ஆனந்தபுரம் சமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தபுரம் சமர்
ஈழப் போர்,
2008-2009 இலங்கை இராணுவத்தின் வடக்கு தாக்குதல் பகுதி
நாள் 29 மார்ச் – 5 ஏப்ரல் 2009[1]
இடம் ஆனந்தபுரம், இலங்கை
இலங்கை இராணுவத்தின் தீர்க்கமான வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
ஆனந்தபுரம் பகுதி இலங்கை அரசால் மீட்கப்பட்டது
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
சரத் பொன்சேகா
சவேந்திர சில்வா[2]
கமல் குணரத்ன[3]
ஜி.வி. ரவிப்ரியா[3]
வேலுப்பிள்ளை பிரபாகரன்
பொட்டு அம்மான்
பிரிகேடியர் தீபன்  
பிரிகேடியர் பானு
பிரிகேடியர் துர்கா  
பிரிகேடியர் விதுசா  
பிரிகேடியர் கடாபி  
பிரிகேடியர் மணிவண்ணன்  
பலம்
இலங்கை தரைப்படை:
58 டிவிசன்
53 டிவிசன்
பணிப் படை 8
50,000 வீரர்கள்[2]
≈1000 போராளிகள்
இழப்புகள்
தெரியவில்லை மூன்று 130 மிமீ பீரங்கி, பல மோட்டார் குண்டுகள், 1 ஜீப், 14.5 மிமீ மற்றும் 1 ஏஏ துப்பாக்கியுடன் பொருத்தப்பட்ட 3 பிக்கப் டிரக்குகள் கைப்பற்றப்பட்டன[4]

ஆனந்தபுரம் சமர் (Battle of Aanandapuram) என்பது இலங்கை இராணுவத்தின், 58 பிரிவு, 53 பிரிவு, அதிரடிப்படை 8 ஆகியவை இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இருந்த கடைசி அரணிருக்கையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக நடத்தபட்ட ஒரு சமராகும். இந்த சமரானது இலங்கை உள்நாட்டுப் போரின்போது நான்காம் ஈழப் போரின் ஒரு பகுதியாக வடக்குப் பகுதியில் நடந்த போரின் ஒரு பகுதியாகும். இது இலங்கையின் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் நடந்தது.[4]

முற்றுகைக்கு உள்ளாதல்[தொகு]

2008 ஆம் ஆண்டு வடக்கு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கை இராணுவம் பல முனைகளில் சீராக முன்னேறி வந்தது. விடுதலைப் புலிகள் மட்டுப்பட்டட போராளிகளையும், ஆயுதங்களையும் கொண்டிருந்ததால், அவர்கள் படிப்படியாக நாட்டின் வட கிழக்குப் பகுதியை நோக்கி விலகிக் கொண்டிருந்தனர். இறுதியாக அவர்கள் ஒரு புறம் ஏ-35 நெடுஞ்சாலை (பரந்தன்-முல்லைத்தீவு வீதி) நந்திக்கடல் மற்றும் சாளை தடாகங்களுக்கும் மறுபுறம் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய கடற்கரைப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்டனர்.[5]

ஐந்து டிவிசன்களையும் மூன்று அதிரடிப் படைகளையும் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்ட படையினர் புலிகளை முற்றுகையிட்டனர். இந்த சுற்றிவளைப்பிலிருந்து வெளியேறி படைகளை பின்னுக்கு விரட்ட புலிகள் தீவிரமாக முயற்சித்து வந்தனர். இந்தப் பின்னணியில் ஆயுதப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பாரிய எதிர் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டனர். புலிகளின் எண்ணிக்கை 50 இக்கு 1 என்ற விகிதத்தில் இருந்த போதிலும் பாதுகாப்புப் படையினரை முடக்கும் வகையிலான அடியைத் தர கவனமாக திட்டமிட்ட நடவடிக்கையை நடத்துவதே யோசனையாக இருந்தது.

சமர்[தொகு]

