இந்திய உழவாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய உழவாரன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏரோதிராமசு
இனம்:
ஏ. யுனிகலர்
இருசொற் பெயரீடு
ஏரோதிராமசு யுனிகலர்
(ஜெர்டன், 1840)
வேறு பெயர்கள் [2]
  • 'கோலோகாலியா யுனிகலர் (ஜெர்டன், 1840)
  • கிருண்டோHirundo யுனிகலர் ஜெர்டன், 1840

இந்திய உழவாரன் அல்லது இந்திய உண்ண ஏற்ற கூடு உழவாரன் (Aerodramus unicolor) என்பது ஒரு சிறிய உழவாரன் ஆகும். இது இலங்கை மற்றும் தென்மேற்கு இந்தியாவின் மலைப்பகுதிகளில் கூட்டமாக இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது.

விளக்கம்[தொகு]

இந்திய உழவாரன் பறவை ஊர்க்குருவியை விட அளவில் சிறியதாக சுமார் 12 செமீ நீளமுள்ளது. இதன் அலகு சிறியதாக வலுவின்றிக் கருப்பு நிறமாக இருக்கும். விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் வெளிர் சிவப்பு தோய்ந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி அடர் பழுப்பாகவும், கீழே வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இறக்கைகள் நீலம் தோய்ந்திருக்கும். மார்பும் வயிறும் சாம்பல் நிறமாக இருக்கும். இது பிறை அல்லது பூமராங்கை ஒத்த பின் இறக்கைகளைக் கொண்டுள்ளது. இதன் உடல் மெல்லியதாகவும், வால் குறுகியதாகவும், சற்று உள்தள்ளியதாக இருக்கும்.

இரு பாலினத்தவையும், இளம் பறவைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும். இந்திய உழவாரன் மிகவும் குறுகிய கால்களைக் கொண்டுள்ளது. அது குகையின் செங்குத்து மேற்பரப்புகளில் ஒட்டிக்கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறது. ஏனெனில் உழவாரன்கள் எப்போதும் தரையில் தானாக முன்வந்து அமர்வதில்லை.

இந்த உழவாரன்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை பறந்தே கழிக்கின்றன. இவை தங்கள் அலகால் பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்டு வாழ்கின்றன.

நடத்தை[தொகு]

இவை மலைகளில் பெரும் பாறைகளையும் குகைகளையும் சார்ந்து பெருங் கூட்டமாகத் திரியும். மாலை நேரத்தில் பெரும் கூட்டமாக மலைக் குகைகளுக்கு இவை திரும்புவதைக் காண இயலும். அக்காட்சி பழுத்த இலைகள் காற்றில் உதிர்வது போல இருக்கும். அப்போது அதே குகைகளில் இருந்து வௌவால்கள் இரைதேட வெளியே புறப்படும். பொதுவாக குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் உமிழ் நீரைப் பயன்படுத்தி வெண்மை நிறத்தில் கூடு அமைக்கும். கூடுகள் ஒழுங்கின்றி நெருக்கமாகக் கட்டபட்டிருப்பதைக் காண இயலும். கூட்டை ஆண் உழவாரன்கள் அமைக்கின்றன. அதில் பெண் பறவை இரண்டு முட்டைகளை இடும்.

சிட், சிட், சிட் என சிறு குரலில் கத்தியபடி பறக்கும்.

ஒப்பீட்டளவில் சுவையற்ற இதன் கூடுகளை அறுவடை செய்து, கோழிக் கறி, மசாலா மற்றும் பிற சுவையான பொருட்கள் சேர்க்ககபட்டு பறவையின் கூடு சூப்பாக செய்யும் பழக்கம் சில நாடுகளில் உள்ளது. இது பாலுணர்வைத் தூண்டுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் கேரளாவில் உள்ள தட்டைக்காட்டில் இந்திய உழவாரன்

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Aerodramus unicolor". IUCN Red List of Threatened Species 2016: e.T22686516A93115618. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22686516A93115618.en. https://www.iucnredlist.org/species/22686516/93115618. பார்த்த நாள்: 17 February 2023. 
  2. "Aerodramus unicolor (Jerdon, 1840)". Global Biodiversity Information Facility (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.

குறிப்புதவி நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_உழவாரன்&oldid=3784916" இலிருந்து மீள்விக்கப்பட்டது