமெரிக்காவிலும் பரவியுள்ளன. வகைமை B, Bj/B1ஆக யப்பானில் Bj/B1ஆகவும் Ba/B2 ஆக ஆசியாவில் Ba/B2 ஆகவும் மாறுபட்ட இரண்டு புவியியல் பரவலைக் கொண்டுள்ளது. வகைமை Ba, மேலும் நான்கு உட்கிளைகளாகப் (B2 - B4) பிரிகிறது.

வகைமை C இல், தென்-கிழக்கு ஆசியாவில் Cs (C1) ஆகவும் கிழக்கு ஆசியாவில் Ce (C2) ஆகவும் இரண்டு புவியியல் உட்பிரிவுகள் அமைகின்றன. C உட்பிரிவுகள் ஐந்து உட்கிளைகளாகப் (C1 - C5) பிரிகின்றன. ஆறாவது உட்கிளை (C6) பிலிப்பைன்சில் பரவியுள்ளது. ஆனால் தற்போது ஒரேயொரு பிரிவில் மட்டுமே.[69] வகை C1 வியட்நாம், மியான்மர், தாய்லாந்து நாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது; வகைமை C2 ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளுடனும், வகை C3 நியூ கலடோனியா, பாலினேசியா ஆகிய நாடுகளுடனும், C4 ஆஸ்திரேலியா]]வுடனும் C5 பிலிப்பைன்ஸ் உடனும் தொடர்புடையதாக இருக்கின்றன. மேலுமொரு உட்பிரிவு பாப்புவா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.[70]

வகைமை D, 7 உட்பிரிவுகளாகப் (D1 - D7) பிரிகின்றது.

வகைமை F, 4 உட்பிரிவுகளாகப் (F1 - F4) பிரிகின்றது. F1 ஆனது மேலும் 1a மற்றும் 1b ஆகிய உட்பிரிவுகளாகப் பிரிந்துடுள்ளது. வெனுசுலாவில் F1, F2, F3 ஆகிய உட்பிரிவுகள் கிழக்கு, மேற்கு அமெரிந்தியாவில் காணப்படுகின்றன. தென் அமெரிந்தியர்களுக்கு இடையில் F3 மட்டுமே கண்டறியப்பட்டது. Ia, III மற்றும் IV உட்பிரிவுகள் புவியியல் பரவலை முறையே மத்திய அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவின் வட, தென் பகுதிகளிலும் பரவிள்ளன. அதே சமயம் Ib மற்றும் II உட்கிளைகள் முறையே வடக்கு, தென் அமெரிக்கா தவிர்த்து அனைத்து தாயக அமெரிக்கர்களிலும் வட அமெரிக்காவிலும் காணப்படுகின்றன.

வாழ்க்கை வட்டம்

[தொகு]
ஈரலழற்சி பி நச்சுயிரி படிப்பெருக்கம்

ஈரலழற்சி பி நச்சுயிரியின்(தீநுண்மத்தின்) வாழ்க்கைச் சுழற்சி மிகவும் சிக்கலானது. ஈரலழற்சி பி நச்சுயிரி என்பது தன் படிப்பெருக்க நிகழ்வின் ஒரு பகுதியாக, மீள்திரும்பும் படியெடுப்பைப் பயன்படுத்துகிற மீள்திரும்பல்வகை நச்சுயிரிகளில் ஒன்றாகும்.

