உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகால் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஹால்
துர்க்மெனிஸ்தானில் அஹால் மாகாணத்தின் அமைவிடம்
துர்க்மெனிஸ்தானில் அஹால் மாகாணத்தின் அமைவிடம்
நாடு துருக்மெனிஸ்தான்
தலைநகரம்அனாவ்
பரப்பளவு
 • மொத்தம்97,160 km2 (37,510 sq mi)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்9,39,700
 • அடர்த்தி9.7/km2 (25/sq mi)

அஹால் பிராந்தியம் அல்லது அஹால் மாகாணம் (Ahal Region,துருக்குமேனிய மொழி : Ahal welaýaty; பாரசீக மொழியிலிருந்து آخال Axāl) என்பது துருக்மெனிஸ்தான் நாட்டின் பிராந்தியம் அல்லது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு மையத்தில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் கோபெட் டேக் மலைத்தொடரில் உள்ளது . இதன் பரப்பளவு 97,160 km2 (37,510 sq mi) ஆகும். இதன் மக்கள் தொகை 939,700 (2005 est. ) ஆகும்.[1]

அஹால் மாகாணத்தின் தெற்கில் ஈரானும், ஆப்கானித்தானும் சர்வதேச எல்லையாக உள்ளன. மாகாணத்தின் மேற்கில் பால்கன் மாகாணமும், வடக்கில் டகோகுஸ் மாகாணம் மற்றும் லெபாப் மாகாணமும், கிழக்கில் மேரி மாகாணமும் எல்லைகளாக அமைந்துள்ளன

கண்ணோட்டம்

[தொகு]

2000 ஆம் ஆண்டில், அஹால் வட்டாரமானது துர்க்மெனிஸ்தான் நாட்டின் மக்கள்தொகையில் 14%, மொத்த வேலைவாய்ப்பில் 11%, வேளாண் உற்பத்தியில் 23% (மதிப்பின்படி) மற்றும் நாட்டின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் 31% வகிக்கிறது.[2]

அஹால் வட்டாரத்தில் வேளாண்மைக்கு காரகும் கால்வாய் வழியாக பாசனம் செய்யப்படுகிறது. இது மாகாணத்தின் கிழக்கு முதல் மேற்கு வரை மாகாணம் முழுவதும் நீண்டு, துர்க்மெனிஸ்தானின் தெற்கு எல்லைவரை செல்கிறது. மற்றொரு நீர் ஆதாரமாக தேஜென் ஆறு உள்ளது. இது ஆப்கானிஸ்தானில் இருந்து மாகாணத்தின் தென்கிழக்கு மூலையில் வடக்கே பாய்கிறது. இதன் குறுக்கே தேஜென் நகருக்கு தெற்கே இரண்டு பெரிய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன.

அஹால் 1881 ஆம் ஆண்டில் நடந்த ஜியோக் டெப் போருக்காக அறியப்படுகிறது, இன்று ஒரு புதிய பள்ளிவாசல் தலத்துக்காகவும், பஹெர்டன் நிலத்தடி வெந்நீர் ஏரிக்கு (கோவ் அடா சுண்ணாம்புக் கரடு குகை) [3][4] என்னும் இரண்டுக்காகவும் அறியப்படுகிறது. இவை இரண்டும் மேற்கு அசுகாபாத்தில் உள்ளன.

அஹால் மாகாணத்தின் தலைநகரான அனியூ (அல்லது அனாவ்) ஆகும். இது அஷ்கபாத்தின் தென்கிழக்கு புறநகரில் உள்ள ஒரு நகரமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க நகரமானது மேரி மாகாணத்தின் எல்லைக்கு அருகே தென்கிழக்கில் உள்ள தேஜென் ஆகும். துர்க்மெனிஸ்தானின் மிகப்பெரிய நகரமான அஷ்கபாத், அஹால் மாகாணத்தால் சூழப்பட்டுள்ளது, ஆனால் இது மாகாண அதிகார எல்லைக்கு வெளியே ஒரு சிறப்பு தலைநகர் மாவட்டமாக உள்ளது.

மாவட்டங்கள்

[தொகு]

2018 சனவரி 5 முதல், அஹால் மாகாணம் ( அஹல் வெலாசாட்டி ) ஏழு மாவட்டங்களாக ( எட்ராப், பன்மை எட்ராப்ளர் ) பிரிக்கப்பட்டுள்ளது:[5][6]

  1. அக் புக்தாஸ்
  2. பாபாடையன்
  3. பெஹர்டன் (முன்பு பஹார்லி)
  4. கோக்தீபி
  5. காகா
  6. சரஹஸ்
  7. தேஜன்

2017 சனவரி முதல் நாளின், நிலவரப்படி, மாகாணத்தில் எட்டு மாநகரங்கள் (города அல்லது şäherler ), ஒன்பது நகரங்கள் (посёлки அல்லது şäherçeler ), 89 கிராமப்புற அல்லது கிராம சபைகள் (сельские советы அல்லது geňeşlikler ), மற்றும் 235 கிராமங்கள் (села, ob அல்லது obalar ) போன்றவை உள்ளன.[6] இருப்பினும், ஜனவரி 5, 2018 நிலவரப்படி, மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகளின் முதன்மை பட்டியலில் ஏழு மாநகரங்கள் மட்டுமே பட்டியலிட்டுள்ளன.[7]

  • மாநகரங்கள் பின்வருமாறு:
    • அனியூ
    • பாபாடையான்
    • பஹிர்தீன்
    • கோக்தீப்
    • காகா
    • சரஹ்ஸ்
    • தேஜின்

2013 மே நிலவரப்படி, அஹால் மாகாணத்தின் ருஹாபத் மாவட்டமும் அபாதான் நகரமும் (இன்று பாஸ்மெசின் என்று அழைக்கப்படுகிறது) அஷ்கபாத் நகரத்தில் இணைக்கப்பட்டன. 2018 சனவரியியல், அஹால் மாகாணத்தின் பாபாதஹான் மாவட்டம் நிறுவப்பட்டது, மேலும் காக்கா, தேஜென், சாராஸ் மாகாணங்கள் மீண்டும் மறுவரையறை செய்யப்பட்டன. அதே ஆணையில், பஹார்லியின் முன்னாள் பெயரான, பெஹர்டன் மீண்டும் வைக்கப்பட்டது, மற்றும் ஆல்டின் அசிர் மாவட்டம் அகற்றப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. Statistical Yearbook of Turkmenistan 2000-2004, National Institute of State Statistics and Information of Turkmenistan, Ashgabat, 2005.
  2. Social-economic situation of Turkmenistan in 2000, National Institute of State Statistics and Information of Turkmenistan, Ashgabat, 2001, pp. 129-130 (உருசிய மொழியில்).
  3. Baharden warm lake பரணிடப்பட்டது நவம்பர் 21, 2008 at the வந்தவழி இயந்திரம் in Kov Ata cave.
  4. Turkmenistan: an official guide பரணிடப்பட்டது அக்டோபர் 6, 2011 at the வந்தவழி இயந்திரம் (downloadable Word file).
  5. "Парламент Туркменистана внёс изменения в административно-территориальное деление Ахалского велаята". 5 January 2018.
  6. 6.0 6.1 "Административно-территориальное деление Туркменистана по регионам по состоянию на 1 января 2017 года". Archived from the original on 2018-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-07-08.
  7. {{cite book}}: Empty citation (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகால்_மாகாணம்&oldid=3085050" இலிருந்து மீள்விக்கப்பட்டது