மார்ச் 30 அன்று விடுதலைப் புலிகள் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இலங்கைப் படையின் முன் வரிசை மீது பாரிய தாக்குதலை நடத்தினர், இதன் பின்னர் போர் தடை வலயத்திலிருந்து முன்னேறினர். இலங்கை இராணுவத்தின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு புலிகள் புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறினர். இலங்கை இராணுவத்தின் 53வது மற்றும் 58வது டிவிசன்கள் மற்றும் அதிரடிப்படை 8 ஆகியவை புதுக்குடியிருப்பில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் புதுக்குடியிருப்பு-இரணப்பாலை-புதுமாத்தளன் வீதியை வைத்திருந்த சார்ள்ஸ் அந்தோனி படையணியை முறியடிக்கும் நோக்கில் இடுக்கி இயக்கத்தில் முன்னேறியது. 58 வது பிரிவின் ஒரு படை கிழக்கிலும் பின்னர் தெற்கிலும் சுழன்றது, அதே நேரத்தில் 53 வது பிரிவிலிருந்து மற்றொன்று அதிரடிப்படை 8 உடன் சேர்ந்து கிழக்கிலும் பின்னர் வடக்கிலும் தாக்கின. இரு இடுக்கி இயக்கங்களும் பச்சைபுல்லுமோட்டை சந்திப்பில் சார்லஸ் அந்தோனி படையணியின் பின்புறம் சந்தித்தன. அம்பலரன்போக்கானை முதல் பச்சைபுல்லுமோட்டை வரையில் புலிகள் பயன்படுத்திவந்த விநியோகப் பாதையை அடைத்தனர். தாங்கள் சுற்றி சுற்றிவளைப்பக்கப்படுவதைத் தடுக்க புலிகள் கடுமையாகப் போராடினர். ஆனால் அந்த வளையத்துக்குள் அதிகமான புலிகள் இருந்தனர். சிறப்புப் படைகளும் அதிரடிப்படைகளும் ஆனந்தபுரத்தில் மாட்டிக் கொண்ட விடுதலைப் புலிகளுக்கு வலுவூட்டும் துணைப்படைகள் வரும் வழிகளை வெட்டி, அதன் கிழக்கே தென்னை மரங்களில் பதுங்கியிருந்தனர். கர்னல் லாரன்சின் தலைமையின்கீழ் வலுவூட்டப்பட்ட புலிகள் படையொன்று 2 சதுர கிமீ சதுரப் பரப்பை அடைய முயன்ற ஒரு தொடரணியாக அனுப்பப்பட்டது, ஆனால் அவர்கள் சிறப்புப் படைகளால் பதுங்கியிருந்து அழிக்கப்பட்டது. காயமடைந்த லாரன்ஸ் சில போராளிகளுடன் தப்பினார். இராணுவம் கனரக ஆயுதங்கள், பீரங்கிகள், இராக்கெட் லாஞ்சர்களுடன் நகர்ந்தது. ஏப்ரல் 5 க்குள், போர் முடிந்தது. இது 2008-2009 இலங்கை இராணுவத்தின் வடக்குத் தாக்குதலில் மிகவும் தீர்க்கமான போராகும். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் 75% படைகளை இழந்து, ஒரே போரில் மிக முக்கியமான தளபதிகளை இழந்த பேரிழப்பை சந்தித்தனர்.

புலிகளின் உயிரிழப்புகள்[தொகு]

கொல்லப்பட்ட புலிகளின் மூத்த தலைவர்கள்[தொகு]

  • பிரிகேடியர் தீபன் (புலிகளின் வடக்கு முன்னணி போர் அமைப்புக்களின் ஒட்டுமொத்த தளபதி)
  • பிரிகேடியர் விடுதலை மாற்றுப்பெயர் அமுதன் மாற்றுப்பெயர் கடாபி (விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்க்காப்பாளர், பின்னர், இம்ரான்-பாண்டியன் படையணின் சிறப்புத் தளபதி)
  • பிரிகேடியர் மணிவண்ணன் ("கிட்டு" பீரங்கிப் படைப்பிரிவின் சிறப்புத் தளபதி)
  • பிரிகேடியர் துர்கா மாற்றுப்பெயர் மீழிகா (சோதியா படையணியின் சிறப்புத் தளபதி)
  • பிரிகேடியர் விதுஷா மாற்றுப்பெயர் யாழினி (மாலதி படையணியின் சிறப்புத் தளபதி)
  • கேணல் நாகேஸ் (துணைத் தளபதி ஜெயந்தன் படையணி)
  • கேணல் கோபித் (தளபதி சார்லஸ் அந்தோணி சிறப்பு படையணி)
  • கேணல் கமலினி (மாலதி படையணியின் பிரதித் தளபதி)
  • கேணல் இளங்கீரன் மாற்றுப்பெயர் ஏ சேட்டன் (ஏசி) (விக்டர் ஆர்மர் எதிர்ப்பு படைப்பிரிவின் தளபதி)
  • கேணல் மோகனா (சோதியா படையணியின் துணைத் தளபதி)
  • கேணல் கோபால் ("குட்டி ஸ்ரீ" மோட்டார் படைப்பிரிவின் துணைத் தளபதி)
  • கேணல் அமுதா ("குட்டி ஸ்ரீ" மோட்டார் படைப்பிரிவின் மகளிர் பிரிவு தலைவர்)
  • கர்னல் அஸ்மி ("பொன்னம்மான்" சுரங்கப் பிரிவின் தளபதி)
  • கேணல் தமிழ்ச் செல்வி மாற்றுப்பெயர் மதி (மாலதி படையணியின் தளபதி)
  • கர்னல் அன்ரன் ( தலைவர் திருகோணமலை புலனாய்வு துறை (TOSIS))
  • கேணல் எல்லாளன்
  • லெப்டினன்ட் கேணல் சத்தியப்பிரியா மாற்றுப்பெயர் ஈக்கையொலி (பெண்கள் அரசியல் பிரிவு படைப்பிரிவின் தளபதி)
  • லெப்டினன்ட் கேணல் மகேந்திரம் ('கடல் வளத்' துறை தலைவர்)
  • லெப்டினன்ட் கேணல் வாகீசன்
  • லெப்டினன்ட் கேணல் சேரலாதன் (புலிகளின் தொலைக்காட்சியான "நிதர்சனத்தின்" பொறுப்பாளர்)
  • லெப்டினன்ட் கேணல் மேயரிவு (இம்ரான்-பாண்டியன் படையணி)
  • லெப்டினன்ட் கர்னல் ராஜேஷ் (இம்ரான்-பாண்டியன் படையணி)
  • லெப்டினன்ட் கேணல் அகிலேஷ் (இம்ரான்-பாண்டியன் படையணி)
  • லெப்டினன்ட் கேணல் நளன் (இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்பு அதிகாரி)
  • லெப்டினன்ட் கேணல் அமுதாப் (துணைத் தளபதி சார்லஸ் அந்தோணி சிறப்பு படைப்பிரிவு)
  • லெப்டினன்ட் கேணல் அப்துல்லாஹ்
  • லெப்டினன்ட் கேணல் புரட்சி நிலா(மாலதி படையணியின் கமாண்டிங் போஸ்ட் தளபதி)

