உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலோ-ஆலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாலோ-ஹாலோ
Halo-halo
கிண்ணமொன்றில் ஹாலோ-ஹாலோ
பரிமாறப்படும் வெப்பநிலைஈற்றுணவு
தொடங்கிய இடம்பிலிப்பீன்சு
பகுதிபிலிப்பீன்சு
முக்கிய சேர்பொருட்கள்பனி, பால், பலவிதமான பழங்கள்

ஹாலோ-ஹாலோ என்பது புகழ்பெற்ற பிலிப்பின் நாட்டு ஈற்றுணவு ஆகும். இவ்வீற்றுணவு குளிர்ச்சீவலையும் ஆவியாகிய பாலையும் கலந்து தயாரிக்கப்படுகின்றது. இதற்கு கொதித்த இனிப்புப் போஞ்சி, ஜெல்லோ, பழங்கள் ஆகியவற்றை மேலதிகமாகவும் சேர்க்கப்படுகிறது. இது உயரமான குவளையிலோ கிண்ணத்திலோ பரிமாறப்படுகின்றது.

போஞ்சிகள், கொண்டைக் கடலை, சர்க்கரைப் பாணி, வற்றாளை, குலமன், பலாப்பழம் போன்றவையும் இவ்வுணவில் கலக்கப்படுகின்றன. பல உள்ளடக்கப் பொருட்களும் உயரமான குவளையிலோ கிண்ணத்திலோ முதலில் இடப்பட்ட பின்னரே மற்றைய செயற்பாடுகளை மேற்கொள்ளல் வேண்டும். இதற்கு மேலதிகமாக ஐஸ்கிரீம் போன்றவையும் இடப்படுகின்றன. ஆவியாகிய பாலை ஈற்றுணவின் மேலே தெளித்துவிடுவதும் உண்டு.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலோ-ஆலோ&oldid=3722311" இலிருந்து மீள்விக்கப்பட்டது