உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலனின் பெரிய காது வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலனின் பெரிய-காது வெளவால்

Allen's big-eared bat

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: வெசுபெர்டிலியோனிடே
பேரினம்: இடியோனிக்டெரிசு
அந்தோணி, 1923
சிற்றினம்:
இ. பைலோடிசு
இருசொற் பெயரீடு
இடியோனிக்டெரிசு பைலோடிசு
ஜி. எம். ஆலென், 1916

ஆலனின் பெரிய காது வெளவால் (Allen's big-eared bat)(இடியோனிக்டெரிசு பைலோடிசு) வெசுபர் குடும்ப வெளவாலில் இடியோனிக்டெரிசு பேரினத்தின்கீழ் உள்ள ஒரேயொரு சிற்றினமாகும். இது மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவில் அரிசோனா, கலிபோர்னியா, நெவாடா, நியூ மெக்சிகோ, யூட்டா, மற்றும் கொலராடோ [2] பகுதிகளில் காணப்படுகிறது.[1]

விளக்கம்

[தொகு]

இடியோனிக்டெரிசு என்பது 8 முதல் 16 கிராம் எடையுள்ள பெரிய காதுகளைக் கொண்ட வெளவால் ஆகும். இதன் முதுகுபுறத்தில் நீண்ட மென்மையான உரோமங்கள் காணப்படும்.[3] இதனுடைய உரோமங்கள் கருப்பு நிறத்தில் அதனுடைய நுனிப்பகுதியானது மஞ்சள்-சாம்பல் நிறத்தில் காணப்படும். இடியோனிக்டெரிசின் தோள்பட்டையில் கருப்பு நிற சிறு பட்டை காணப்படும். காதுகளின் பின்புறத்தில் உரோம கொத்து வெண்ணிறத்திலும், வயிற்றுப்புறத்தில் கருப்பு உரோமம் வெளிர் நுனியுடன் காணப்படும். கல்கார் குறைந்த கீல் கொண்டுள்ளது. யூரோபடேஜியத்தில் 12 முதல் 13 குறுக்கு விலா எலும்புகள் உள்ளன. ரோஸ்ட்ரம் தட்டையாகவும் அகலமாகவும் உள்ளது.

இடியோனிக்டெரிஸ் பைலோடிசு புறத்தோற்றம் வெளிர் பூச்சிகளைப் போன்ற வெளிப்புற உருவ அமைப்பைக் கொண்டுள்ளது. நிலையான பூச்சிகளை மேற்பரப்புகளிலிருந்து பிடிப்பதற்குத் தேவையான தகவமைப்பினைக் கொண்டுள்ளன.[3] இதைச் செய்ய, இவை நீண்ட டிரகாய், காதுகளையும், மற்றும் சறுக்கிப் பறத்தலையும், மெலிந்த தாடைகளையும் கொண்டுள்ளன. ஆலனின் பெரிய- காது வெளவால் (இடியோனிக்டெரிசு பைலோடிசு) என்பது வட அமெரிக்காவில் உள்ள வெளவால்களில் நீண்ட, நிலையான அதிர்வெண்-பண்பேற்றப்பட்ட விலங்கு எதிரொலியினை வெளவால் ஆகும்.[2]

வரம்பு மற்றும் வாழ்விடம்

[தொகு]

ஆலனின் பெரிய காது வெளவால் மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் வாழ்கிறது. இந்த இனம், 855 மீ முதல் 3,225 மீ வரையிலான உயரத்தில் காணப்படும். பெரும்பாலான வெளவால்கள் 1,100 மீ முதல் 2,500 மீ வரை உயரத்தில் வாழ்கின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Arroyo-Cabrales, J. & Ticul Alvarez Castaneda, S. (2008). "Idionycteris phyllotis". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 7 February 2010.CS1 maint: ref=harv (link)
  2. 2.0 2.1 Hayes, M. A., et al. (2009). Allen's big-eared bat (Idionycteris phyllotis) documented in Colorado based on recordings of its distinctive echolocation call. பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் The Southwestern Naturalist 54(4), 499-501.
  3. 3.0 3.1 3.2 Czaplewski, Nicholas J. (1983-12-15). "Idionycteris phyllotis" (in en). Mammalian Species (208): 1–4. doi:10.2307/3503999. பன்னாட்டுத் தர தொடர் எண்:0076-3519.