இராம் குமார் (கலைஞர்)
இராம் குமார் (Ram Kumar) (பிறப்பு:1924 செப்டம்பர் 23 [1] - இறப்பு: 2018 ஏப்ரல் 14) ஓர் இந்திய கலைஞரும் எழுத்தாளருமான இவர் இந்தியாவின் முன்னணி பண்பியல் ஓவியர்களில் ஒருவராக வர்ணிக்கப்படுகிறார். முற்போக்கு கலைஞர் குழுவுடன் எம். எஃப். ஹுஉன், தைப் மேத்தா, சையது ஐதர் ராசா போன்ற மேதைகளுடன் நட்பு கொண்டிருந்தார்.[2] பண்பியல் ஓவியத்திற்கான உருவத்தை விட்டுக் கொடுத்த முதல் இந்திய கலைஞர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.[3] இவரது கலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு விற்கப்டுகிறது. இவரது "தி வாகபாண்ட்" படைப்பு கிறிஸ்டிஸ் என்ற ஏல வீட்டில் 1.1 மில்லியன் அமெரிக்க டாலரைப் பெற்றது. இது இந்தக் கலைஞருக்கு மற்றொரு உலக சாதனையாகும். எழுத்து மற்றும் ஓவியம் ஆகியவற்றில் சாதித்த சில இந்திய நவீனத்துவ எஜமானர்களில் இவரும் ஒருவராவார்.[4]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]இராம் குமார் வர்மா, இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் எட்டு சகோதர சகோதரிகளைக் கொண்ட ஒரு பெரிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.[5] இவரது தந்தை இந்தியாவின் பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த அரசு ஊழியராக இருந்தார். இவர் பிரித்தானிய அரசாங்கத்தில் பொது மற்றும் நிர்வாக பிரிவில் பணியாற்றினார்.[6] தில்லியின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை படித்தபோது, இவர் 1945 இல் ஒரு கலை கண்காட்சியில் கலந்து கொண்டார்.[7] ஒரு நாள் மாலையில், செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் கன்னாட்டு பிளேசு பகுதியைச் சுற்றிவந்தபோது "வெறுத்துபோய்" பின்னர், இவர் ஒரு கலை கண்காட்சியில் இறங்கினார்.
இராம்குமார், சைலோஸ் முகர்ஜியின் கீழ் உள்ள சாரதா உகில் கலைப் பள்ளியில் வகுப்புகள் எடுத்தார். 1948இல் கலைப்பணியைத் தொடர தான் பணிபுரிந்த வங்கிப் பணியை விட்டுவெளியேறினார்.[8] சைலோஸ் முகர்ஜி சாந்திநிகேதன் பள்ளியின் ஓவியர் ஆவார்.[9] இவர் நேரடி மாதிரிகளுடன் இயற்கையான பொருள்கள் (பூக்கள், உணவு, ஒயின், இறந்த மீன் மற்றும் விளையாட்டு போன்றவை) அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்கள் (புத்தகங்கள், பாட்டில்கள், பீப்பாய்கள்) உயிரற்ற, அன்றாட பொருள்களின் ஏற்பாட்டைக் கொண்ட ஒரு ஓவிய வண்ணங்களை அறிமுகப்படுத்தினார்.[10] அங்கு ஒரு மாணவராக இருந்தபோது, இவர் ஒரு கண்காட்சியில் சையத் ஐதர் ராசாவை சந்தித்தார். ராசாவும் ராமும் நல்ல நண்பர்களானார்கள்.[11] இவர் தனது தந்தையை பாரிசிக்கு ஒரு வழி பயணத்திற்கு பணம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். மேலும் ஆண்ட்ரே லோட் மற்றும் பெர்னாண்ட் லெகர் ஆகியோரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார்.[12] பாரிசில், சமாதான இயக்கம் இவரை ஈர்த்தது. இவர் பிரெஞ்சு பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார். கேத் மற்றும் போர்செனான் போன்ற சமூக யதார்த்தவாதிகளை தேடுவதில் உத்வேகம் கொண்டார்.[13] சையது ஐதர் ராசா மற்றும் எம்.எஃப். உசேன் ஆகிய இரு நண்பர்களுடன் இவர் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தார்.[14]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பிரபல இந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் மூத்த சகோதரராவார். கர்னலின் இளைய சகோதரருமான ராஜ் குமார் வர்மாவும் இவரது சகோதரர் ஆவார். இவர் 2018 இல் இறக்கும் வரை தில்லியில் வாழ்ந்தார்.[15]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]- ஜான் டி. ராக்பெல்லர் III கூட்டாளார், நியூயார்க், 1970 [16]
- பத்மஸ்ரீ, இந்திய அரசு, 1972
- பிரேம்சந்த் புரஸ்காரம், உத்தரபிரதேச அரசு, 1972
- காளிதாஸ் சம்மன் விருது, மத்திய பிரதேச அரசு, 1986
- அதிகாரிகள் கலை மற்றும் கடிதங்கள், பிரான்ஸ் அரசு, 2003
- வாழ்நாள் சாதனையாளர் விருது, தில்லி அரசு, 2010
- பத்ம பூசண், இந்திய அரசு, 2010
- லலித் கலா அகாடமியின் கூட்டாளர் விருது, 2011
குறிப்புகள்
[தொகு]- ↑ "India Who's who". 1995.
- ↑ "Progressive artist's group". பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "Ram Kumar artistic intensity of an ascetic". Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Portrait of an Artist". Outlook. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
- ↑ "Biography". பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
- ↑ "ArtistInterview". Saffron Art. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
- ↑ "Ram Kumar Interview". Saffron Art. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
- ↑ "Ram Kumar: Artistic Intensity of an Ascetic". Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Oil Paintings from Bengal". Archived from the original on 19 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ram Kumar a transition from figurative". Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Artist Profile". The Art Trust. Archived from the original on 3 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 30 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Indian art: the moderns revisited, Volume 1.
- ↑ "Artistic intensity of an ascetic". Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Contemporary Indian artists.
- ↑ http://indianexpress.com/article/lifestyle/art-and-culture/ram-kumar-1924-2018-in-memoriam/
- ↑ Kumar "Artist Bio". பார்க்கப்பட்ட நாள் 29 March 2012.
{{cite web}}
: Check|url=
value (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Ramkumar Artworks and Public Auction Prices and Economic Data பரணிடப்பட்டது 2020-01-11 at the வந்தவழி இயந்திரம்
- Ram Kumar Profile, Interview and Collection of Art Works
- Ram Kumar – Paintings பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- Oil Painting of Varanasi by Ram Kumar பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம்