உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பெருச்சாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பெருச்சாளி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பே. இண்டிகா
இருசொற் பெயரீடு
பேண்டிகோட்டா இண்டிகா

இந்தியப் பெருச்சாளி (greater bandicoot rat, bandicota indica) என்பது எலிக்குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை வங்காளதேசம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவை 27-29 செ.மீ வரை வளரக்கூடியவை.

பெருச்சாளியானது அடர் சாம்பல்-பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும், உடலில் நீண்ட, கருப்பு முடிகள் நிறைந்திருக்கும். சில பெருச்சாளிகளின் உடலானது நீளமான, கருப்பு முடிகளுடனும் பக்கவாட்டுப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். சிறிய, வெளிர் சாம்பல் நிற ரோமங்கள் உடல் அடிப்பகுதியின் பரப்புகளில் காணப்படும். இவை கருமையான செதிலுள்ள வால் மற்றும் வெளிர் நிற நகங்களைக் கொண்ட கருமையான பாதங்களைக் கொண்டுள்ளன. பெருச்சாளிக் குட்டிகள் மிகவும் வெளிர் நிறத்தில் இருக்கும். இலங்கையில் பெருச்சாளி மஹா உரு-மீயா என்று அழைக்கப்படுகிறது, சிங்கள மொழியில் அதன் பொருள் "பன்றி-எலி" என்பதாகும். நேபாளி மொழியில் சுச்சுந்திரா என்று அழைக்கப்படும் பல விலங்குகளில் இவையும் ஒன்று.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Aplin, K.; Lunde, D.; Molur, S. (2017). "Bandicota indica". IUCN Red List of Threatened Species 2016: e.T2541A115062578. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T2541A22447469.en. https://www.iucnredlist.org/species/2541/115062578. பார்த்த நாள்: 8 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_பெருச்சாளி&oldid=4026903" இலிருந்து மீள்விக்கப்பட்டது