அரசு மகளிர் கல்லூரி, திருவனந்தபுரம்
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1864 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | கேரளப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.gcwtvm.ac.in |
அரசு மகளிர் கல்லூரி, திருவனந்தபுரம், என்பது முன்னர் மாட்சிமை தங்கிய மாமன்னர் மகளிர் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. இது கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பழமையான மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1864ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
கல்வித் திட்டங்கள்
[தொகு]இக்கல்லூரி தற்பொழுது கேரளாப் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களை வழங்குகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றவையின் முதல் தரத்தினைப் பெற்ற கல்லூரியாகும்.[1] தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின்படி இந்த கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- புள்ளியியல்
- மனைஅறிவியல்
கலை மற்றும் வணிகம்
[தொகு]- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளாதாரம்
- உளவியல்
- இசை
- வர்த்தகம்
- தத்துவம்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரி புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் 12பி மற்றும் 2எப் தகுதியுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
[தொகு]- வீணா ஜார்ஜ், கேரள அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
- விந்துஜா மேனன், மலையாளத் திரைப்பட நடிகை
- நபீசா உம்மாள், இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Kerala University".
- ↑ "MoE, National Institute Ranking Framework (NIRF)". Archived from the original on 2020-10-01. பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.gcwtvm.ac.in பரணிடப்பட்டது 2022-11-30 at the வந்தவழி இயந்திரம்