உள்ளடக்கத்துக்குச் செல்

இ. இக்கண்ட வாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடக்குன்னி இக்கண்ட வாரியர்
ഇക്കണ്ട വാര്യര്
கொச்சி மாநிலத்தின் 3வது தலைமை அமைச்சர்
பதவியில்
20 செப்டம்பர் 1948 – 30 ஜூன் 1949
ஆட்சியாளர்ஐக்கியம் கேரளம் தம்புரான்
முன்னையவர்டி. கே. நாயர்
பின்னவர்பதவி ஒழிக்கப்பட்டது
தொகுதிஒல்லூர், திருச்சூர், கேரளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1890
ஒல்லூர், திருச்சூர், கேரளம்
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இலட்சுமிகுட்டியம்மா
உறவுகள்திருமணம்
பிள்ளைகள்4
பெற்றோர்
  • மேலெதெத்து சங்கரன் நம்பூதிரி
  • இடக்குன்னி பார்வதிக்குட்டி வாரியர்
வாழிடம்ஒல்லூர்
முன்னாள் மாணவர்
தொழில்அரசியல்வாதி, சமூக சேவகர்

இக்கண்ட வாரியர் (Ikkanda Warrier) (மலையாளம்;ഇക്കണ്ട വാര്യര്) (1890 - 1977) 1948இல் தொடங்கி, இந்தியாவின் கொச்சி மாநிலத்தின் மூன்றாவதும் கடைசி பிரதமராகவும் இருந்தார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

வாரியர் 1890இல் திருச்சூரிலுள்ள ஒல்லூர் இடக்குன்னி வாரியர் குடும்ப உறுப்பினராகப் பிறந்தார். இரிஞ்ஞாலகுடா, எர்ணாகுளம், திருச்சூரில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர், சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியிலும் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியிலும் சட்டம் முடித்த பின்னர், தனது சட்டப் பயிற்சியை திருச்சூரில் ஆரம்பித்தார்.

இந்திய விடுதலை இயக்கம்

[தொகு]

சென்னையில் தனது கல்லூரி நாட்களில், இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார். மேலும், அந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் தீவிரமாக பங்கேற்றார். காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இகண்டவாரியார் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். 1947இல், கொச்சி ராஜ்ய பிரஜாமண்டலத்தின் தலைவரான இக்கண்டவாரியர் கொச்சியை முடியாட்சியிலிருந்து விடுவிக்க கடுமையாக உழைத்தார். 1948இல், கொச்சி மாநிலம் சுதந்திரம் பெற்று கொச்சியின் முதல் பிரதமரானார். பின்னர் கொச்சி திருவிதாங்கூரில் இணைந்தது. பின்னர், மலபாருடன் இணைத்து 1956இல் கேரள மாநிலத்தை உருவாக்கியது.

அகில இந்திய மாநில மக்கள் மாநாட்டின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மேலும், அந்த அமைப்பில் பல அலுவல்களை நடத்தினார்.[2] இவர் கொச்சியின் திவான் தோ.சங்கர வாரியரின் பேரனாவார். திருச்சூர் மாவட்டத்திலுள்ள பீச்சி அணை, வாழானி அணை , பெரிங்கல்குத்து அணையின் கட்டிடக் கலைஞராகக் கருதப்படுகிறார்.[3]

இறப்பு

[தொகு]

இக்கண்டவாரியர், ஜூன் 8, 1977இல் இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "E.Ikkanda Varrier". PIB. Retrieved 2014-09-17.
  2. Oral History Project, Nehru Memorial Museum and Library, New Delhi
  3. "E.Ikkanda Varrier". PIB. Retrieved 2014-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._இக்கண்ட_வாரியர்&oldid=3212503" இலிருந்து மீள்விக்கப்பட்டது