இணைப்பு
இந்த நச்சுயிரி(தீநுண்மம்) உயிர்க்கலப் புறப்பரப்பிலுள்ள ஏற்பியில் ஒட்டிக்கொண்டு, கிளாத்திரின், கவியோலின்-1 ஊடாக, உட்கலமிகை வழியாக உயிர்க்கலத்தினுள் நுழைகிறது.[71] எச்,பி.வி முதலில் கெப்பாரின் சல்பேட்டு புரோட்டியோகிளைக்கனுடன் ஒட்டிக்கொள்கிறது. பிறகு எச்.பி.வி எல் இன் முந்து S1 துண்டம் இறுக்கமாக உயிர்க்கல மேற்பரப்பு sodium taurocolate cotransporting polypeptide (NTCP) ஏற்பியில், SLC10A1மரபன்வழி குறிமுறைப்படுத்தல் ஊடாகப் பிணைகிறது.[72] NTCP குருதி ஈரல்கலப் படலத்தின் உட்குழியில் அமைந்துள்ளது. ஈரல்கலங்களில் NTCP இருப்பது, எச்.பி.வி தொற்றுக்கான இழையநிலைமையோடு உறவுப் பாலமாகிறது.[71]
ஊடுறுவல்
உட்கலமிகைக்குப் பிறகு, நச்சுயிரிப் படலம் ஓம்பிக்கலப் படலத்தோடு இயைந்து வெளியாகும் உட்கருக் கேப்சிடு கலக்கணிகத்தில் விடுவிக்கப்படுகிறது.[73]
உறைநீக்கம்
ஓம்பி நொதியால் பல்கிப்பெருகும் ஆர்.என்.ஏ வழி நச்சுரியியும் பல்கிப்பெருகுகிறது. இந்த நச்சுயிரி மரபுத்தொகுதி டி.என்.ஏ கலக்கருவுக்குச் செலுத்தப்படவேண்டும். இந்தக் கேப்சிடு கலக்கருப் புழைக்கு நுண்குழல்கள்வழியாகச் செலுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது. பகுதி இரட்டைப்புரி நச்சுயிரி டி.என்.ஏ விலிருந்து பிரிந்து இணையாதுள்ள அகட்டுப் புரதம் ஓம்பியின் பலபடியாக்க நொதியால் ஊடிணைதிற நிரம்புவட்ட முழு இரட்டைப்புரி டி.என்.ஏ வாக(cccDNA) மாறுகிறது. இந்த உருமாற்ற டி.என்.ஏ நான்கு நச்சுயிரி எம் ஆர்.என்.ஏக்களைப் மீள்படியெடுத்து உறைநீக்கும் அச்சுருவாகச் செயல்படுகிறது.
படிப்பெருக்கம்
நச்சுயிரி சார்ந்த மரபுத்தொகுதியைக் காட்டிலும் மிகப்பெரிய மரபுத்தொகுதியின் mRNA வைப் பயன்படுத்தி புதிய படிகளை உருவாக்கலாம். பின்னர், இப்படிகளைக் கேப்சிட் எனும் அகட்டுக்கருப் புரதத்தை உருவாக்குவதற்கும் RNA நச்சுயிரிஐச் சார்ந்த டி.என்.ஏ பலபடியாக்க நொதியை(பாலிமரேசுவை) உருவாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.
குழுமுதல்
இந்த நான்கு நச்சுயிரிப் பெயர்ப்புகளும் (படிகளும்) கூடுதலான செயல்முறைக்கு ஆட்பட்டு, அடுத்த கால்வழி முதிர்ந்த நச்சுயிரிப் புரதங்களை உருவாக்குவதைத் தொடர்கின்றன. பின்னர் மேலும் அதிகமான நகல்களை உருவாக்குகின்றன. பின்னர், இவை யிர்க்கலத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்றன அல்லது கலக்கருவுக்கு மீண்டு கலக்கருவில் மேலும் கூடுதலான படிகளை உருவாக்குகின்றன.[61][74]
விடுவிப்பு
நீண்ட mRNA கலக்கணிகத்துக்கே மீளச் செலுத்தப்படுகிறது. கலக்கணிகத்தில் நச்சுயிரியன் பி புரதம், எதிர்பெயர்ப்பு செயல்பாட்டால் டி.என்.ஏ வைத் தொகுக்கிறது.

பெயர்தல் முனைப்புற்ற மரபன்கள்

[தொகு]

எச்.பி.வி நச்சுயிரி, FAM46A மரபன்களைப் பெயர முனைப்புறுத்தும் திறமையைப் பெற்றுள்ளன.[75]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ryu W (2017). Molecular Virology of Human Pathogenic Viruses. Academic Press. pp. 247–260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-800838-6.
  2. Hunt R (2007-11-21). "Hepatitis viruses". University of Southern California, Department of Pathology and Microbiology. பார்க்கப்பட்ட நாள் 2008-03-13.
  3. "ICTV Report Hepadnaviridae".
  4. 4.0 4.1 "Association between hepatitis B virus and pancreatic cancer". Journal of Clinical Oncology 26 (28): 4557–62. October 2008. doi:10.1200/JCO.2008.17.3526. பப்மெட்:18824707. 
  5. Hu, J.; Protzer, U.; Siddiqui, A. (2019). "Revisiting Hepatitis B Virus: Challenges of Curative Therapies". Journal of Virology 93 (20). doi:10.1128/JVI.01032-19. பப்மெட்:31375584. 