கொல்லப்பட்ட மூத்த விடுதலைப் தலைவர்கள் (பதவிகள் தெரியவில்லை)[தொகு]

  • மகிந்தன் (மூத்த கடல் புலி தளபதி)
  • ஆதித்யன் (மணலாறு தாக்குதல் தளபதி)
  • இனியவன் (ராதா வான் பாதுகாப்பு படைப்பிரிவின் சிறப்புத் தளபதி)
  • மாங்குயில் (புலிகள் புலனாய்வுத் துறையின் (TOSIS) தளபதிகளில் ஒருவர்)

அஸ்வினி, அஞ்சான், வானம், ஆரல் என்ற மற்ற மூத்த தலைவர்கள்.[4]

கொல்லப்பட்ட இராதா வான் பாதுகாப்பு படைப்பிரிவின் மூத்த தளபதிகள்[தொகு]

  • கேணல் வேங்கையன் மாற்றுப்பெயர் அய்யனார் (இராதா வான் பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதி)
  • லெப்டினன்ட் கேணல் அன்பு (இராதா வான் பாதுகாப்பு படைப்பிரிவின் துணைத் தளபதி)
  • லெப்டினன்ட் கேணல் அனுசன்
  • லெப்டினன்ட் கேணல் கபிலன் (இராதா வான் பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதிகளில் ஒருவர்)
  • லெப்டினன்ட் கர்னல் அந்தியாஸ்
  • லெப்டினன்ட் கேணல் இளவராசன்
  • லெப்டினன்ட் கர்னல் ஆற்றலோன்
  • லெப்டினன்ட் கேணல் பெருங்கீரன்
  • லெப்டினன்ட் கேணல் ஏழிசை
  • லெப்டினன்ட் கேணல் மதிவர்மன்
  • லெப்டினன்ட் கேணல் வல்லவன்
  • லெப்டினன்ட் கேணல் குலம்
  • லெப்டினன்ட் கேணல் கண்ணன்
  • லெப்டினன்ட் கேணல் நிறஞ்சன்
  • லெப்டினன்ட் கேணல் தயாபரன்
  • லெப்டினன்ட் கர்னல் மைந்தன் (இராதா வான் பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதிகளில் ஒருவர்)
  • லெப்டினன்ட் கேணல் வண்ணம் (இராதா வான் பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதிகளில் ஒருவர்)
  • மேஜர் வாணவன்
  • மேஜர் சோலையப்பன்
  • கப்டன் சுடரவன்

இந்த இராதா படையணியின் சில தளபதிகள் மார்ச் 31 மாலை வெளியில் இருந்து ஆனந்தபுரத்தின் மீதான இலங்கைப் படையின் முற்றுகையை உடைத்து உள்ளே சிக்கியுள்ள தங்கள் போராளிகளை மீட்டெடுக்க முற்றுகையில் இருந்த அனந்தபுரம் பகுதிக்குள் நுழைந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, முற்றுகை மிகவும் இறுக்கமாக மாறி இந்த தளபதிகளும் அவர்களுக்கு கீழிருந்த போராளிகளும் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sri Lankan Army பரணிடப்பட்டது திசம்பர் 20, 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 Sri Lankan Ministry of Defence பரணிடப்பட்டது மே 10, 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 Daily News - government owned newspaper பரணிடப்பட்டது சூன் 4, 2011 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 4.2 "dbsjeyaraj.com » Anatomy of the LTTE military debacle at Aanandapuram". dbsjeyaraj.com. Archived from the original on 2009-04-14.
  5. "Archived copy". Archived from the original on 13 August 2012. பார்க்கப்பட்ட நாள் 19 September 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தபுரம்_சமர்&oldid=3954157" இலிருந்து மீள்விக்கப்பட்டது