பால்கனாபாத்

ஆள்கூறுகள்: 39°31′00″N 54°22′00″E / 39.51667°N 54.36667°E / 39.51667; 54.36667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்கனாபாத்
பால்கனாபாத்தின் ஒரு தெருவின் தோற்றம்
பால்கனாபாத்தின் ஒரு தெருவின் தோற்றம்
பால்கனாபாத் is located in துருக்மெனிஸ்தான்
பால்கனாபாத்
பால்கனாபாத்
துருக்மெனிஸ்தானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 39°31′00″N 54°22′00″E / 39.51667°N 54.36667°E / 39.51667; 54.36667
நாடு துருக்மெனிஸ்தான்
மாகாணம்பால்கன் மாகாணம்
அரசு
 • மேயர்பால்கன் குல்மடோவ்
ஏற்றம்17 m (56 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்120,800
நேர வலயம்+5 GMT
ru:Почтовые индексы в Туркмении745100
தொலைபேசி குறியீடு(00993) 222 X XX XX

பால்கனாபாத் (Balkanabat (Балканабат), முன்னர் Nebit-Dag மற்றும் Neftedag என அழைக்கபட்டது ) என்பது மேற்கு துர்க்மெனிஸ்தானில் உள்ள உள்ள ஒரு நகரமாகும். மேலும் இது நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பால்கன் மாகாணத்தின் தலைநகராகும். இது 17 மீட்டடர் உயரத்தில் 39°31′0″N 54°22′0″E / 39.51667°N 54.36667°E / 39.51667; 54.36667, அமைந்துள்ளது.

பால்கனாபத் பால்கன் டாக்லரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பால்கனாபாத் அஷ்கபாத்துக்கு மேற்கே சுமார் 450  கி.மீ தொலைவிலும்,  துறைமுக நகரமான துர்க்மன்பாஷிக்கு கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அஷ்கபாத்துக்கு நாள்தோறும் வானூர்தி பயணத்துக்கு திட்டமிடப்பட்ட வானூர்தி நிலையம் இந்த நகரத்தில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் துர்க்மென்கள் என்றாலும் மற்ற இன மக்களான உருசியர்கள், கசக்குகள், லெஸ்கின்ஸ், அசர்பைஜானியர்கள், ஆர்மீனியர்கள், உஸ்பெக்கியர், தாதர்கள், கரக்கல்பாக்ஸ். தஜிக்குகள் போன்றோரும் காணப்படுகிறனர்.

காலநிலை[தொகு]

கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் படி பால்கனாபாத்தில் குளிர் பாலைவன காலநிலை ( BWk ) நிலவுகிறது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கனாபாத்&oldid=3076788" இலிருந்து மீள்விக்கப்பட்டது