உள்ளடக்கத்துக்குச் செல்

தீனபந்து (மலையாள நாளிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீனபந்து
வகைதினசரி, வாரந்தரி நாளிதழ்
உரிமையாளர்(கள்)வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன்
வெளியீட்டாளர்வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன்
தலைமை ஆசிரியர்வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன்
அரசியல் சார்புபுதிய தாராளவாதம், இந்திய தேசிய காங்கிரசு சார்பு
மொழிமலையாளம்
தலைமையகம்திருச்சூர்

தீனபந்து (Deenabandhu) என்பது ஓர் செயலிழந்த மலையாள மொழி செய்தித்தாள் ஆகும். இது தினசரியாக அச்சிடப்பட்டு இந்தியாவில் கேரளாவின் திருச்சூர் நகரத்திலிருந்து வெளியிடப்பட்டு வந்தது. செய்தித்தாள் இந்திய விடுதலை இயக்கத்தை ஆதரித்த கொச்சின் இராச்சியத்திலிருந்து வெளியிடப்பட்ட முதல் இதழாகும். [1] [2]

வரலாறு

[தொகு]

தீனபந்து, முதலில் வாராந்திரியாக 26 ஜனவரி 1941 அன்று திருச்சூர் நகரத்திலிருந்து வி. ஆர். கிருஷ்ணன் எழுத்தச்சன் தலைமை தொகுப்பாசிரியராகத் தொடங்கப்பட்டது . இந்திய விடுதலை இயக்கத்தில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக தீன்பந்து அல்லது ஏழைகளின் நண்பர் என்று மகாத்மா காந்தியால் அன்புடன் அழைக்கப்பட்ட சார்லஸ் பிரீர் ஆண்ட்ரூஸின் பெயரிலேயே இந்த செய்தித்தாள் பெயரிடப்பட்டது. [3] பெரும்பாலான செய்திகள் கொச்சி மாநிலத்திலிருந்து வந்த அரசியல் இயக்கங்களிலிருந்து வந்தவை. இந்த பத்திரிகை கொச்சி ராஜ்ய பிரஜாமண்டலம் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழாகும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, ஆசிரியரும் ஊழியர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், ஊழியர்கள் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு 1944 இல் மீண்டும் தனது வெளியீட்டைத் தொடங்கியது. ஜனவரி 1946 இல், தீனபந்து தினசரி செய்தித்தாளாக மாற்றப்பட்டு எர்ணாகுளத்திலிருந்து வெளிவந்தது. 1962இல் நிதி சிக்கல்கள் காரணமாக, தீனபந்து தனது வெளியீட்டை நிறுத்தியது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "THE EVOLUTION OF PRESS IN KERALA" (PDF). Shodhganga. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
  2. "HISTORY OF PRESS IN KERALA". PRD. Archived from the original on 7 August 2014. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
  3. "DEENABANDHU C. F. ANDREWS (PHILOSOPHER)". Indian Post. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
  4. "HISTORY OF MEDIA IN KERALA". Press Academy. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.