இலட்சுமி வேணு
இலட்சுமி வேணு | |
---|---|
பிறப்பு | 1983 (அகவை 40–41) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | யேல் பல்கலைக்கழகம் வார்விக் பல்கலைக்கழகம் |
பணி | தொழில்முனைவோர் |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | சுந்தரம்-கிளேட்டன் டிவிஎஸ் மோட்டார் வேம்கோ இந்தியா லிமிடெட் |
பெற்றோர் | வேணு சீனிவாசன் (தொழிலதிபர்) மல்லிகா சீனிவாசன் |
வாழ்க்கைத் துணை | ரோஹன் மூர்த்தி (தி. 2011; ம.மு. 2015) மகேஷ் கோகினேனி (தி. 2018) |
இலட்சுமி வேணு (Lakshmi Venu) ஒரு இந்திய தொழிலதிரும், சுந்தரம்-கிளேட்டனின் நிர்வாக இயக்குனரும் ஆவார். [1] இவர் தனது பாட்டனார் டி.வி.சுந்தரம் ஐயங்காரால் நிறுவப்பட்ட சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் குழுமத்தின் வாரிசும் ஆவார். [2] [3] [4] [5]
பின்னணியும் கல்வியும்
[தொகு]வேணு சீனிவாசன் மற்றும் மல்லிகா சீனிவாசனின் மகள் லட்சுமி. லட்சுமியின் பெற்றோர் இருவரும் தனித்தனி வணிகப் பேரரசுகளை நடத்துகிறார்கள். அதை அவர்களின் தந்தையிடமிருந்து பெற்றனர். வேணு சீனிவாசன் தனது தாத்தா டிவி சுந்தரம் ஐயங்கார் நிறுவிய டிவிஎஸ் குழுமத்தை (சுந்தரம்-கிளேட்டன் குரூப்) நடத்துகிறார். மல்லிகா சீனிவாசன் தனது தந்தை ஏ. சிவசைலத்திடமிருந்து பெற்ற டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் லிமிடெட் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார்.[6]
லட்சுமிக்கு சுதர்சன் வேணு என்ற ஒரு சகோதரர் உள்ளார். இவர், சென்னையில் வளர்ந்து அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளியில் படித்தார். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் வார்விக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றார்.[7] [8]
தொழில்
[தொகு]லட்சுமி இளம் வயதிலேயே சுந்தரம் கிளேட்டனில் இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். [9] [10] [11]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]2011 இல், அவர் இன்ஃபோசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தியை மணந்தார்.[12] [13] இவர்கள் 2015 இல் மணமுறிவு செய்தனர்.[14]
மார்ச் 2018 இல், ஜோத்பூரில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் மகேஷ் கோகினேனியை லட்சுமி திருமணம் செய்ததாக அறிவிக்கப்பட்டது. மகேஷ் கோகினேனி, என்ஜி ரங்காவின் பேரன்.[15] [16] [17] இவர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவார். மேலும், இவர் சிறிய அளவிலான தொழில்நுட்ப தொடக்கத்தை நடத்துகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lakshmi Venu takes charge as MD, Sundaram-Clayton". https://www.thehindubusinessline.com/companies/lakshmi-venu-takes-charge-as-md-of-sundaram-clayton/article65388420.ece.
- ↑ "TVS heiress Lakshmi Venu weds tech entrepreneur Mahesh Gogineni". https://www.dnaindia.com/business/report-tvs-heiress-lakshmi-venu-weds-tech-entrepreneur-mahesh-gogineni-2591911.
- ↑ "ET Women Ahead: Corporate India's fastest rising women leaders". தி எகனாமிக் டைம்ஸ். 23 January 2017. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
- ↑ Narasimhan, T E (21 Aug 2009). "Lakshmi Venu may lead $1-billion TVS one day". Rediff. பார்க்கப்பட்ட நாள் 15 Mar 2023.
- ↑ "Lakshmi Venu to get more responsibilities at Sundaram Clayton". தி டெக்கன் குரோனிக்கள். 27 November 2013. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
- ↑ "In the driver's seat: Lakshmi Venu". S. Bridget Leena. Livemint. 10 March 2013. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
- ↑ "Rohan crafted engagement ring for Lakshmi, says Murthy". The Economic Times. 10 August 2010. https://economictimes.indiatimes.com/rohan-crafted-engagement-ring-for-lakshmi-says-murthy/articleshow/6287488.cms. பார்த்த நாள்: 15 March 2023.
- ↑ "Sundaram-Clayton inducts Venu on board". mint. 23 March 2010. https://www.livemint.com/Companies/vkniYLeCy1JMZQn9vDeRyN/SundaramClayton-inducts-Venu-on-board.html. பார்த்த நாள்: 15 March 2023.
- ↑ "ET Women Ahead: Corporate India's fastest rising women leaders". தி எகனாமிக் டைம்ஸ். 23 January 2017. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
- ↑ "Lakshmi Venu to get more responsibilities at Sundaram Clayton". தி டெக்கன் குரோனிக்கள். 27 November 2013. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
- ↑ Narasimhan, T E (21 Aug 2009). "Lakshmi Venu may lead $1-billion TVS one day". Rediff. பார்க்கப்பட்ட நாள் 15 Mar 2023.Narasimhan, T E (21 August 2009). "Lakshmi Venu may lead $1-billion TVS one day". Rediff. Retrieved 15 March 2023.
- ↑ "Ties In Double Knots". Dilip Bobb. Outlook. 5 October 2015. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
- ↑ "Rohan Murthy- Lakshmi's wedding reception". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 June 2011. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
- ↑ "Power couple Rohan Murty, Lakshmi Venu formally separate". Times Now. 20 November 2015. பார்க்கப்பட்ட நாள் 7 April 2021.
- ↑ "Lakshmi Venu, daughter of TVS Motor Chairman, ties the knot with N G Ranga's great grandson". Anandi Chandrashekhar. தி எகனாமிக் டைம்ஸ். 8 March 2018. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
- ↑ "'It's important to remain agile'". Arundhati Ramanathan. Livemint. 27 August 2012. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
- ↑ "ET Women's Forum: Power women who are driving the manufacturing industry". Lijee Philip. தி எகனாமிக் டைம்ஸ். 1 March 2018. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.