  6. "Solution structure of stem-loop alpha of the hepatitis B virus post-transcriptional regulatory element". Nucleic Acids Research 36 (5): 1681–9. March 2008. doi:10.1093/nar/gkn006. பப்மெட்:18263618. 
  7. 7.0 7.1 "Epigenetic Regulation of Viral Biological Processes". Viruses 9 (11): 346. November 2017. doi:10.3390/v9110346. பப்மெட்:29149060. 
  8. 8.0 8.1 "Oxidative stress, a trigger of hepatitis C and B virus-induced liver carcinogenesis". Oncotarget 8 (3): 3895–3932. January 2017. doi:10.18632/oncotarget.13904. பப்மெட்:27965466. 
  9. 9.0 9.1 "'Liver let die': oxidative DNA damage and hepatotropic viruses". The Journal of General Virology 95 (Pt 5): 991–1004. May 2014. doi:10.1099/vir.0.059485-0. பப்மெட்:24496828. http://pure-oai.bham.ac.uk/ws/files/25853274/VIR_2013_059485v3_Higgs_tif.pdf. 
  10. "Occurrence, Biological Consequences, and Human Health Relevance of Oxidative Stress-Induced DNA Damage". Chemical Research in Toxicology 29 (12): 2008–2039. December 2016. doi:10.1021/acs.chemrestox.6b00265. பப்மெட்:27989142. 
  11. "Oxidatively induced DNA damage: mechanisms, repair and disease". Cancer Letters 327 (1–2): 26–47. December 2012. doi:10.1016/j.canlet.2012.01.016. பப்மெட்:22293091. 
  12. "Oxidative stress and epigenetic instability in human hepatocarcinogenesis". Digestive Diseases 31 (5–6): 447–53. 2013. doi:10.1159/000355243. பப்மெட்:24281019. 
  13. 13.0 13.1 "Genetics and epigenetics of liver cancer". New Biotechnology 30 (4): 381–4. May 2013. doi:10.1016/j.nbt.2013.01.007. பப்மெட்:23392071. 
  14. "Exploration of liver cancer genomes". Nature Reviews. Gastroenterology & Hepatology 11 (6): 340–9. June 2014. doi:10.1038/nrgastro.2014.6. பப்மெட்:24473361. 
  15. 15.0 15.1 "Hepatitis B virus X protein-induced aberrant epigenetic modifications contributing to human hepatocellular carcinoma pathogenesis". Molecular and Cellular Biology 33 (15): 2810–6. August 2013. doi:10.1128/MCB.00205-13. பப்மெட்:23716588. 
  16. 16.0 16.1 "Genome-wide identification of direct HBx genomic targets". BMC Genomics 18 (1): 184. February 2017. doi:10.1186/s12864-017-3561-5. பப்மெட்:28212627. 
  17. Liang, T. Jake (May 2009). "Hepatitis B: The virus and disease" (in en). Hepatology 49 (S5): S13–S21. doi:10.1002/hep.22881. பப்மெட்:19399811. பப்மெட் சென்ட்ரல்:2809016. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/hep.22881. 
  18. "VA.gov | Veterans Affairs". www.hepatitis.va.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  19. 19.0 19.1 19.2 19.3 19.4 19.5 "Pinkbook: Hepatitis B | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-22. பார்க்கப்பட்ட நாள் 2022-12-03.
  20. 20.0 20.1 20.2 20.3 Block, Timothy M.; Alter, Harvey J.; London, W. Thomas; Bray, Mike (2016-07-01). "A historical perspective on the discovery and elucidation of the hepatitis B virus" (in en). Antiviral Research 131: 109–123. doi:10.1016/j.antiviral.2016.04.012. பன்னாட்டுத் தர தொடர் எண்:0166-3542. https://www.sciencedirect.com/science/article/pii/S0166354216300687. 
  21. Research, Center for Biologics Evaluation and (2019-10-03). "ENGERIX-B" (in en). FDA. https://www.fda.gov/vaccines-blood-biologics/vaccines/engerix-b. 
  22. "Immunization Schedules for Heplisav-B Vaccine | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-06-08. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  23. "Hepatitis B Facts and Figures". www.hepb.org. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  24. 24.0 24.1 Piot, P.; Goilav, C.; Kegels, E. (1990-03-01). "Hepatitis B: transmission by sexual contact and needle sharing" (in en). Vaccine 8: S37–S40. doi:10.1016/0264-410X(90)90215-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0264-410X. https://www.sciencedirect.com/science/article/pii/0264410X90902158. 
