ஆ. தியாகராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. தியாகராஜா
A. Thiagarajah

நாஉ
Dr A Thiyagarajah-287x397.jpg
வட்டுக்கோட்டை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–1977
முன்னவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
பின்வந்தவர் தா. திருநாவுக்கரசு
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 17, 1916(1916-04-17)
மலேசியா
இறப்பு 25 மே 1981(1981-05-25) (அகவை 65)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மகேசுவரி
தொழில் ஆசிரியர்
சமயம் இந்து

ஆறுமுகம் தியாகராசா (Arumugam Thiagarajah, 17 ஏப்ரல் 1916 – 25 மே 1981) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தியாகராசா, ஆறுமுகம் மற்றும் அமிர்தவல்லி ஆகியோருக்கு 1916 ஏப்ரல் 17 இல்[1] மலேசியாவில் பிறந்தார். தனது எட்டு வயதில் இலங்கை வந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். பின்பு இவர் சென்னை அடையாறு கலாசேத்திராவில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றார்.[2]

1936 இல் இளங்கலைப் பட்டமும், 1938 இல் முதுகலைப் பட்டமும், 1941 இல் எம்.லிட்., பட்டமும் பெற்று இலங்கை திரும்பி காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] 1942 இல் மகேசுவரி சிவகுருநாதன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2] 1946 இல் காரைநகர் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று,[3] 1970 இல் கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் இறங்கினார். 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார்.[2]

அரசியலில்[தொகு]

தியாகராசா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு கட்சியின் வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ. அமிர்தலிங்கத்தை 725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களில் அவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி அரசில் சேர்ந்து புதிய குடியரசு அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தார்.[5][6] 1972 ஆம் ஆண்டில் இவரது கொழும்பு இல்லத்தில் வைத்து இவர் மீது இடம்பெற்ற கொலை முயற்சியில் உயிர் தப்பினார்.[5]

தியாகராசா 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் தா. திருநாவுக்கரசுவிடம் 18,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[7] இவர் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். 1981 சூன் 4 இல் நடத்தப்படவிருந்த முதலாவது மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[8] ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக ஈழப்போராளிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.[9]

படுகொலை[தொகு]

1981 மே 24 இல் மூளாய் என்ற ஊரில் கட்சித் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு இரவு பத்தரை மணியளவில் தனது வாகனத்தில் வந்து அமர்ந்த போது புளொட் போராளி ஒருவரால் சுடப்பட்டார்.[3][10] இவர் பின்னர் அவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[9] அடுத்த நாள் 1981 மே 25 அன்று இரவு 07:30 மணியளவில் தனது 65-ஆவது அகவையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Thiagarajah, Arumugam". இலங்கைப் பாராளுமன்றம்.
 2. 2.0 2.1 2.2 2.3 "வெள்ளி விழா அதிபர் அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை". காரை இந்து கனடா. 15 பெப்ரவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 டி. பி. எஸ். ஜெயராஜ் (16 March 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". The Nation. Archived from the original on 20 பிப்ரவரி 2014. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm. 
 4. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2009-12-09 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-08-24 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 5. 5.0 5.1 Sri Kantha, Sachi (30 May 2013). "Book Burning in 1933 and 1981: Nazi and Sinhalese goons: style comparisons". Sangam.
 6. Rajasingham, K. T.. "Chapter 24: Tamil militancy - a manifestation". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-02-13. https://web.archive.org/web/20020213090010/http://www.atimes.com/ind-pak/DA26Df04.html. பார்த்த நாள்: 2013-08-24. 
 7. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2011-07-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-08-24 அன்று பார்க்கப்பட்டது.
 8. ராஜன் ஹூல்; Somasundaram, Daya; Sritharan, Kopalasingham; ராஜினி திராணகம (1990). "Chapter 2: Some Milestones in the Development of Tamil Political Consciousness". Broken Palmyra. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. http://www.uthr.org/BP/volume1/Chapter2.htm. 
 9. 9.0 9.1 Rajasingham, K. T.. "Chapter 27 - Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-06-22. https://web.archive.org/web/20020622185747/http://www.atimes.com/ind-pak/DB16Df06.html. பார்த்த நாள்: 2013-08-24. 
 10. Sabaratnam, T. (10 October 2010). "The order: Chase voters and stuff ballot boxes". The Nation. Archived from the original on 4 மார்ச் 2016. https://web.archive.org/web/20160304031948/http://www.nation.lk/2010/10/10/newsfe7.htm. 
 11. "முன்னாள் வட்டு எம்பி தியாகர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி" (அச்சு). ஈழநாடு (யாழ்ப்பாணம்). மே 25, 1981. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._தியாகராசா&oldid=3680316" இருந்து மீள்விக்கப்பட்டது