இரிகாந்த் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரிகாந்த் ஆறு
SurgujaKart.jpg
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் சுர்குஜா மாநிலத்தில் ரேகா ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீசுகர், உத்தரப்பிரதேசம்
சிறப்புக்கூறுகள்
மூலம்மதிரங்கா மலை
 ⁃ அமைவுசர்குஜா மாவட்டம், சூரஜ்பூர் மாவட்டம், சத்தீசுகர்
முகத்துவாரம்சோன் ஆறு
 ⁃ அமைவு
உத்தரப்பிரதேசம், சோன்பத்ரா மாவட்டம்
 ⁃ ஆள்கூறுகள்
24°31′52″N 82°59′57″E / 24.53111°N 82.99917°E / 24.53111; 82.99917ஆள்கூறுகள்: 24°31′52″N 82°59′57″E / 24.53111°N 82.99917°E / 24.53111; 82.99917
வெளியேற்றம் 
 ⁃ அமைவுசோன் ஆறு

இரிகாந்த் ஆறு (Rihand River)(இந்தி: रिहन्द नदी) என்பது இந்திய மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேசம் வழியாகப் பாயும் ஆறாகும். இதனை ரேணு, ரேணுகா, ரெண்ட், ரெர் அல்லது ரெஹர் என்றும் அழைக்கின்றனர். இது சோன் ஆற்றின் துணை ஆறாகும்.

ஆற்றோட்டம்[தொகு]

இரிகாந்த் ஆறு மைன்பட் பீடபூமியின் தென்மேற்கில் உள்ள மாதிரங்கா மலைகளிலிருந்து தோன்றுகிறது. இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,100 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஆறு சுர்குஜா மற்றும் சூரஜ்பூர் மாவட்டத்தின் மத்திய பகுதி வழியாக வடக்கே 160 kiloமீட்டர்கள் (99 mi) ஓடுகிறது. இரிகாந்த் மற்றும் இதன் துணை ஆறுகள் மாவட்டத்தின் மையப் பகுதியில் இதன் தோற்றத்திலிருந்து லக்கன்பூர், சூரஜ்பூர், பிரதாப்பூர் வரை நீண்டு ஒரு வளமான சமவெளியை உருவாக்குகின்றன.[1] இதன்பிறகு, மத்தியப் பிரதேசத்தின் சிங்கரெளலி மாவட்டம் வழியாக உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்திற்கு வடக்கே ஓடுகிறது. இங்கு இந்த ஆறு ரீட் என்று அழைக்கப்படுகிறது. இறுதியா இந்த ஆறு சோன் ஆற்றுடன் இணைகிறது.

துணை நதிகள்[தொகு]

சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய துணை நதிகள் மகான், மொரானா (மோர்னி), கியூர், ககர், கோப்ரி, பிபர்கச்சார், ராம்டியா மற்றும் கல்புல்லா ஆகும்.[1] காஞ்சன், மாயர் மற்றும் அசிர் போன்ற பல பருவகால மற்றும் வற்றாத ஆறுகள் மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மாவட்டத்தில் இகாந்த் நீர்த்தேக்கத்தில் கலக்கின்றன.[2]

இரிகாந்த் அணை[தொகு]

இரிகாந்த் அணை 1962-ல் நீர்மின் உற்பத்திக்காக மிர்சாபூர் பிரிவின் சோன்பத்ரா மாவட்டத்தில் பிப்ரி அருகே இரிகாந்த் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இதன் நீர்த்தேக்கம் கோவிந்த் பல்லப் பந்த் சாகர் என்று அழைக்கப்படுகிறது.[2][3] இந்த அணையின் அருகிலுள்ள தொடருந்து நிலையம் ரேணுகூத் ஆகும்.

இராசுகந்தா அருவி[தொகு]

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் இரிகாந்த் ஆற்றின் ஓட்டத்தில் 'இராசுகந்தா' என்ற அருவி உள்ளது. இந்த அருவி சுற்றுலா முக்கியத்துவமுடையது.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • இந்தியாவில் உள்ள நதிகளின் பட்டியல்
  • சத்தீஸ்கரில் சுற்றுலா

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Surguja: Historical Background: The Rihand". Surguja district administration. 30 August 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-08-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Rihand Dam". india9. 2010-08-03 அன்று பார்க்கப்பட்டது.
  3. "10. Rihand project = U.P". Multipurpose River Valley Projects in India. Indian Officer. 26 March 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிகாந்த்_ஆறு&oldid=3397028" இருந்து மீள்விக்கப்பட்டது