கொச்சி ராஜ்ய பிரஜாமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொச்சி ராஜ்ய பிரஜமண்டலம் (Kochi Rajya Prajamandalam) என்பது இந்திய சுதந்திர இயக்கம் தொடர்பாக 1941இல் திருச்சூரில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். ஈ. இக்கண்ட வாரியர், வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன், எஸ். நீலகண்ட ஐயர், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாடு போன்றோர் கட்சி உருவாக்கத்தில் முக்கியமானவர்களாக இருந்தனர். பனம்பிள்ளை கோவிந்த மேனன், கே. கருணாகரன் போன்ற முக்கிய அரசியல்வாதிகள் இந்த கட்சியில் பணியாற்றியுள்ளார்கள்.[1]

வரலாறு[தொகு]

முன்னாள் கொச்சி மாநிலத்தில் அரசியல் இயக்கங்கள் செயல்படுவதில் அதிருப்தி அடைந்த இளைஞர்கள் குழு, 26 ஜனவரி 1941 அன்று நடந்த கூட்டத்தில், கிருஷ்ணன் எழுத்தச்சன் தலைமையில் கொச்சி ராஜ்ய பிரஜமண்டலம் என்ற கட்சியை அமைக்க முடிவு செய்தனர்.[2] இந்தக் கட்சி 9 பிப்ரவரி 1941 அன்று திருச்சூரில் மணிகண்டனல்தாராவில் முறையாகத் தொடங்கப்பட்டது. மேலும் எஸ்.நீ லகண்ட ஐயர் தலைவராகவும், கிருஷ்ணன் எழுத்தச்சன் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் முக்கிய நோக்கம் கொச்சி மன்னரின் அரசியல் இறையாண்மையை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு சமத்துவத்தையும் அரசியல் அதிகாரத்தையும் பெறுவதாகும். கதர், மதுவிலக்கு, கல்வித் துறையில் முன்னேற்றத்தைப் பெறவும் கட்சி பாடுபட்டது.[3]

பணிகள்[தொகு]

1941 ஆம் ஆண்டு வெள்ள பேரழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பிரஜாமண்டலத்தின் செயல்பாடுகள், பொதுமக்களிடம் கட்சியை ஏற்றுக் கொள்ள வைத்தன. அந்த சமயத்தில் பிரஜாமண்டலம் வெள்ள நிவாரணக் குழுவை அமைத்தது.[3]

நிலப்பிரபுத்துவத்தால் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை முடிவுக்குக் கொண்டுவர முதன்மையாக பணியாற்றிய கொச்சின் கர்ஷக சபா என்ற அமைப்பை பிரஜாமண்டலம் உருவாக்கியது. இந்த அமைப்பு விவசாயிகளின் நிலத்தில் நிரந்தர உரிமைக்காக நின்றது. 1943 பிப்ரவரி 13 -இல் கொச்சி சட்டமன்றத்தில் வெரும்பட்டா குடியன் சட்டத்தை இது ஏற்றுக்கொண்டது.[3]

பிரஜாமண்டலம் அதன் முதல் வருடாந்திர கூட்டத்தை 1942 இல் இரிஞ்ஞாலக்குடாவில் நடத்த முடிவு செய்தது. ஆனால் கொச்சி திவான் ஏஎப்டபிள்யூ திக்சன் இதை தடை செய்தார். இருப்பினும் சில தலைவர்கள் கூட்டம் நடத்த முன் வந்தனர். கே. கருணாகரன் உட்பட பல தலைவர்கள் திவான் அனுப்பிய காவலர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் கொடூரமான சித்திரவதையை எதிர்கொண்டனர்.[3]

அக்டோபர் 5, 1942 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக, காந்திஜி , நேரு ஆகியோர் தலைமையில் அகில இந்திய காங்கிரசின் கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது . S. நீலகண்ட ஐயர், கிருஷ்ணன் எழுத்தச்சன் ஆகியோர் பிரஜாமண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் கலந்து கொண்டனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக, பிரஜாமண்டலம் வேலை நிறுத்தங்களில் தீவிரமாக பங்கேற்றது. இச்சமயத்தில் பத்திரிகை செயல்பாட்டிற்கு கடுமையான தடை இருந்தது. பிரஜாமண்டலம் தீனபந்து என்ற நாளிதழைத் தொடங்கியது. செய்தித்தாள் சுதந்திர இயக்கங்களை வலுப்படுத்த உதவியது.[3]

தேர்தல்[தொகு]

1945இல் பிரஜாமண்டலம் தேர்தலை எதிர்கொண்டு கொச்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது. எதிர்கட்சியைத் தேர்தெடுத்து பொறுப்பான அரசாங்கத்திற்காக வேலை செய்தது. மேலும், கோவில் நுழைவு இயக்கத்திற்கும் கட்சி வேலை செய்தது.[3]

கட்சி குறிக்கோளை முடித்த பிறகு கலைந்த முதல் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். பின்னர் பிரஜாமண்டலம் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "ഒാർമകൾ ഉദിച്ചുയരുന്നുണ്ട്, ഇൗ ആൽത്തറയിൽ ഇന്നും". Madhyamam Online. 5 August 2017 இம் மூலத்தில் இருந்து 16 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180216140450/http://www.madhyamam.com/local-news/thrissur/2017/aug/05/307039. பார்த்த நாள்: 16 February 2018. 
  2. "THRISSUR - HISTORY". Govt of Thrissur. Archived from the original on 2018-01-11. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Formation of Kochi Rajya Prajamandalam" (PDF). shodhganga. Archived from the original (PDF) on 2018-01-11. பார்க்கப்பட்ட நாள் 2018-02-16.

மேலும் படிக்க[தொகு]