உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோ சீன வன ஓணான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோ சீன வன ஓணான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கலோட்சு
இனம்:
க. ஜெர்டோனி
இருசொற் பெயரீடு
கலோட்சு ஜெர்டோனி
குந்தர், 1870[1]

இந்தோ சீன வன ஓணான் அல்லது ஜெர்டன் வன ஓணான் என பொதுவாக அறியப்படும் (Calotes jerdoni-கலோட்சு ஜெர்டோனி), அகாமிடே சேர்ந்த ஒரு பல்லி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் சீனா மற்றும் தெற்காசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

சொற்பிறப்பியல்

[தொகு]

ஜெர்டோனி என்ற சிற்றினப் பெயர் பிரித்தானிய உயிரியலாளர் தாமசு சி. ஜெர்டனின் நினைவாக இடப்பட்டுள்ளது.[2] பொதுவான பெயர்களில் பச்சை வன ஓணான், பச்சை தோட்டப் பல்லி, இந்தோசீன வனப் பல்லி மற்றும் ஜெர்டனின் வன ஓணான் ஆகியவை அடங்கும்.

விளக்கம்/அடையாளம்

[தொகு]
சி. ஜெர்டோனி

உடல் அமைப்பு: தட்டையான உடலுடன் காணப்படும் இந்த ஓணான் கலோட்டசு மரியா போலக் காணப்படும்.[3] முதுகு மற்றும் பக்கவாட்டு செதில்கள் மேல்நோக்கிக் காணப்படும்.

வண்ணம்: முதுகுப்புறம் ஆழ்ந்த பச்சை நிறத்துடன் கூடிய மஞ்சள், ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் சில நொடிகளுக்குத் தன் உடலை அடர் பழுப்புநிறமாக மாற்றும் திறனுடையது.

நீளம்: இது அதிகபட்சமாக 38.5 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. பொதுவாக இதன் சராசரி நீளம் 32 செ.மீ.

பரவலும் வாழிடமும்

[தொகு]

வங்கதேசம், பூட்டான், சீனா (மே. யுன்னான், ஜிசாங் = திபெத்து) இந்தியா (அசாம் & சில்லாங்கில் உள்ள காசி மலைகள் மற்றும் மியான்மர் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது

நிலப்பரப்பு மற்றும் தாவர சூழ் பகுதிகள் உள்ளிட்ட பல வகையான காடுகளில் காணப்படும்.[3] அடர்ந்த மற்றும் புதர் நிறைந்த மலைக் காடுகளை விரும்புகிறது.[4] இவை மரமேறுவதில் திறமையானவை. மரங்கள் மற்றும் புதர்களின் மீது வேகமாக நகரும் தன்மையுடையன. இது பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக உள்ளது.[4]

உணவு

[தொகு]

பூச்சியுண்ணியான இந்தோ சீன வன ஒணான் பெரும்பாலும் பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. ஆனால் சில நேரங்களில் பறவை-முட்டைகள், குஞ்சுகளையும் தவளையும் உண்ணுகின்றன.[4]

இனப்பெருக்கம்

[தொகு]

முட்டையிட்டு இனப்பெருக்க செய்யும் இந்த ஓணானின் இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது. அப்போது ஆண்களின் நெற்றியில் பிரகாசமான நிறம் உருவாகும். இக்காலத்தில் பெண் ஓணான்களைத் துரத்தத் தொடங்குகிறது. பெண் மென்மையான மண்ணில் ஒரு சிறிய குழியினைத் தோண்டி 23 முட்டைகள் வரையிட்டு அடைகாக்கும்.[4]

அச்சுறுத்தல்

[தொகு]

நஞ்சற்ற இந்த ஓணானால் மனிதருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. {Species Calotes jerdoni at The Reptile Database www.reptile-database.org
  2. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Calotes jerdoni, p. 134)
  3. 3.0 3.1 TIKADER, B.K.; SHARMA, R.C. "Indian Lizards Handbook" (PDF). Faunaofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
  4. 4.0 4.1 4.2 4.3 "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2018-09-21. பார்க்கப்பட்ட நாள் 2015-10-26.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

மேலும் வாசிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோ_சீன_வன_ஓணான்&oldid=4068209" இலிருந்து மீள்விக்கப்பட்டது