பால்கன் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்கன்
பிராந்தியம்
துர்க்மெனிஸ்தானில் பால்கன் மாகாணத்தின் அமைவிடம்
துர்க்மெனிஸ்தானில் பால்கன் மாகாணத்தின் அமைவிடம்
நாடு துருக்மெனிஸ்தான்
தலைநகரம்பால்கனாபாத்
பரப்பளவு
 • மொத்தம்1,39,270 km2 (53,770 sq mi)
மக்கள்தொகை (2005)
 • மொத்தம்5,53,500
 • அடர்த்தி4.0/km2 (10/sq mi)

பால்கன் பிராந்தியம் அல்லது பால்கன் மாகாணம் (Balkan Region, Turkmen , Балкан велаяты ) என்பது துர்க்மெனிஸ்தானின் ஐந்து பிராந்தியங்களில் ஒன்றாகும் . இது நாட்டின் தூர மேற்கில் உள்ளது. இதன் எல்லைகளாக வடக்கிலிருந்து கடிகார சுற்றில் கசக்கஸ்தான், உசுபெக்கிசுத்தான் (வடக்கு), துர்க்மெனிஸ்தானின் இரண்டு பிராந்தியங்கள் (கிழக்கு), ஈரான் (தெற்கு), காசுப்பியன் கடல் (மேற்கு) ஆகியவை உள்ளன. இதன் தலைநகரம் பால்கனாபாத் ஆகும், இது முன்னர் நெபிட் டாக் என்று அழைக்கப்பட்டது. இது சோவியத் காலத்து துர்க்மென் எஸ்.எஸ்.ஆரின் மாகாணமான ஒப்லாஸ்ட், கிராஸ்நோவோட்ஸ்க் ஒப்லாஸ்ந்தை ஒத்திருக்கிறது. இந்த மாகாணம் 1988 ஆம் ஆண்டில் இது இரத்து செய்யப்பட்டது. இருப்பினும், 1991 ஆம் ஆண்டில் பால்கன் பிராந்தியம் நிறுவப்பட்டபோது பிராந்தியத்தின் நிர்வாக எல்லைகள் மீட்டமைக்கப்பட்டன.

பால்கன் என்ற பெயரானது "பால் ஆகான்" என்பதிலிருந்து வந்தது. அதாவது "தேன் பாயும் இடம்" என்பது இதன் பொருளாகும். இந்தப் பகுதியானது செழிப்புமிக்க பெட்ரோலிய வளங்களைக் கொண்டது. இந்த மாகாணமானது 139,270 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 553,500 பேர் வசிக்கின்றனர் (2005 மதிப்பீடு). இவர்களில் குறிப்பிடத்தக்க மக்கள் மேய்ச்சல் தொழிலில் ஈடுபடும் நாடோடிகளாவர். [1] இதன் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3.3 நபர்கள் என்று உள்ளது. இது துர்க்மெனிஸ்தானில் மிகக் குறைந்த மக்களடர்த்தி ஆகும்.

மாகாணத்தில் உள்ள பிற நகரங்கள் பின்வருமாறு: பெரெக்கெட், டர்க்மென்பாசி, கும்டாக், செர்டார், ஹசார், எட்ரெக், எசெங்குலி .

பால்கன் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க கரிம படிம ஆற்றல் முலங்கள் உள்ளன. இது துர்க்மெனிஸ்தானின் இயற்கை எரிவளி உற்பத்தியில் 94% மற்றும் அதன் பெட்ரோலிய உற்பத்தியில் 12% வகிக்கிறது. இது நாட்டின் 18% மின்சார ஆற்றலை உருவாக்குகிறது. மிகக் குறைந்த நீர் வளம் காரணமாக, இங்கு வேளாண்மை மிகக் குறைவாக உள்ளது. துர்க்மெனிஸ்தானின் மொத்த விளைநிலங்களில் 4.5% மட்டுமே மாகாணத்தில் உள்ளது.

துர்க்மெனிஸ்தானின் மிக முக்கியமான தீவுவும், காஸ்பியன் கடலில் மிகப்பெரிய தீவான ஒகுர்ஜா அடா தீவு இந்த மாகாணத்தில் அடங்கும்.

மாவட்டங்கள்[தொகு]

பால்கன் மாகாணம் ( பால்கன் வெலாசாட்டி ) 6 மாவட்டங்களாக ( etrap, plural etraplar ) பிரிக்கப்பட்டுள்ளது: [2]

  1. பெரெக்கெட் (முன்பு கசான்ஜிக்)
  2. எசெங்குலி
  3. எட்ரெக் (முன்பு கிசிலெக்ட்ரெக்)
  4. மாக்டிம்குலி (முன்பு கேரி காலா)
  5. செர்தார் (முன்பு கிசிலர்வாட்)
  6. துர்க்மென்பாசே

ஜனவரி 1, 2017 நிலவரப்படி, மாகாணத்தில் 10 மாநகரங்கள் (города அல்லது şäherler ), 13 நகரங்கள் (посёлки அல்லது şäherçeler ), 33 ஊரகம் அல்லது கிராம சபைகள் (сельские советы அல்லது geňeşlikler ), 112 கிராமங்கள் (села, ob அல்லது obalar ) உள்ளன. [2]

  • மாநகரங்கள் பின்வருமாறு:
அக்டோபர் 2013, பெரெக்கெட் நகரில் தொடருந்து நிலையம்.
    • பால்கனாபாத் (முன்பு நெபிட்-டாக்)
    • பெரெக்கெட் (முன்னர் கசன்ஜிக்
    • கராபோகாஸ் (முன்னர் பெக்டாஸ்)
    • கும்டாக்
    • ஹசார் (முன்னர் எலெகன்)
    • செர்டார் (முன்பு கைசில்-அர்வத், கிசிலார்பட்)
    • துர்க்மென்பசே மாநகர் (முன்பு கிராஸ்நோவோட்ஸ்க்)

குறிப்புகள்[தொகு]

  1. Statistical Yearbook of Turkmenistan 2000-2004, National Institute of State Statistics and Information of Turkmenistan, Ashgabat, 2005.
  2. 2.0 2.1 "Административно-территориальное деление Туркменистана по регионам по состоянию на 1 января 2017 года". Archived from the original on 2018-07-08. பார்க்கப்பட்ட நாள் 2018-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கன்_மாகாணம்&oldid=3077217" இலிருந்து மீள்விக்கப்பட்டது