  25. 25.0 25.1 "Hepatitis B | Disease Directory | Travelers' Health | CDC". wwwnc.cdc.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  26. 26.0 26.1 "Hepatitis B". www.who.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  27. "Safety Information for Hepatitis B Vaccines | Vaccine Safety | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-12-04.
  28. Edmunds, W. J.; Medley, G. F.; Nokes, D. J.; O'Callaghan, C. J.; Whittle, H. C.; Hall, A. J. (1996). "Epidemiological Patterns of Hepatitis B Virus (HBV) in Highly Endemic Areas". Epidemiology and Infection 117 (2): 313–325. பன்னாட்டுத் தர தொடர் எண்:0950-2688. https://www.jstor.org/stable/3864222. 
  29. Garthwaite, Elizabeth; Reddy, Veena; Douthwaite, Sam; Lines, Simon; Tyerman, Kay; Eccles, James (2019-10-28). "Clinical practice guideline management of blood borne viruses within the haemodialysis unit". BMC Nephrology 20 (1): 388. doi:10.1186/s12882-019-1529-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2369. பப்மெட்:31656166. பப்மெட் சென்ட்ரல்:6816193. https://doi.org/10.1186/s12882-019-1529-1. 
  30. Fabrizi, Fabrizio; Dixit, Vivek; Messa, Piergiorgio; Martin, Paul (January 2015). "Transmission of Hepatitis B Virus in Dialysis Units: A Systematic Review of Reports on Outbreaks" (in en). The International Journal of Artificial Organs 38 (1): 1–7. doi:10.5301/ijao.5000376. பன்னாட்டுத் தர தொடர் எண்:0391-3988. http://journals.sagepub.com/doi/10.5301/ijao.5000376. 
  31. "Hepatitis B Foundation: Hepatitis C and Hepatitis B Coinfection". www.hepb.org. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
  32. Thio, Chloe L. (May 2009). "Hepatitis B and human immunodeficiency virus coinfection" (in en). Hepatology 49 (S5): S138–S145. doi:10.1002/hep.22883. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/hep.22883. 
  33. Mason, W.S. (2008-07-08). "00.030. Hepadnaviridae - ICTVdB Index of Viruses". International Committee on Taxonomy of Viruses. பார்க்கப்பட்ட நாள் 2009-03-13. {{cite web}}: Cite has empty unknown parameters: |month=, |dateformat=, and |coauthors= (help)
  34. 34.0 34.1 "A novel hepatitis B virus subgenotype D10 circulating in Ethiopia". Journal of Viral Hepatitis 24 (2): 163–173. February 2017. doi:10.1111/jvh.12631. பப்மெட்:27808472. 
  35. 35.0 35.1 35.2 Kramvis A, Kew M, François G (2005). "Hepatitis B virus genotypes". Vaccine 23 (19): 2409–23. doi:10.1016/j.vaccine.2004.10.045. பப்மெட்:15752827. 
  36. 36.0 36.1 Magnius LO, Norder H (1995). "Subtypes, genotypes and molecular epidemiology of the hepatitis B virus as reflected by sequence variability of the S-gene". Intervirology 38 (1-2): 24–34. பப்மெட்:8666521. 
  37. "New HBV subgenotype D9, a novel D/C recombinant, identified in patients with chronic HBeAg-negative infection in Eastern India". Journal of Viral Hepatitis 20 (3): 209–18. March 2013. doi:10.1111/j.1365-2893.2012.01655.x. பப்மெட்:23383660. 
  38. "Bats carry pathogenic hepadnaviruses antigenically related to hepatitis B virus and capable of infecting human hepatocytes". Proceedings of the National Academy of Sciences of the United States of America 110 (40): 16151–6. October 2013. doi:10.1073/pnas.1308049110. பப்மெட்:24043818. Bibcode: 2013PNAS..11016151D. 
  39. Suh, Alexander; Brosius, Jürgen; Schmitz, Jürgen; Kriegs, Jan Ole (2013-04-30). "The genome of a Mesozoic paleovirus reveals the evolution of hepatitis B viruses" (in en). Nature Communications 4 (1): 1791. doi:10.1038/ncomms2798. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-1723. பப்மெட்:23653203. Bibcode: 2013NatCo...4.1791S. https://www.nature.com/articles/ncomms2798. 
