உள்ளடக்கத்துக்குச் செல்

வீணா ஜார்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீணா ஜார்ஜ்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், கேரள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2021 (2021-05-20)
முன்னையவர்கே. கே. சைலஜா
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூன் 2016 (2016-06-02)
முன்னையவர்கே. சிவதாசன் நாயர்
தொகுதிஅரண்முல்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1976 (1976-08-03) (அகவை 48)
கேரளம், திருவனந்தபுரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்ஜார்ஜ் ஜோசப்
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிகேரளப் பல்கலைக்கழகம்
(B.Sc., என்.எஸ்சி. இயற்பியல், B.Ed.)

வீணா ஜார்ஜ் (Veena George) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், கேரள அரசாங்கத்தின் தற்போதைய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஆவார். [1] [2] [3] இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக கேரள சட்டமன்றத்திற்கு அரண்முல்லா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் ஈடுபுடுவதற்கு முன்பு, இவர் 16 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய மலையாள செய்தித் தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார். மலையாள செய்தித் தொலைக்காட்சிகளில் இருந்த முதல் பெண் நிர்வாக ஆசிரியர் இவர் ஆவார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

1976 ஆகத்து மூன்றாம் நாள் திருவனந்தபுரத்தில் ரோசம்மா குரியகோஸ், வழக்கறிஞர் பி. .இ. குரியகோஸ் இணையருக்கு மகளாக பிறந்தார். இவர் பதனம்திட்டா மாவட்டத்தின் மைலாபுராவில் உள்ள மவுண்ட் பெத்தானி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். திருவனந்தபுரம் அரசு மகளிர் கல்லூரியில் இளநிலை பட்டமும், இயற்பியலில் முதுகலை பட்டப்படிப்பு படித்த இவர் தனது பி.எட். படிப்பை கேரள பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவர் ஊடகத் துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு ஆண்டு பத்தனம்திட்டா கத்தோலிக்க கல்லூரியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரி்ந்தார். பின்னனர் இவர் கைரளி தொலைக்காட்சியில் பயிற்சி பத்திரிகையாளராக இணைந்தார். 16 ஆண்டுகள் வெற்றிகரமாக மலையாள செய்தித் தொலைக்காட்சிகளில் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில், மலையாள செய்தித் தொலைக்காட்சியான டி.வி நியூவின் நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்றார். மலையாள செய்தி தொலைக்காட்சிகளில் நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். [5] இவர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியரும், மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரிய தேவாலயத்தின் முன்னாள் செயலாளருமான டாக்டர் ஜார்ஜ் ஜோசப்பை மணந்தார். [6]

தொழில்

[தொகு]

தொலைக்காட்சி வாழ்க்கை

[தொகு]

வீணா ஜார்ஜ் கைரளி தொலைக்காட்சியில் பயிற்சி பத்திரிகையாளராக தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் மனோரமா செய்தி தொலைக்காட்சியில் செய்தி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சேர்ந்தார். மேலும் காலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு சர்வதேச செய்தி நிகழ்ச்சிகளையும் வழங்கினார். பின்னர் இவர் மலையாள செய்தி தொலைக்காட்சிகளான இந்தியாவிஷன், ரிப்போர்ட்டர் தொலைக்காட்சி ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். மேலும் டிவி நியூ தொலைக்காட்சியில் நிர்வாக ஆசிரியராக 2015 இல் இணைந்தார். [7]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் தனது கல்லூரி காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் (எஸ்.எஃப்.ஐ) செயல்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அரண்முல்லா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இபொகசி (மா) இவரை களமிறக்கியபோது இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் காங்கிரசின் மூத்த தலைவர் கே. சிவதசன் நாயரை 7646 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2019 இந்திய பொதுத் தேர்தலில் வீணான பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உடனான கடுமையான மும்முனைப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் [8] 2021 சட்டமன்றத் தேர்தலில் 19,003 வாக்குகள் வித்தியாசத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். 2021 மே 20 ஆம் நாள், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் அமைச்சரவையில் இடம் பெற்றார். [9] 21 ஆம் நாள், புகழ்பெற்ற இபொக (மா) தலைவர் கே. கே. சைலஜா வகித்த சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் பொறுப்பை அவருக்கு அடுத்து ஏற்றார். [10]

தேர்தல் போட்டி வரலாறு

[தொகு]

சட்டமன்றத் தேர்தல் போட்டி வரலாறு

[தொகு]
ஆண்டு தொகுதி எதிராளி முடிவு வாக்கு வித்தியாசம்
2016 அரண்முலா வழக்கறிஞர் கே. சிவதசன் நாயர் ( இதேகா ) வெற்றி 7646 [11]
2021 அரண்முல்லா அட்வா. கே.சிவதசன் நாயர் ( இதேகா ) வெற்றி 19003 [12]

பாராளுமன்றத் தேர்தல் போட்டி வரலாறு

[தொகு]
ஆண்டு தொகுதி எதிராளி முடிவு வாக்கு வித்தியாசம்
2019 பதனம்திட்டா அன்டோ ஆண்டனி ( இதேகா ) தோல்வி 44243 [13]

குறிப்புகள்

[தொகு]

 

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
  2. "Veena George to replace KK Shailaja as Kerala health minister; here's list of new ministers and portfolios". Times Now. 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
  3. "Notifications - Government of Kerala, India". kerala.gov.in. Archived from the original on 2021-05-17. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  4. "Meet the 11 women MLAs who will join the Kerala Assembly". Haritha John. The NewsMinute. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
  5. "Veena George, the first woman Executive Editor in the history of Malayalam TV news". The News Minute. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Veena George likely to replace KK Shailaja as health minister in new Kerala cabinet: Who is she". India TV. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  7. Veena George, the first woman Executive Editor in the history of Malayalam TV news
  8. "Sabarimala could hold the key". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  9. "Kerala Assembly elections: Welfare thrust helps left rewrite history". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  10. "Former journalist Veena George replaces KK Shailaja as Kerala Health Minister in Covid era". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  11. "Aranmula Assembly Election 2016 Latest News & Results". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
  12. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
  13. "Election Commission of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_ஜார்ஜ்&oldid=3572074" இலிருந்து மீள்விக்கப்பட்டது