ஆ. கார்மேகக் கோனார்
ஆ. கார்மேகக் கோனார் | |
|---|---|
| பிறப்பு | 27 திசம்பர் 1889 அகத்தாரிருப்பு, இராமநாதபுரம் |
| இறப்பு | அக்டோபர் 22, 1957 (அகவை 67) |
| அறியப்படுவது | தமிழறிஞர், பேராசிரியர் |
ஆ. கார்மேகக் கோனார் (Karmegha Konar) மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர், தமிழறிஞர், சொற்பொழிவாளர், எழுத்தாளர்.
பிறப்பு
[தொகு]கார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் நாளன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.[1]
பணி
[தொகு]மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி 1951ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.[2] அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்கச் சிலர்:
- பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என். சங்கரய்யா
- தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநர் வே. தில்லைநாயகம்
- நிலச்சீர்திருத்தப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
- அரசுச் செயலர் கி. லட்சுமிகாந்தன் பாரதி
இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
விருது
[தொகு]இவருக்கு மதுரையில் 1955ஆம் ஆண்டு சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் செந்நாப்புலவர் என்னும் பட்டத்தை பி. டி. இராசன் வழங்கினார்.[2]
ஆக்கங்கள்
[தொகு]இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்:
- அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்)
- ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
- இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்)
- ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
- ஒட்டக்கூத்தர்
- கண்ணகி தேவி
- காப்பியக் கதைகள்
- கார்மேகக் கோனார் கட்டுரைகள்
- கார்மேகக் கோனார் கவிதைகள்
- செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
- பாலபோத இலக்கணம்
- மதுரைக் காஞ்சி
- மலைபடுகடாம் ஆராய்ச்சி
- மூவருலா ஆராய்ச்சி
- தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
- தமிழ்மொழியின் மறுமலர்ச்சி
- நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)
இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி உள்ளது.[3][4]
மறைவு
[தொகு]கார்மேகர் 22-10-1957ஆம் நாள் மதுரையில் மறைந்தார்.[2]
சான்றடைவு
[தொகு]- ↑ தினமலர். "இதே நாளில் அன்று". Retrieved 2024-12-27.
- ↑ 2.0 2.1 2.2 திராவிடநாடு (இதழ்) 3-11-1957, பக்.2
- ↑ "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - ஆ. கார்மேகக் கோனார்". www.tamilonline.com. Retrieved 2022-03-19.
- ↑ "தமிழ் வளர்ச்சி மானிய கோரிக்கை எண். 46 கொள்கை விளக்கக் குறிப்பு 2008-2009" (PDF). Archived from the original (PDF) on 2022-03-19. Retrieved 2022-03-19.