ஆனேகுந்தி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனேகுந்தி இராச்சியம் (Anegundi Raj) என்பது பெல்லாரி மாவட்டத்திலிருந்த அன்றைய பிரிட்டிசு இராச்சியத்தின் மிக முக்கியமான ஆட்சிப்பகுதிகளில் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் கங்காவதி வட்டத்தில் உள்ளது. சந்திரகிரியில் புகழ்பெற்ற விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கடைசி பேரரசர் மூன்றாம் ஸ்ரீரங்க ராயர் தனது பரம்பரை ஆதிக்கத்தின் ஒரு பகுதியை மீட்டெடுத்தார். முகலாய அரசாங்கத்திடம் இருந்து ஆனேகுந்தி, சித்ரதுர்கா, அரபனஹள்ளி ஆகியவற்றின் ஒரு பகுதியை சாகிராகத் தக்க வைத்துக் கொண்டார். [1]

தோற்றம்[தொகு]

முதலில் இர்கள் அரவிடு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். (விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்காவது வம்சம்). கிருஷ்ணதேவராயரின் மகள் அலிய ராம ராயனை மணந்தார். இதனால் பேரரசு இவர்களிடம் சென்றது.

நிர்வாகம்[தொகு]

ஆனேகுந்தியின் சாகிர்கள் 1749 வரை முகலாயப் பேரரசின் கீழும் பின்னர் 1775 வரை மராட்டியப் பேரரசின் கீழும், திப்பு சுல்தான் அப்போதைய மன்னன் திம்மப்பாவை எதிர்த்து ஆனேகுந்தி நகரத்தை எரிக்கும் வரை இவர்கள் நிலப்பகுதிகளை அனுபவித்தனர். [2]

திப்புவின் செயலுக்குப் பிறகு மன்னன் ஐதராபாத் நிசாமிடம் தப்பிச் சென்றார். அங்கு அவர் 1791 வரை இருந்தார். பின்னர் 1799இல் மீண்டும் தனது நிலங்களை மீண்டும் கைப்பற்றினார். பின்னர் ஆங்கிலேயர்கள் நிலத்தை நிசாமிடம் ஒப்படைத்தனர். மேலும் மன்னன் ஓய்வூதியம் பெறுபவராக மாறி ஆனேகுந்தி அரசன் என்று அழைக்கப்பட்டார். [3]

ஆனேகுந்தி அரசர்கள்[தொகு]

  • 1. நான்காம் ஸ்ரீ ரங்கா (1665-1678)
  • 2. வெங்கடபதி (1678-1680)
  • 3. ஸ்ரீ ரங்கா (1680-1692)
  • 4. வெங்கட ராயன் (1692-1706)
  • 5. ஸ்ரீ ரங்க ராயன் (1706-1716)
  • 6. மகாதேவராயன் (1716-1724)
  • 7. ஸ்ரீ ரங்க ராயன் (1724-1729)
  • 8. வெங்கட ராயன் (1729-1732)
  • 9. இராமன் (1732-1739)
  • 10. வெங்கடபதி ராயன் (1739-1744)
  • 11. திம்மப்பா
  • 12. வெங்கடபதி (1791-1793)

1802 குடியேற்றத்திற்குப் பிறகு

  • 13. திருமலை ராஜா
  • 14. -
  • 15. திருமலை மன்னனின் பேத்தி.
  • 16. திருமலை தேவன் (அவளுடைய மகன்)
  • 17. வெங்கட ராம ராயன் (திருமலை தேவரின் முதல் மகன்)
  • 18. கிருஷ்ணதேவராயர் (திருமலை தேவரின் இரண்டாவது மகன்)
  • 19. நரசிம்ம ராஜா (திருமலை தேவரின் மூன்றாவது மகன்)

(மேலே உள்ள பட்டியலை வரலாற்றாளர் இராபர்ட் செவெல் 1883இல் கொடுத்துள்ளார்).[4]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனேகுந்தி_இராச்சியம்&oldid=3306440" இலிருந்து மீள்விக்கப்பட்டது