ஆஷ் ஷர்கியா பிராந்தியம் (ஓமான்)

ஆள்கூறுகள்: 22°N 59°E / 22°N 59°E / 22; 59
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஷ் ஷர்கியா பிராந்தியம்
ٱلْمِنْطَقَة ٱلشَّرْقِيَّة
Al-Minṭaqah Ash-Sharqiyyah
இப்பிராந்தியத்தின் சுற்றுலா சுற்றுலா தலமான வாடி பானி காலித்.[1][2]
இப்பிராந்தியத்தின் சுற்றுலா சுற்றுலா தலமான வாடி பானி காலித்.[1][2]
ஓமானின் முன்னாள் கிழக்கு பிராந்தியத்தின் அமைவிடம்
ஓமானின் முன்னாள் கிழக்கு பிராந்தியத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்:
நாடு ஓமான்
பிராந்தியம்ஆஷ் ஷர்கியா[3][4]
நேர வலயம்GST (ஒசநே+4)

ஆஷ் ஷர்கியா பிராந்தியம் (Ash Sharqiyah Region, அரபு மொழி: ٱلْمِنْطَقَة ٱلشَّرْقِيَّة‎, romanized: Al-Minṭaqah Ash-Sharqiyyah ' கிழக்கு மண்டலம் ' ) என்பது ஓமான் சுல்தானகத்தின் முன்னாள் பிராந்தியம் ஆகும். இது ஓமானின் கிழக்கு பிராந்தியம் ஆகும். ஆஷ்-ஷர்கியாவின் தலைநகராக சுர் உள்ளது. 28 அக்டோபர் 2011 அன்று ஆஷ் ஷர்கியா பிராந்தியமானது ஆஷ் ஷர்கியா வடக்கு ஆளுநரகம் என்றும் ஆஷ் ஷர்கியா தெற்கு ஆளுநரகம் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது. [3] [4] [5] ஆஷ் ஷர்கியா மண்டலம் பதினொரு மாகாணங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அவை சுர், இப்ரா, அல்-முதாயிபி, அல்-கமில் வால்-வாஃபி, ஜலான் பானி பு ஹாசன், ஜலான் பானி பு அலி, வாடி பானி காலித், தேமா வா தையீன், பிடியா, அல் கபில் மற்றும் மாசிரா என்பவாகும். [3] இதன் முக்கிய மாநகரங்களாக சுர் மற்றும் இப்ரா இருந்தன.

வரலாறு[தொகு]

தொல்லியல்[தொகு]

2019 நவம்பரில், 50-80 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 45 நன்கு பாதுகாக்கப்பட்ட கல்லறைகள் மற்றும் இரும்பு காலத்தின் துவக்ககாலம் வரையிலான ஒரு குடியிருப்பு போன்றவற்றை அல்-முடாபியில் ஓமான் மற்றும் ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆயாவாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம் செப்பு சுரங்கத்தில் பணிபுரியும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு சொந்தமானது என்று தொல்லியல் ஆயாவாளர்கள் கருதினர். [6]

சூழலியல்[தொகு]

குறிப்பாக சுற்றுலா ஆர்வம் மிக்க இடங்களாக கடற்கரை பகுதிகள் உள்ளன. இதில் ராஸ் அல்-ஆத் மற்றும் ரௌஸ் அல்-கைமாவின் ( அரபு மொழி: رَأْس ٱلْغَيْمَة‎ ) மட்டு நிலங்கள் அடங்கும். இந்த இரண்டு இடங்களுக்கிடையில் கடற்கரையின் நீளம் 42 கி.மீட்டர்கள் (26 மைல்கள்) ஆகும். இந்தியப் பெருங்கடலின் தோணியாமைகளுக்கு இப்பகுதி மிக முக்கியமான முட்டையிடும் இடமாகும். இப்பகுதியில் 13,000 ஆமைகள் ஆண்டுதோறும் ஒவ்வொன்றும் 80 முதல் 100 முட்டைகள் வரை தனித்தனியாக இடுகின்றன. [7] ஓமானின் பிராந்திய நகராட்சிகள், சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் இந்த தளத்தை நிர்வகிக்கிறது, இது சுல்தானகத்தின் மிக முக்கியமான இயற்கை காப்பகங்களில் ஒன்றாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. Alimsk (2013-12-20). "Wadi Bani Khalid & Wadi Hawer". Oman Tripper. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
  2. Pedro. "Visiting Wadi Bani Khalid, Oman: A Desert Paradise". Travel With Pedro. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
  3. 3.0 3.1 3.2 Babu Thomas (Web developer or designer). "Governorates of Sultanate Of Oman". Omanet.om. Archived from the original on 2013-12-08. பார்க்கப்பட்ட நாள் 2013-06-09.
  4. 4.0 4.1 "Seven new divisions created in Oman". Khaleej Times. 2011-10-28. Archived from the original on 2013-05-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-09.
  5. Seven governorates, officials named
  6. "Iron Age Tombs Discovered in Oman | ARCHAEOLOGY WORLD" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.
  7. Rouchiche, S. (October 2003). Role of Planted Forests and Trees Outside Forests in Sustainable Forest Management (Rome (Italy): Forestry Department, Food and Agriculture Organization, October 2003), 10. Retrieved 2008-04-20.