ஈடித் கிராஸ்மன்
ஈடித் கிராஸ்மன் | |
---|---|
2012 இல் ஈடித் கிராஸ்மன் | |
பிறப்பு | ஈடித் மரியன் டோர்ப் மார்ச்சு 22, 1936 பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 4, 2023 நியூயார்க் நகரம், அமெரிக்கா | (அகவை 87)
தொழில் | மொழிபெயர்ப்பாளர் |
கல்வி |
|
துணைவர் | Norman Grossman (தி. 1965; ம.மு. 1984) |
பிள்ளைகள் | 2 |
ஈடித் மரியன் கிராஸ்மன் (Edith Grossman, 22, மார்ச், 1936 - 4, செப்டம்பர், 2023) என்பவர் ஒரு அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் லத்தீன் அமெரிக்க மற்றும் எசுபானிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக அறியப்படுகிறார். இவர் நோபல் பரிசு பெற்ற மாரியோ பார்க்காசு யோசா, நோபல் பரிசு பெற்ற கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், மைரா மான்டெரோ , அகஸ்டோ மான்டெரோசோ, ஜெய்ம் மன்ரிக், ஜூலியன் டி சியோஸ், அல்வாரோ மிகெல் தே செர்வாந்தேஸ் ஆகியோரின் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். [1] இவர் மொழிபெயர்ப்பிற்கான PEN/Ralph Manheim பதக்கம் மற்றும் மொழிபெயர்ப்புக்கான 2022 Thornton Wilder பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.
வாழ்க்கை
[தொகு]அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் பிறந்த எடித் மரியன் டோர்ஃப், கிராஸ்மன் பிற்காலத்தில் நியூயார்க் நகரில் வாழ்ந்தார். [2] இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எசுபானிய மொழியில் இளங்கலையும், எசுபானிய இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சிலி "எதிர்ப்பு கவிஞர்" நிக்கானோர் பர்ரா பற்றிய ஆய்வுசெய்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். [3] [4] இவர் தனது தொழில் வாழ்க்கையின் துவக்கத்தில் நியூயார்க் பல்கலைக் கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். [2] 1972 ஆம் ஆண்டு, ஜோ-ஆன் ஏங்கல்பெர்ட் என்பவர், அர்ஜென்டினாவின் அவாண்ட்-கார்ட் எழுத்தாளர் மாசிடோனியோ பெர்னாண்டசின் சிறுகதையை ஒரு இலக்கியத் தொகுப்பிற்காக மொழிபெயர்த்துத் தரும்படி இவரிடம் கேட்டபிறகு இவரது மொழிபெயர் வாழ்க்கை தொடங்கியது. [5] அதன் பிறகு கிராஸ்மன் தனது பணியின் கவனத்தை கற்பித்தல், திறனாய்வு போன்றவற்றிலிருந்து மொழிபெயர்ப்புக்குத் திருப்பினார். [6] அதன்படி 1990 இல், முழுநேரமும் மொழிபெயர்ப்பு பணியில் தனது கவனத்தைச் செலுத்த கற்பித்தல் பணியைக் கைவிட்டார். [7]
கிராஸ்மன் அவரது நண்பர்களிடையே "எடி" என்று அறியப்பட்டார். [4] இவர் 1965 இல் நார்மன் கிராஸ்மேனை மணந்தார். இணையருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். ஆனால் 1984 இல் இருவரும் மணவிலக்குப் பெற்றனர். எடித் கிராஸ்மன் கணைய புற்றுநோயால் 2023, செப்டம்பர், 4 அன்று மன்ஹாட்டனில் உள்ள தனது வீட்டில் இறந்தார். [2]
தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள்
[தொகு]40 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராஸ்மன் சுமார் 60 புத்தகங்களை எசுபானிய மொழியிலிருந்து மொழிபெயர்த்தார். [4]
- டான் குய்க்ஸோட், Ecco/Harper Collins, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0060934347.
- Exemplary Novels, Yale University Press, 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300230536.
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்:
- Love in the Time of Cholera, Knopf, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0394561615.
- The General in His Labyrinth, Penguin, 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0224030830.
- Strange Pilgrims, Knopf, 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0679425663.
- Of Love and Other Demons, Knopf, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0679438533.
- News of a Kidnapping, Knopf, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0375400513.
- Living to Tell the Tale, Jonathan Cape, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1400041343.
- Memories of My Melancholy Whores, Vintage, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1400095940.
- Death in the Andes, Farrar, Straus and Giroux, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0571175482.
