வெங்காயத்தாமரை
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஆகாயத்தாமரை | |
---|---|
ஆகாயத்தாமரை(E. crassipes) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Eichhornia |
இனங்கள் | |
Seven species, including: |
வெங்காயத்தாமரை ஒரு மிதக்கும் நீர்வாழ் பல்லாண்டுத் தாவரமாகும். இதை ஆங்கிலத்தில் water hyacinth எனவும் அழைக்கின்றனர். இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை சேர்ந்தது. பிறகு அழகுக்காக வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தோற்றம்
[தொகு]இவை தென் அமெரிக்காவிலுள்ள அமேசானைத் தாயகமாக கொண்டது. இவை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியா, கொல்கத்தாவிற்கு வருகைத் தரும்போது இதை கொண்டுவந்து ஊக்ளி நதியில் விட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வூக்ளி நதியானது லண்டனில் உள்ள தேம்சு நதிப்போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக இடப்பட்டது.
வடிவமைப்பு
[தொகு]இது நீரில் மிதந்து வாழக்கூடியத் தாவரமாகும். இது தன்னகத்தே கொண்டுள்ள வெங்காயம் போன்ற அமைப்பினால் இவை வெங்காயத் தாமரை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் தண்டுகளில் காற்று நிரப்பட்டு இருப்பதால் இவை மிதப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. இவைகள் ஊதா நிறப்பூக்களையும் பூக்கின்றன. இவையே இதன் கவர்ச்சிக்கும் உலகை ஆட்கொண்டதிற்கும் காரணம்.
தன்மை
[தொகு]இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள வெங்காயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.
தீமைகள்
[தொகு]- குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
- கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
- அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
- இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிசன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
- நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
- இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
- கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதன் இனப்பெருக்கத்திற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
- வெள்ளக் காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
- பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.
தடுப்புமுறை
[தொகு]இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன. வேதிக் களைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதின் மூலம் இவைகளை அகற்றமுடியும். ஆனால் இவை நீரில் வளரக்கூடிய தாவரமாகையால் இவை நீர்நிலைகளில் பாதிப்பு மிகுதியாகும் வாய்ப்பு உள்ளது.
மாற்றுமுறை
[தொகு]சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயு, காகிதம் தயாரித்தல், கயிறு, நூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. வெங்காயத்தாமரையின் மக்கிய பகுதிகளை உரமாகவும் பயன்படுத்தலாம்.