ஆம்பல் மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆம்பல் நீர்கொடியில் பூக்கும் பூக்களில் ஒன்று. அல்லி வேறு வகையான நீர்ப்பூ. அல்லி பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள் வேறு. ஆம்பல் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள் வேறு. இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் வெவ்வேறு மலர்கள் என்பதை அறியலாம்.

ஆம்பல் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் விளக்கங்களில் குறிப்பிடத்தக்க சில விளக்கங்கள் மட்டும் இங்குத் தொகுத்துத் தரப்படுகின்றன.
நெய்தல், குவளை, ஆம்பல் ஆகியவை வெவ்வேறு பூக்கள். [1]
குவளை - மணமுள்ள மலர்
ஆம்பல் - மணமில்லா மலர்
இரண்டும் குளத்தில் பூக்கும் [2]
கோட்டி, ஆம்பல், நெய்தல் ஆகியவை வெங்ஙேறு பூக்கள். [3]
ஆம்பல் மெல்லிய இலைகளை உடையது. [4]
உள்ளே துளை கொண்ட ஆம்பல் கொடியில் குழல் என்னும் இசைக்கருவி செய்துகொள்வர். [5]
ஆம்பல் கொடி உள்ளே துளை கொண்டது. [6]
கூம்பு நிற்பது போல ஆம்பல் பூக்கும். [7]
பருமனான கால்களில் ஆம்பல் பூக்கும். [8]
காற்று வீசிம்போது விரியும் வெள்ளை-ஆம்பல் பூ வெண்காக்கை கொட்டாவி விடுவது போல இருக்கும். [9]
வயலில் பூக்கும் ஆம்பல் தழையை களைந்து சேற்றில் அழுத்துவர். [10]
ஆம்பல் செடிகளைக் களை எடுப்பவர் நீரில் நின்றாலும் அந்த நீரை உண்ணமுடியாமல் வேறு நீரைப் பருக விரும்புவர். [11]
ஆம்பல் குளத்திலும் பூக்கும். [12]
கரும்புப் பாத்தியிலும் கூக்கும். [13]
அருவியிலும் பூக்கும். [14]
பல அடுக்குகளைக் கொண்டது. [15]
செந்நிறத்திலும் பூக்கும். [16]
நிலவெளியில் மலரும். [17]
ஆம்பல் இலையில் பொங்கல் சோற்றைப் போட்டுச் சாட்டிவர். [18]
ஆம்பல் கொடியை வளையலாக அணிந்துகொள்வர். [19]

மேற்கோள் குறிப்பு[தொகு]

 1. நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் – பரிபாடல் 2-13
 2. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
  விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
  பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
  கருமங்கள் வேறு படும். நாலடியார் 236
 3. கொட்டியும் ஆம்பல்லும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு – ஔவையார் – மூதுரை 17
 4. மெல்லிலை அரி ஆம்பல் – மதுரைக்காஞ்சி 252
 5. ஆம்பல் அந் தீங்குழல் – குறிஞ்சிப்பாட்டு 222
 6. நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் – நற்ற்றிணை 6
 7. கூம்புநிலை அன்ன முகைய ஆம்பல் – நற்றிணை 280
 8. கணைக்கால் ஆம்பல் – நற்றிணை 230
 9. உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல், சிறு வெண்காக்கை ஆவித்து அன்ன – நற்றிணை 345
 10. வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற்றிணை 390
 11. ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு - குறுந்தொகை 178
 12. பொய்கை பூத்த புழல்கால் ஆம்பல் – ஐங்குறுநூறு 34
 13. கரும்பு நடு பாத்தி கலித்த ஆம்பல் – ஐங்குறுநூறு 65
 14. அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் – பதிற்றுப்பத்து 62
 15. பல அடுக்கல் ஆம்பல் – பரிபாடல் 3-45
 16. செவ்வாய் ஆம்பல் – பரிபாடல் 8-116
 17. மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் – கலித்தொகை 72-6
 18. ஆம்பல் அகல் அமலை வெஞ்சோறு – அகம் 196
 19. ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் – புறம் 352
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பல்_மலர்&oldid=2300083" இருந்து மீள்விக்கப்பட்டது