- The Notebooks of Don Rigoberto, Farrar, Straus and Giroux, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0374223274.
- The Feast of the Goat, Picador, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0312420277.
- The Bad Girl, Farrar, Straus and Giroux, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0374182434.
- In Praise of Reading and Fiction: The Nobel Lecture,[8] Farrar, Straus and Giroux, 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0374175757.
- Dream of the Celt, Farrar, Straus and Giroux, 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0374143466.
- The Discreet Hero, Farrar, Straus and Giroux, 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0374146740.
- The Neighborhood, Farrar, Straus and Giroux, 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0374155124.
- Last Waltz in Santiago and Other Poems of Exile and Disappearance, Penguin, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0140586084.
- In Case of Fire in a Foreign Land: New and Collected Poems from Two Languages, Duke University Press, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0822329879.
- In the Palm of Darkness, HarperCollins, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0060187033.
- The Messenger: A Novel, Harper Perennial, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0060929619.
- The Last Night I Spent With You, HarperCollins, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0060952907.
- The Red of His Shadow, HarperCollins, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0060952914.
- Dancing to "Almendra": A Novel, Farrar, Straus and Giroux, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0374102777.
- Captain of the Sleepers: A Novel, Picador, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0312425432.
- The Adventures of Maqroll: Four Novellas, HarperCollins, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0060170042.
- The Adventures and Misadventures of Maqroll, NYRB Classics, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0940322912.
பிற மொழிபெயர்ப்புகள்:
- José Luis Llovio-Menéndez, Insider: My Hidden Life as a Revolutionary in Cuba, Bantam Books, 1988. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0553051148.
- Augusto Monterroso, Complete Works & Other Stories, University of Texas Press, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0292751842.
- Julián Ríos, Loves That Bind, Knopf, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0375400582.
- Eliseo Alberto, Caracol Beach: A Novel, Vintage, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0375705069.
- Julián Ríos, Monstruary, Knopf, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0375408236.
- Pablo Bachelet, Gustavo Cisneros: The Pioneer, Planeta, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0974872483.
- Carmen Laforet, Nada: A Novel, The Modern Library, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0679643456.
- The Golden Age: Poems of the Spanish Renaissance, W. W. Norton, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0393329919.
- Antonio Muñoz Molina, A Manuscript of Ashes, Houghton Mifflin Harcourt, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0151014101.
- Luis de Góngora, The Solitudes, Penguin, 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0143106388.
- Carlos Rojas Vila, The Ingenious Gentleman and Poet Federico Garcia Lorca Ascends to Hell, Yale University Press, 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300167764.
- Sor Juana Inés de la Cruz, Selected Works, W. W. Norton, 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0393351880.
- Carlos Rojas Vila|Carlos Rojas, The Valley of the Fallen, Yale University Press, 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300217964.
கட்டுரை:
- Why Translation Matters, Yale University Press, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0300126563.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hecht, Randy B.. "Interview with Edith Grossman, translator". AARP. https://www.aarp.org/entertainment/books/info-2006/translator_edith_grossman.html.
- ↑ 2.0 2.1 2.2 Chace, Rebecca (September 4, 2023). "Edith Grossman, Who Elevated the Art of Translation, Dies at 87". https://www.nytimes.com/2023/09/04/books/edith-grossman-dead.html.Chace, Rebecca (September 4, 2023). "Edith Grossman, Who Elevated the Art of Translation, Dies at 87". The New York Times. Retrieved September 4, 2023.
- ↑ "Why translation matters to Edith Grossman". பார்க்கப்பட்ட நாள் September 7, 2023.
- ↑ 4.0 4.1 4.2 Goyeneche, Teresita (October 2, 2019). "Edith Grossman: la traductora que conectó América Latina con Estados Unidos". Vice. https://www.vice.com/es/article/d3a4ya/a-edith-grossman-pasaporte-literario-de-america-latina-a-estados-unidos-no-le-gusta-viajar.Goyeneche, Teresita (October 2, 2019). "Edith Grossman: la traductora que conectó América Latina con Estados Unidos". Vice. Retrieved September 7, 2023.
- ↑ "Gabriel Garcia Marquez's Translator Speaks up for Translations". பார்க்கப்பட்ட நாள் April 19, 2014.
- ↑ "Edith Grossman, acclaimed translator, dies at 87". https://www.theguardian.com/books/2023/sep/05/edith-grossman-acclaimed-translator-dies-at-87.
- ↑ "Lecture: "Translating Cervantes"". பார்க்கப்பட்ட நாள் September 6, 2023.
- ↑ nobel.org