பொ. தி. இராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பி. டி. இராசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சர்
பி. டி. ராஜன்
பி. டி. ராஜன் (1934)
கம்பம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
19521957
ஆளுநர்ஸ்ரீ பிரகாசா
ஏ. ஜே. ஜான் அன்னபரம்பில்
முதல்வர்சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி,
காமராஜர்
சென்னை மாகாண முதல்வர்
பதவியில்
ஏப்ரல் 4, 1936 – ஆகஸ்டு 24, 1936
ஆளுநர்எர்ஸ்கைன் பிரபு
முன்னையவர்பொபிலி அரசர்
பின்னவர்பொபிலி அரசர்
சென்னை மாகாண பொதுப்பணித்துறை அமைச்சர்
பதவியில்
1930–1937
பிரதமர்பொபிலி அரசர்
ஆளுநர்எர்ஸ்கைன் பிரபு
பின்னவர்பி. கலீஃபுல்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1892
உத்தமபாளையம் , தமிழ்நாடு , இந்தியா இந்தியா
இறப்பு1974
உத்தமபாளையம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிநீதிக்கட்சி
முன்னாள் கல்லூரிலேய்ஸ் பள்ளி, கேம்பிரிச்,
ஜீசஸ் கல்லூரி, ஆக்சுபோர்டு
தொழில்வழக்கறிஞர்

பி. டி. ராஜன் என்றழைக்கப்பட்ட பொன்னம்பல தியாகராஜன் (18921974) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார்.[1][2] ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி. டி. ராஜன் 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார். 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். முதல்வராக இருந்த பொபிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை மாகாணத்தின் தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தார். 1944 இல் பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இணைய மறுத்து விட்டார். 1944 முதல் பி. டி. ராஜனின் தலைமையில் நீதிக்கட்சி என்ற பெயரில் போட்டி நீதிக்கட்சியாக ஒரு தனிக் கட்சி செயல்பட்டு வந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் ராஜனின் தலைமையில் பதினான்கு இடங்களில் போட்டியிட்டது. இத்தேர்தலில் ராஜன் மட்டும் கம்பம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 1957 சட்டமன்றத் தேர்தலில் உத்தமபாளையம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் அவர் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. பி. டி. ராஜன் 1974 இல் மரணமடைந்தார். இவரது மகன் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் பின்னாளில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பணியாற்றினார்.[3][4][5][6]

பி.டி. இராசனின் நினைவைப் போற்றும் வகையில் வகையில் மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னை கலைஞர் கருணாநிதி நகரிலும் இருக்கும் சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Provinces of British India". World Statesmen. பார்க்கப்பட்ட நாள் 2008-10-20.
  2. "List of Chief Ministers of Tamil Nadu". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2008-10-20.
  3. The Times of India Directory and Year Book, Including Who's who. Bennett, Coleman & Co.. 1977. பக். 982. 
  4. Marshall, Peter James (1996). The Cambridge Illustrated History of the British Empire. Cambridge University. பக். 365. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0521002540, ISBN 9780521002547. https://archive.org/details/isbn_9780521432115. 
  5. Oxford University Calendar. University of Oxford. 1927. பக். 802. 
  6. Balasubramaniam, K. M. (1934). South Indian Celebrities Vol 1. Madras: Solden & Co.. 
  7. முகமது ஹுசைன் (16 சூன் 2018). "தெருவாசகம்: இது ராஜன் பாட்டை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._தி._இராசன்&oldid=3621962" இலிருந்து மீள்விக்கப்பட்டது