உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ ராஜ நரேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ ராஜ நரேந்திரன்
கவி போசகன்
இராஜமகேந்திரவர்மம் என்ற நகரை நிறுவிய இராஜ ராஜ நரேந்திரன்
கீழைச் சாளுக்கிய அரசன்
ஆட்சிக்காலம்அண். 1019 – அண். 1061
முன்னையவர்விமலாதித்யன்
பின்னையவர்இராஜேந்திரன்
இறப்பு1061
வாழ்க்கைத் துணைகள்அம்மங்கை தேவி
குழந்தைகளின்
பெயர்கள்
இராஜேந்திரன்
அரசமரபுகீழைச் சாளுக்கியர்
தந்தைவிமலாதித்யன்
தாய்குந்தவை
மதம்இந்து சமயம்

இராஜராஜ நரேந்திரன் (Rajaraja Narendra) ( ஆட்சி 1022-1061 கி.பி ) [1] தென்னிந்தியாவில் வேங்கி இராச்சியத்தின் கீழைச் சாளுக்கிய மன்னர் ஆவார். இராஜராஜ நரேந்திரன் ராஜமகேந்திராவரம் (தற்போதைய ராஜமன்றி) என்ற நகரை நிறுவினார். இவரது காலம் அதன் சமூக மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு பிரபலமானது. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சியின் போது, ராஜமகேந்திராவரம் மேலைச் சாளுக்கியரால் சூறையாடப்பட்டது. சோழ வம்சத்தின் அரசியல் ஆதரவுடன் மேலைச் சாளுக்கியருக்கும் மற்ற அண்டை வம்சங்களுக்கும் இடையே போர்கள் நடந்தன.

முதலாம் இராசேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவி, விமலாதித்திய சாளுக்கியரின் மகனான இராஜராஜ நரேந்திரனை மணந்தார். இதன் மூலம் சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையிலான நிலப்பிரபுத்துவ உறவு அரிஞ்சய சோழன் முதல் மூன்று நூற்றாண்டுகளாக தொடர்ந்தது.

இராஜராஜ நரேந்திரனின் மகன், முதலாம் குலோத்துங்க சோழன் என்றும் அழைக்கப்படும் இராஜேந்திர சாளுக்கியன், தனது தாய்வழி மாமாவுக்காக கெடா (தற்போதைய மலேசியா) மீது படையெடுத்தார். சோழ மற்றும் சாளுக்கிய வம்சங்களை ஒன்றிணைத்து கங்கைகொண்டசோழபுரத்தில் சோழப் பேரரசின் மன்னரானார். அவர் ஒரு தாராளவாத ஆட்சியாளராக இருந்தார். மேலும், தனது ஆட்சியின் போது அவரது தளபதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு பல நில மானியங்களை வழங்கினார். வரிகளை தளர்த்தியதால், 'சுங்கம் தவிர்த்த சோழன்' என்றும் அழைக்கப்பட்டார்.

கிழக்கு சாளுக்கியர்களின் மூதாதையரான குப்ஜா விஷ்ணுவர்தனன் தனது திம்மாபுரம் தகடுகளில் மானவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டார்.[2] விஜயநகரப் பேரரசின் அரவிடு வம்சத்தினர் இராஜராஜ நரேந்திரனின் வம்சாவளியைக் கூறினர். இருப்பினும் அவர்கள் ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. [3]

இலக்கியப் படைப்புகள்[தொகு]

கீழைச் சாளுக்கிய வம்சம் சைனம் மற்றும் சைவ சமயத்தை ஆதரித்தது. இராஜராஜ நரேந்திரன் தானும் ஒரு சைவராக அறிவித்தார். மத குருமார்களை மதித்து தமிழ், தெலுங்கு, சமசுகிருதம் ஆகிய மொழிகளையும் மதங்களையும் வளர்த்தார். மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்க்குமாறு தனது ஆசிரியரும், ஆலோசகரும், அரசவைக் கவிஞருமான நன்னய்யா என்ற கவிஞரைக் கேட்டுக் கொண்டார். இருப்பினும், நன்னய்யா காவியத்தின் இரண்டரை பர்வங்களை மட்டுமே மொழிபெயர்க்க முடிந்தது.

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. G. V., Subrahmanyam (1997). Paniker, Ayyappa (ed.). Medieval Indian Literature: Surveys and selections (in ஆங்கிலம்). சாகித்திய அகாதமி. p. 537. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0365-5.
  2. A. Murali. Rattan Lal Hangloo, A. Murali (ed.). New themes in Indian history: art, politics, gender, environment, and culture. Black & White, 2007. p. 24.
  3. M. S. Nagaraja Rao, Mythic Society (Bangalore, India). The Chālukyas of Kalyāṇ̄a: seminar papers. Mythic Society, 1983 - History - 236 pages. p. 63.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ_ராஜ_நரேந்திரன்&oldid=3793494" இலிருந்து மீள்விக்கப்பட்டது