  40. "Bat hepadnaviruses and the origins of primate hepatitis B viruses". Current Opinion in Virology 16: 86–94. February 2016. doi:10.1016/j.coviro.2016.01.015. பப்மெட்:26897577. 
  41. "A vestigial X open reading frame in duck hepatitis B virus". Intervirology 43 (3): 185–90. 2000. doi:10.1159/000025037. பப்மெட்:11044813. 
  42. Zuckerman AJ (1996). "Chapter 70: Hepatitis Viruses". In Baron S; et al. (eds.). Baron's Medical Microbiology (4th ed.). Univ of Texas Medical Branch. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9631172-1-2. பார்க்கப்பட்ட நாள் 11 April 2018.
  43. "WHO | Hepatitis B". www.who.int. Archived from the original on 2015-07-10. பார்க்கப்பட்ட நாள் 2015-07-12.
  44. "Molecular virology of hepatitis B virus". Seminars in Liver Disease 24 Suppl 1 (Suppl 1): 3–10. 2004. doi:10.1055/s-2004-828672. பப்மெட்:15192795. 
  45. "The biology of hepadnaviruses". The Journal of General Virology 67 (7): 1215–35. July 1986. doi:10.1099/0022-1317-67-7-1215. பப்மெட்:3014045. 
  46. "Hepatitis B surface antigen (HBsAg) levels in the natural history of hepatitis B virus (HBV)-infection: a European perspective". Journal of Hepatology 52 (4): 514–22. April 2010. doi:10.1016/j.jhep.2010.01.014. பப்மெட்:20207438. 
  47. "Hepatitis B virus biology". Microbiology and Molecular Biology Reviews 64 (1): 51–68. March 2000. doi:10.1128/mmbr.64.1.51-68.2000. பப்மெட்:10704474. 
  48. "Hepatitis B virus nucleocapsid but not free core antigen controls viral clearance in mice". Journal of Virology 86 (17): 9266–73. September 2012. doi:10.1128/JVI.00608-12. பப்மெட்:22718814. 
  49. "A mutant hepatitis B virus core protein mimics inhibitors of icosahedral capsid self-assembly". Biochemistry 48 (8): 1736–42. March 2009. doi:10.1021/bi801814y. பப்மெட்:19196007. 
  50. "Nucleoside/nucleotide analog inhibitors of hepatitis B virus polymerase: mechanism of action and resistance". Current Opinion in Virology 8: 1–9. October 2014. doi:10.1016/j.coviro.2014.04.005. பப்மெட்:24814823. 
  51. "Persistence of hepatitis B virus covalently closed circular DNA in hepatocytes: molecular mechanisms and clinical significance". Emerging Microbes & Infections 3 (9): 1–7. September 2014. doi:10.1038/emi.2014.64. பப்மெட்:26038757. 
  52. "TSRI - News and Publications". பார்க்கப்பட்ட நாள் 2009-01-03.
  53. "Molecular functions and biological roles of hepatitis B virus x protein". Cancer Science 97 (10): 977–83. October 2006. doi:10.1111/j.1349-7006.2006.00299.x. பப்மெட்:16984372. 
  54. "Hepatitis B virus replication is associated with an HBx-dependent mitochondrion-regulated increase in cytosolic calcium levels". Journal of Virology 81 (21): 12061–5. November 2007. doi:10.1128/JVI.00740-07. பப்மெட்:17699583. 
  55. "Activation and inhibition of cellular calcium and tyrosine kinase signaling pathways identify targets of the HBx protein involved in hepatitis B virus replication". Journal of Virology 77 (14): 7713–9. July 2003. doi:10.1128/JVI.77.14.7713-7719.2003. பப்மெட்:12829810. 
  56. Chai N, Chang HE, Nicolas E, Han Z, Jarnik M, Taylor J (August 2008). "Properties of subviral particles of hepatitis B virus". J. Virol. 82 (16): 7812–7. doi:10.1128/JVI.00561-08. பப்மெட்:18524834. பப்மெட் சென்ட்ரல்:2519590. http://jvi.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=18524834. [தொடர்பிழந்த இணைப்பு]
  57. "Hepatitis B virus genetic variability and evolution". Virus Research 127 (2): 164–76. August 2007. doi:10.1016/j.virusres.2007.02.021. பப்மெட்:17383765. http://www.hal.inserm.fr/inserm-00133137/document. 
