தகோகுஸ்
தகோகுஸ் formerly known as Tashauz | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 41°50′N 59°58′E / 41.833°N 59.967°E | |
நாடு | ![]() |
மாகாணம் | தகோகுஸ் மாகாணம் |
அரசு | |
• மேயர் | மம்மெட்னியாஸ் ஓவெசோவிச் நர்மம்மெடோவ்[1] |
ஏற்றம் | 88 m (289 ft) |
மக்கள்தொகை (2004) | |
• மொத்தம் | 210,000 |
தகோகுஸ் (Daşoguz (மேலும் Dashoguz, Dasoguz; என்வும் அழக்கபட்டுகிறது) இது முன்னர் அதாவது 1992 வரை Tashauz (என அழைக்கப்படது, மேலும் 1992-1999 வரை Dashkhovuz என அழைக்கபட்டது ), என்பது வடக்கு துர்க்மெனிஸ்தானில் உள்ள ஒரு நகரம். இது தகோகுஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது உசுபெக்கிசுத்தான் எல்லையிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ளது.
நிலவியல்[தொகு]
இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 88 மீட்டர் உயரத்தில் அட்சரேகை 41.833 ° வடக்கில், தீர்க்கரேகை 59.9667 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது உஸ்பெகிஸ்தானின் நுகுஸிலிருந்து சுமார் 76.7 கிமீ (47.7 மைல்), அஷ்கபத்திலிருந்து 460 கிமீ (290 மைல்) தொலைவில் உள்ளது. இதன் அருகிலுள்ள சரிகாமிஷ் ஏரியில், 65 வகையான மீன்களைக் காணலாம்.
காலநிலை[தொகு]
தகோகுஸ் குளிர்ந்த பாலைவன காலநிலையைக் கொண்டுள்ளது ( பி.டபிள்யூ.கே, கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் படி), நீண்ட, வெப்பமான கோடைகாலத்தைக் கொண்டுள்ளது. குளிர்காலம் ஒப்பீட்டளவில் குறுகியதாக இருக்கும், ஆனால் மிகவும் குளிராக இருக்கும். ஆண்டு மழைப்பொழிவு சராசரியாக 100 மிமீ (3.93 அங்) ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், Daşoguz | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 0.8 (33.4) |
3.7 (38.7) |
11.2 (52.2) |
21.2 (70.2) |
28.8 (83.8) |
33.6 (92.5) |
35.6 (96.1) |
33.1 (91.6) |
27.3 (81.1) |
18.6 (65.5) |
10.4 (50.7) |
3.2 (37.8) |
18.96 (66.13) |
தினசரி சராசரி °C (°F) | -3.6 (25.5) |
-1.5 (29.3) |
5.4 (41.7) |
14.5 (58.1) |
21.5 (70.7) |
26.0 (78.8) |
28.3 (82.9) |
25.7 (78.3) |
19.6 (67.3) |
11.7 (53.1) |
5.0 (41) |
1.1 (34) |
12.81 (55.06) |
தாழ் சராசரி °C (°F) | -8.0 (17.6) |
-6.7 (19.9) |
-0.4 (31.3) |
7.8 (46) |
14.2 (57.6) |
18.5 (65.3) |
21.0 (69.8) |
18.3 (64.9) |
12.0 (53.6) |
4.8 (40.6) |
-0.3 (31.5) |
-1.0 (30.2) |
6.68 (44.03) |
பொழிவு mm (inches) | 8 (0.31) |
8 (0.31) |
17 (0.67) |
18 (0.71) |
12 (0.47) |
4 (0.16) |
2 (0.08) |
1 (0.04) |
2 (0.08) |
6 (0.24) |
10 (0.39) |
12 (0.47) |
100 (3.94) |
ஆதாரம்: Climate-data.org[2] |
மக்கள் வகைப்பாடு[தொகு]
தகோகுஸின் மக்கள்தொகை 166,500 (1999 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பீடு) ஆகும். இதன் மக்களில் பெரும்பான்மையராக துர்க்மென் மற்றும் உஸ்பெக் மக்கள் உள்ளனர். இதில் குறைந்த எண்ணிக்கையில் உருசியர்கள், கொரியர்கள், கரகல்பாக்ஸ், தாதர்கள் போன்றோர் உள்ளனர். தற்போதைய. முன்னாள் ஜனாதிபதி சபர்முரத் நியாசோவ்வால் கட்டாயப்படுத்தி இடம்பெயரவைக்கபட்டவர்களில் ஏராளமானோர் நகரத்தை ஒட்டியுள்ள இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். [3]
வரலாறு[தொகு]
இதன் வரலாற்றின் துவக்கத்தில், இது பட்டுப் பாதையில் ஒரு பிரபலமான தங்குமிடமாக இருந்தது. ஏனெனில் இங்கு ஒரு நீரூற்று இருந்தது. [4] 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருசியர்களால் தாஷாஸ் என்ற பெயரிலான கோட்டை இங்கு நிறுவப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு 1992 இல் இதன் துர்க்மென் வடிவமான டாஷ்கோவஸ் என்றும், 1999 ல் ஜனாதிபதி நியாசோவின் உத்தரவின் பேரில் டகோகுஸ் என்றும் மாற்றப்பட்டது; நவீன நகரம் சோவியத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு நகரமாகும். இது பல நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளூர் நிர்வாக மற்றும் கலாச்சார மையமாகவும் தொடருந்து சந்திப்பாகவும் செயல்படுகிறது.
போக்குவரத்து[தொகு]
தகோகுஸ் வானூர்தி நிலையத்திலிருந்து அஷ்கபாத், மேரி, துர்க்மெனாபாத், பால்கனாபாத், துர்க்மென்பாஷி, போன்ற இடங்களுக்கு துர்க்மெனிஸ்தான் ஏர்லைன்ஸ் வழியாக இணைக்கபட்டுள்ளது.
இதர தகவல்கள்[தொகு]
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கொன்யா-ஊர்கெஞ்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய தங்குமிடமாக தகோகுஸ் உள்ளது. இப்பகுதியின் சில முக்கிய விவசாய பொருட்களாக பருத்தி , சணல் போன்றவை உள்ளன. நகரமானது அமூ தாரியா ஆறுக்கு அருகாமையில் இருப்பதால் இவை இங்கு பயிரிடப்படுகின்றன. இது கால்பந்து சங்கமான துரான் தசோகுஸின் அமைவிடமாகும் .
1998 செப்டம்பர் 5, அன்று, ஏறக்குறைய 7 கிலோகிராம் எடையுள்ள எச் 5 என்ற விண்கல் தகோகுஸில் விழுந்தது. [5]
குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]
- யக்ஷிகெல்டி ககாயேவ் (1959-) - அரசியல்வாதி, எண்ணெய் வள அமைச்சர்.
விளையாட்டு[தொகு]
இந்த நகரத்தில் இரண்டு விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. அவை ஸ்போர்ட் டாப்லூமி ஸ்டேடியம், கராஸிஸ்லிக் ஸ்டேடியம் என்பவன ஆகும்.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Turkmenistan Project reports". 2007-06-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-23 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Climate data: Daşoguz
- ↑ "IDMC Report". 2009-04-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ STANTOURS - Turkmenistan - Dashogus City / Tashauz
- ↑ "H chondrite meteorites". 2008-07-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-13 அன்று பார்க்கப்பட்டது.