தி. வே. சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி. வே. சுந்தரம் அய்யங்கார்
T.V.S
TVS iyyengar.jpg
பிறப்பு 22 மார்ச் 1877
திருநெல்வேலி, மெட்ராஸ் மாகாணம்.
இறப்பு ஏப்ரல் 28, 1955(1955-04-28)
கொடைக்கானல், தமிழ்நாடு, இந்தியா
பணி நிறுவனர் (டி.வி.எஸ் குழுமம்)
பிள்ளைகள் தி. சு. சௌந்தரம் , தி. சு.ராஜம், தி. சு.சந்தானம், தி. சு.அமு அம்மாள், தி. சு.ஸ்ரீனிவாசன் மற்றும் தி. சு.கிருஷ்ணா
உறவினர்கள் வேணு சீனிவாசன் (பேரன்)

தி. வே. சுந்தரம் அய்யங்கார் (திருக்குறுங்குடி வேங்கராம் சுந்தரம் ஐயங்கார்) (1877 - ஏப்ரல் 28, 1955) T V சுந்தரம் அய்யங்கார் எனப் பரவலாக அறியப்படும் இவர் மற்றும் இந்தியாவின் பெரிய பல்துறை தொழிலகங்களில் ஒன்றான டி.வி. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்சு குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார் [1]. தொடக்கத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் பின்னாளில் வெற்றிகரமான தொழில் அதிபராக திகழ்ந்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் முதன் முதலில் பேருந்து சேவையைத் தொடங்கியவர் இவரே.

பிறப்பு[தொகு]

1877 இல் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி என்ற ஊரில் பிறந்தார். முதலில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர், பின் தன் தந்தையின் விருப்பத்திற்கிணங்க இந்திய இரயில்வேயிலும் பின் வங்கியிலும் பணி புரிந்தார் [2] .

தொழிலதிபராக[தொகு]

இளமையிலேயே தொழிலார்வம் கொண்டிருந்த இவரது ஆர்வத்தை திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கத்தில் (Triplicane Literary Society - TLS) நடைபெற்ற லாயர் நார்டனின் உரை மேலும் தூண்டியது. (இந்த இலக்கியச் சங்கமே அக்காலத்தில் அமெரிக்காவிற்கு சுவாமி விவேகானந்தரை அறிமுகம் செய்தது)[3] இவர் தன் வங்கி வேலையை விட்டு தொழில் துறைக்கு திரும்பினார் [2]. 1912 இல் மதுரையில் முதலில் பேருந்து சேவையை ஆரம்பித்து தென் இந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார் [4][2]. 1923 இல் டி.வி. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்சு நிறுவனத்தை நிறுவினார். 1955 இல் அவர் இறந்த சமயத்தில் பல பேருந்துகளையும் சுமையுந்துகளையும் சதர்ன் ரோட்வேசு லிமிட்டட் என்ற நிறுவனத்தின் பெயரில் இயங்கியது [4]. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சென்னை மாகாணத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் இத்தேவையை ஈடுகட்டும் விதமாக டிவிஎசு கேசு பிளாண்ட்டை வடிவமைத்து உருவாக்கினார். இரப்பர் புதுப்பிப்பு ஆலை, தி மெட்ராசு ஆட்டோ சர்விசு லிமிட்டட், சுந்தரம் மோட்டார் லிமிட்டட் போன்ற நிறுவனங்களை துவங்கினார். தி மெட்ராசு ஆட்டோ சர்விசு லிமிட்டட் 1950 இல் செனரல் மோட்டார்சின் மிகப்பெரிய வினியோக உரிமையை கொண்டிருந்தது. இவருக்கு 5 மகன்கள் 3 மகள்கள் உண்டு. 5 மகன்களும் தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்கினர். மூத்த மகன் துரைசாமி இளவயதிலேயே இறந்து விட்டார். மற்ற 4 மகன்கள் தி. சு. இராசம், தி. சு. சந்தானம், தி. சு. சீனிவாசன், தி. சு. கிருட்டிணன் ஆகியோர் தொழிலுடன் ஒருங்கிணைந்தார்கள். அவர்கள் நான்கு பிரிவுகளை தனித்தனியாக நிர்வகித்தாலும் அனைவரும் டிவிஎசு என்ற ஒரே பெயரின் கீழேயே இயங்குகிறார்கள் [2]. சுந்தரம் அய்யங்கார் உருவாக்கிய இக்குழுமத்தின் விற்பனை அளவு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 40000 என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது[1].

வாழ்க்கை[தொகு]

சுந்தரம் அய்யங்கார் முற்போக்குச் சிந்தனை கொண்டவர். இளம்வயதில் கைம்பெண்ணான தன் மகள் தி. சு. சௌந்தரத்துக்கு மகாத்மா காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார் [5]. தி. சு. சௌந்தரம் இந்திய விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய அரசு தி. சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டு அவரை பெருமைப்படுத்தியது [6].

வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் கலைகளையும் ஆதரித்தார்[7]. தான் ஓய்வு பெற்று வணிகத்தை தன் மகன்களிடம் ஒப்படைத்ததைக் கண்டு இராசகோபாலாச்சாரி இவரைப் பாராட்டினார் [8]. ஏப்ரல் 28, 1955 இல் அதிகாலையில் கொடைக்கானலில் உள்ள தன் வீட்டில் இறந்த போது இவரது வயது 78. இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும் பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு உருவச்சிலை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல் அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. [9].

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 TVS Iyengar
  2. 2.0 2.1 2.2 2.3 60 years in business - Outlook Business
  3. கலைமகள்; டிசம்பர் 2014
  4. 4.0 4.1 TV Sundaram Iyengar dead
  5. "The Mahatma's magic lives on in Gandhigram"
  6. தி. சு. சௌந்தரம் நினைவு அஞ்சல் தலை வெளியீடு - The Hindu
  7. Kasiki Natakam
  8. THE KING MAKER-Kamaraj grew up as a big power
  9. Tributes to TVS Iyengar
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._வே._சுந்தரம்&oldid=2211002" இருந்து மீள்விக்கப்பட்டது