இரவி இரஞ்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு தலைமை நீதிபதி
இரவி இரஞ்சன்
தலைமை நீதிபதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 நவம்பர் 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பதவியில்
10 நவம்பர் 2018 – 16 நவம்பர் 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி பாட்னா உயர் நீதிமன்றம்
பதவியில்
14 ஜூலை 2008 – 9 நவம்பர் 2018
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதீபா பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 திசம்பர் 1960 (1960-12-20) (அகவை 63)
பாட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிபட்னா பல்கலைக்கழகம்

இரவி இரஞ்சன் (Ravi Ranjan)(பிறப்பு 20 டிசம்பர் 1960) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.[1][2] பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் மற்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

கல்வி[தொகு]

இரவி இரஞ்சன் 1960-ல் பாட்னாவில் பிறந்தார். இவர் புவியியல் பாடத்தில் முது நிலை அறிவியல் பட்டத்தினை பாட்னா பல்கலைக்கழகத்தில் பெற்ற பின்னர் 1989-ல் எல். எல். பி. சட்டப் படிப்பினை பாட்னா சட்டக் கல்லூரியில் படித்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பீகார் பொறியியல் கல்லூரியின் குடிசார் பொறியியல் பிரிவில் பகுதி நேர விரிவுரையாளராகச் சேர்ந்தார். இளங்கலைச் சட்டம் படிப்பினை முடித்தவுடன், இரஞ்சன் சட்டப் பயிற்சிக்காக பாட்னா உயர் நீதிமன்றத்தில் சேர்ந்தார்.

சட்டப் பணி[தொகு]

இரஞ்சன் 26 ஜூன் 2004 அன்று மூத்த நிலை வழக்கறிஞராக இந்திய ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டார். 14 ஜூலை 2008 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இரஞ்சன் பதவி உயர்வு பெற்றார். ஜனவரி 16, 2010 அன்று நிரந்தர நீதிபதியானார். இவர் நவம்பர் 17, 2019 அன்று ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Justice Dr Ravi Ranjan takes oath as Chief Justice of Jharkhand HC". newsonair.com. Archived from the original on 2021-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  2. Biju, Rintu Mariam. "Justice Ravi Ranjan appointed as Chief Justice of Jharkhand HC [Read Notification]". Bar and Bench - Indian Legal news (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  3. "Hon'ble The Chief Justice Dr. Ravi Ranjan | High Court of Jharkhand, India". jharkhandhighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
  4. patnahighcourt.gov.in http://patnahighcourt.gov.in/error.htm?aspxerrorpath=/Judges_Dtl.aspx. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவி_இரஞ்சன்&oldid=3593370" இலிருந்து மீள்விக்கப்பட்டது