அழகன்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அழகன்குளம்
—  சிற்றூர்  —
அழகன்குளம்
இருப்பிடம்: அழகன்குளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°21′19″N 78°58′06″E / 9.355323, 78.96831அமைவு: 9°21′19″N 78°58′06″E / 9.355323, 78.96831
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திரு K. நந்த குமார் இ.ஆ.ப [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


0 மீட்டர்s (0 அடி)


அழகன் குளம் (ஆங்கிலம் : Alagankulam) தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம்.[4][5][6]

வரலாறு[தொகு]

பண்டைய காலத்தில் இது ஒரு சமஸ்தானமாகவும் துறைமுக நகராகவும் விளங்கியது; மன்னராட்சி நடைப்பெற்ற இப்பகுதியின் பெயர் அழகாபுரி ஆகும். பின்னர் மருவி அழகங்குளம் என்றும் அழயாங்குளம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. மன்னர் வாழ்ந்ததற்கு சான்றாக மன்னரின் கோட்டை சிதிலமடைந்து, மண்ணில் புதைந்துள்ளது, புதையுண்ட பகுதி மேடாக காட்சியளிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் துறையினரால் மன்னரின் வாள், கேடயம், பொற்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[7][8]

அமைவு[தொகு]

இராமநாதபுரத்தின் கிழக்கே அமைந்த்துள்ள இப்பகுதியின் புவியியல் அமைவு 9°21'17"N 78°58'9"E ஆகும்.வடக்கே பாக் நீரிணையும் தெற்கே வைகை ஆறும் எல்லையாக உள்ளது. கிழக்கே வைகை முகத்துவாரமும், மேற்கே பனைக்குளம் கிராமமும் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 உடன் நதிப்பாலம் மூலமாக இக்கிராமம் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள்[தொகு]

சுமார் 6000 அதிகமாக மக்கள் வாழ்கிறார்கள், இங்குள்ள மக்களின் தொழில் விவசாயம் மற்றும் அரபு நாடுகளில் பணி புரிபவர்கள்.

தொழில்[தொகு]

பண்டைய காலம் தொட்டே வெற்றிலை கொடிக்கால், மீன்பிடி மற்றும்,கடல் வாணிபமே நிகழ்ந்துள்ளது.மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வாணிப தொடர்பு இருந்துள்ளது.தற்போது வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளில் பலர் பணி புரிகின்றனர். இப்பகுதியில் விளையும் வெற்றிலை மாவட்ட அளவில் புகழ் பெற்றதாகும்.விவசாயமும் நடைபெறுகின்றது.

போக்குவரத்து[தொகு]

பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தே பயன்படுகிறது. இது தவிர மகிழுந்து போக்குவரத்தும் உள்ளது.

கல்வி[தொகு]

இங்குள்ள பலரும் மருத்துவம், பொறியியல், வழக்குரைஞர்களாகவும் மலேசியாவிலும் பணிபுரிகின்றனர். கல்விக்கு இங்கு இஸ்லாமிய பாடசாலைகளான அல்மதரசத்துல் ரஷீதிய்யா,அஸ்ரஃபுல் உலூம் என்னும் ஹிப்லு மதரஸாவும் உள்ளது. புதையுண்ட கோட்டையின் மேட்டுப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. தனியாரின் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், நபீசா அம்மாள் நர்சரிப்பள்ளியும் அமைந்த்துள்ளன. ஒரு அரசு தொடக்கப்பள்ளியும் அமைந்த்துள்ளது.

விழாக்கள்[தொகு]

இஸ்லாமியப் பெருநாள்களும், மீலாது விழா, அரபிபாட சாலையின் பட்டமளிப்பு விழா, மதரஸா மாணவர்களின் குர்ஆன் ஓதும் போட்டி ஆகியவை பிரபலம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அழகன்குளம்&oldid=1398165" இருந்து மீள்விக்கப்பட்டது