  58. "Enhancer I predominance in hepatitis B virus gene expression". Molecular and Cellular Biology 24 (4): 1799–808. February 2004. doi:10.1128/mcb.24.4.1799-1808.2004. பப்மெட்:14749394. 
  59. "Hepatitis B virus (HBV) promoters are regulated by the HBV enhancer in a tissue-specific manner". Journal of Virology 63 (2): 579–83. February 1989. doi:10.1128/JVI.63.2.579-583.1989. பப்மெட்:2536093. 
  60. "Regulation of hepatitis B virus gene expression". Journal of Hepatology 17 Suppl 3: S20-3. 1993. doi:10.1016/s0168-8278(05)80419-2. பப்மெட்:8509635. 
  61. 61.0 61.1 "Hepatitis B virus replication". World Journal of Gastroenterology 13 (1): 48–64. January 2007. doi:10.3748/wjg.v13.i1.48. பப்மெட்:17206754. 
  62. "The enigmatic X gene of hepatitis B virus". Journal of Virology 78 (23): 12725–34. December 2004. doi:10.1128/JVI.78.23.12725-12734.2004. பப்மெட்:15542625. 
  63. Doitsh, Gilad; Shaul, Yosef (May 2003). "A long HBV transcript encoding pX is inefficiently exported from the nucleus" (in en). Virology 309 (2): 339–349. doi:10.1016/S0042-6822(03)00156-9. பப்மெட்:12758180. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0042682203001569. 
  64. "The hepatitis B virus post-transcriptional regulatory element contains two conserved RNA stem-loops which are required for function". Nucleic Acids Research 26 (21): 4818–27. November 1998. doi:10.1093/nar/26.21.4818. பப்மெட்:9776740. 
  65. "The apical stem-loop of the hepatitis B virus encapsidation signal folds into a stable tri-loop with two underlying pyrimidine bulges". Nucleic Acids Research 30 (21): 4803–11. November 2002. doi:10.1093/nar/gkf603. பப்மெட்:12409471. 
  66. "Possible new hepatitis B virus genotype, southeast Asia". Emerging Infectious Diseases 14 (11): 1777–80. November 2008. doi:10.3201/eid1411.080437. பப்மெட்:18976569. 
  67. "When should "I" consider a new hepatitis B virus genotype?". Journal of Virology 82 (16): 8241–2. August 2008. doi:10.1128/JVI.00793-08. பப்மெட்:18663008. 
  68. "Full-genome sequence of a hepatitis B virus genotype f1b clone from a chronically infected chilean patient". Genome Announcements 2 (5): e01075–14. October 2014. doi:10.1128/genomeA.01075-14. பப்மெட்:25342685. 
  69. Cavinta L., Sun J., May A., Yin J., von Meltzer M., Radtke M., Barzaga N.G., Cao G., Schaefer S.(2009) A new isolate of hepatitis B virus from the Philippines possibly representing a new subgenotype C6. J. Med. Virol. 81(6):983-987
  70. Lusida M.I., Nugrahaputra V.E., Soetjipto, Handajani R., Nagano-Fujii M., Sasayama M., Utsumi T., Hotta H.(2008) Novel subgenotypes of hepatitis B virus genotypes C and D in Papua, Indonesia. J. Clin. Microbiol. 46(7):2160-2166
  71. 71.0 71.1 "Visualization of hepatitis B virus entry - novel tools and approaches to directly follow virus entry into hepatocytes". FEBS Letters 590 (13): 1915–26. July 2016. doi:10.1002/1873-3468.12202. பப்மெட்:27149321. 
  72. "NTCP opens the door for hepatitis B virus infection". Antiviral Research 121: 24–30. September 2015. doi:10.1016/j.antiviral.2015.06.002. பப்மெட்:26071008. 
  73. "Hepatitis B Virus and Hepatitis D Virus Entry, Species Specificity, and Tissue Tropism". Cold Spring Harbor Perspectives in Medicine 5 (8): a021378. August 2015. doi:10.1101/cshperspect.a021378. பப்மெட்:26238794. 
  74. Bruss V (2007). "Hepatitis B virus morphogenesis". World J. Gastroenterol. 13 (1): 65–73. பப்மெட்:17206755. 
  75. "Fam46A (Protein Coding)". GeneCards. GeneCards. பார்க்கப்பட்ட நாள் 18 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரலழற்சி_பி_தீநுண்மம்&oldid=3767205" இலிருந்து மீள்விக்கப்பட்டது