இரபேல் பவுசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரபேல் பவுசோ (Raphael Bousso) (/ˈbs/) (பிறப்பு 1971) ஒரு கோட்பாட்டு இயற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். அவர் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் கோட்பாட்டு இயற்பியலுக்கான பெர்க்லி மையத்தில் பேராசிரியராக உள்ளார். இவர் புடவிசார் தகவல் உள்ளடக்கத்தில் பவுசோ வரம்புக்காக பெயர் பெற்றவர்.[1][2][3] ஜோசப் போல்சின்சுகியுடன் பவுசோ அண்டவியல் மாறிலி சிக்கலுக்கு ஒரு தீர்வாக,சரக் கோட்பாட்டுக் கிடப்பியலை முன்மொழிந்தார்.[4][5]

வாழ்க்கையும் தொழிலும்.[தொகு]

மறைந்த அறிவியலாளர் டினோ புவுசோவின் மகனான பவுசோ , இசுரேலின் கைப்பாவில் பிறந்தார். அவர் செருமானிய ஆக்சுபர்கில் வளர்ந்தார் , அங்கு அவர் 1990 முதல் 1993 வரை இயற்பியல் படித்தார்.[6] 1997 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் , அவரது முனைவர் வழிகாட்டி சுட்டீவன் ஆக்கிங் ஆவார். பவுசோ 2000 வரை சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்திலும் , 2002 வரை சாண்டா பார்பராவில் உள்ள காவ்லி கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்திலும் முதுமுனைவர் ஆராய்ச்சி செய்தார். 2002 - 03 இல் பவுசோ ஆர்வர்டு பல்கலைக்கழக இயற்பியல் துறையிலும் இராடுகிளிப் உய்ராய்வு நிறுவனத்திலும் ஆய்வு ஊழியராக இருந்தார். 2002 முதல் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக உள்ளார். 2012 ஆம் ஆண்டில் , அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராக " இணைமாறி இயலாற்றல் பிணைப்பு, சர நிலப்பரப்பு உள்ளிட்ட குவைய அண்டவியல் துறையில் அடிப்படை கண்டுபிடிப்புகளுக்காக " பவுசோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

ஆராய்ச்சி[தொகு]

பவுசோவின் ஆராய்ச்சி குவைய ஈர்ப்பிலும் அண்டவியலிலும் குறிப்பாக குவையத் தகவல் ஆய்வு வழி கவனம் செலுத்துகிறது.[8] அவரது 1999 ஆம் ஆண்டைய ஆய்வு[1] இணைமாறி இயலாற்றல் பிணைப்புள்ள (பவுசோ பிணைப்பு) குவையத் தகவல்களுக்கும் காலவெளி வடிவவியலுக்கும் (அதாவது ஈர்ப்பு விசை) இடையே ஒரு பொதுவான உறவை நிறுவியது.[9] பின்னர் பவுசோ பிணைப்பு சீராக்கி வலுப்படுத்தப்பட்டு, அது குவையச் சுழி ஆற்றல் நிலை முத்லான குவையத் தொகுதியின் கோட்பாட்டில் நிறுவக்கூடிய பல புதிய முடிவுகளுக்கு வழிவகுத்தது.[10][11][12][13] கருந்துளை தகவல் முரண்பாடு (ஃபயர்வால் சிக்கல்) குறித்தும் பவுசோ பணியாற்றியுள்ளார்.[14] 2018 முதல் குவைய ஈர்ப்பு, குவையத் தகவல், குவையக் கணிப்பு, இடையேயான உறவுகளை ஆராய்ந்து மேம்படுத்தும் கோட்பாட்டு, செய்முறை இயற்பியலாளர்களின் கூட்டமைப்பை அவர் வழிநடத்தியுள்ளார்.[15][16]

2000ஆம் ஆண்டில் பவுசோவும் ஜோசப் போல்சின்சுகியும் சரக் கோட்பாடு பல நீண்ட கால வெற்றிடங்களைக் கொண்டுள்ளது என்றும் இதில் அண்டவியல் மாறிலியின் (வெற்றிட ஆற்றல்) கவனிக்கப்பட்ட நேர்முக மதிப்புடன் இணக்கமான தீர்வுகள் உள்ளன என்றும் வாதிட்டனர்.[4] இது "சரக் கோட்பாட்டின் நிலப்பரப்பு" என்று அழைக்கப்பட்டது.[17] பவுசோ சரக் கோட்பாட்டு நிலப்பரப்பை நிறுவும் இறுதி குறிக்கோளுடன் அண்டவியல் அளவீட்டு சிக்கலுக்கான தன் அணுகுமுறையை உருவாக்கியுள்ளார்.[18]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bousso, Raphael (13 Aug 1999). "A Covariant Entropy Conjecture". Journal of High Energy Physics 1999 (7): 004. doi:10.1088/1126-6708/1999/07/004. Bibcode: 1999JHEP...07..004B. 
  2. Bousso, Raphael (9 Aug 1999). "Holography in General Space-times". Journal of High Energy Physics 1999 (6): 028. doi:10.1088/1126-6708/1999/06/028. Bibcode: 1999JHEP...06..028B. 
  3. Bousso, Raphael (5 Aug 2002). "The holographic principle". Reviews of Modern Physics 74 (3): 825–874. doi:10.1103/RevModPhys.74.825. Bibcode: 2002RvMP...74..825B. 
  4. 4.0 4.1 Bousso, Raphael; Polchinski, Joseph (14 Jul 2000). "Quantization of four form fluxes and dynamical neutralization of the cosmological constant". Journal of High Energy Physics 2000 (6): 006. doi:10.1088/1126-6708/2000/06/006. Bibcode: 2000JHEP...06..006B. 
  5. Bousso, Raphael; Polchinski, Joseph (2004). "The string theory landscape". Scientific American 291 (3): 78–87. doi:10.1038/scientificamerican0904-78. பப்மெட்:15376755. Bibcode: 2004SciAm.291c..78B. https://archive.org/details/sim_scientific-american_2004-09_291_3/page/78. 
  6. "Bousso group members". பார்க்கப்பட்ட நாள் 2020-10-10.
  7. "APS Fellowship 2012".
  8. "Bousso Group". பார்க்கப்பட்ட நாள் 2010-11-13.
  9. "The Holographic Principle". Scientific American. பார்க்கப்பட்ட நாள் 2018-08-27.
  10. "Proof of a Quantum Bousso Bound".
  11. "Proof of the Quantum Null Energy Condition".
  12. "A General Proof of the Quantum Null Energy Condition".
  13. "Black Holes, Quantum Information, and Unification". பார்க்கப்பட்ட நாள் 2018-08-27.
  14. Overbye, Dennis (12 August 2013). "A Black Hole Mystery Wrapped in a Firewall Paradox, New York Times, August 13, 2013". The New York Times. https://www.nytimes.com/2013/08/13/science/space/a-black-hole-mystery-wrapped-in-a-firewall-paradox.html. 
  15. "GeoFlow Award" (PDF). பார்க்கப்பட்ட நாள் October 10, 2020.
  16. "geoflow". sites.google.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
  17. Bousso, Raphael (2006-11-06). "Holographic probabilities in eternal inflation". Physical Review Letters 97 (19): 191302. doi:10.1103/PhysRevLett.97.191302. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9007. பப்மெட்:17155610. Bibcode: 2006PhRvL..97s1302B. 
  18. "A geometric solution to the coincidence problem, and the size of the landscape as the origin of hierarchy".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரபேல்_பவுசோ&oldid=3780009" இலிருந்து மீள்விக்கப்பட்டது