இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம்
Indian Institute of Millets Research
भारतीय कदन्न अनुसंधान संस्थान
வகைஇந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழும நிறுவனம்
உருவாக்கம்1958
சார்புICAR
அமைவிடம், ,
இணையதளம்millets.res.in

இந்தியச் சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Millets Research) என்பது தெலங்காணாவில் ஐதராபாத்து நகரில் உள்ள இராஜேந்திரநகரில் அமைந்துள்ள சோளம் மற்றும் பிற சிறுதானியங்களில் அடிப்படை மற்றும் மூலோபாய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படுகிறது. இது தினை இனப்பெருக்கம், மேம்பாடு, நோயியல் மற்றும் மதிப்புக் கூட்டல் பற்றிய விவசாய ஆராய்ச்சிகளை நடத்துகிறது. இந்தியச் சிறுதானிய ஆய்வு நிறுவனம், சோளம் மீதான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டங்கள்[1] மூலம் தேசிய அளவில் சோள ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதுடன் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆய்வுத் தொடர்பைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

இந்தியச் சிறுதானிய ஆய்வு நிறுவனம் 1958ஆம் ஆண்டு முதன்முதலில் பருத்தி, எண்ணெய் வித்துக்கள் மற்றும் தினைகள் மீதான தீவிர ஆராய்ச்சிக்கான திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.[2] சோளம், ஆமணக்கு, நிலக்கடலை, துவரை மற்றும் பருத்தி போன்ற முக்கியமான உலர்நில பயிர்கள் மற்றும் பயிர் முறைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது. சோளம் சார்ந்த பயிர் முறைகள்.[3] இந்த நிறுவனம் 2014-ல் தற்போதைய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனமாகத் தரம் உயர்த்தப்பட்டது.

கட்டாய பயிர்கள்[தொகு]

மதிப்பு கூட்டல் ஆய்வகம்

இந்நிறுவனம் மரபுசார் மற்றும் உயிரி தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்திப் பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சிகளை சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு மற்றும் கருவரகு முதலிய சிறுதானியங்களில் மேற்கொண்டு வருகின்றது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ":: Indian Institute Of Millets Research(IIMR) ::". பார்க்கப்பட்ட நாள் 2017-05-04.
  2. "History of Agricultural Research in India" (PDF).
  3. "Indian Agricultural research History" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2017-05-18.