உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரித் திவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரித் திவாரி
பிறப்பு(1938-09-05)செப்டம்பர் 5, 1938
சண்டிகர், இந்தியா
இறப்புசனவரி 13, 2018(2018-01-13) (அகவை 79)
சண்டிகர், இந்தியா
மற்ற பெயர்கள்அம்ரித் கவுர் திவாரி
பணிகுழந்தைகள் பல் மருத்துவர்
அறியப்படுவதுபல் மருத்துவம்
பல் மருத்துவக் கல்வி
பெற்றோர்சர்தார் தீரத் சிங்
வாழ்க்கைத்
துணை
வி. என். திவாரி
பிள்ளைகள்மணீஷ் திவாரி
விருதுகள்பத்மசிறீ
பயிரே பாச்சர்டு கல்வி நிறுவன தகுதிச் சான்றிதழ்

அம்ரித் திவாரி (Amrit Tewari)(செப்டம்பர் 5, 1938 - சனவரி 13, 2018) ஓர் இந்தியப் பல் மருத்துவர் ஆவார். இவர் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் நிறுவனத் தலைவர் ஆவார்.[1][2] இவர் வாய்வழி சுகாதார அறிவியல் மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[3] அம்ரித் கவுர் முன்பு பட்டியாலா, கிழக்கு பஞ்சாபில் அமைச்சராக இருந்த சர்தார் தீரத் சிங் குருமின் மகள் ஆவார்.[4][3]

இந்தியன் பெடோடோன்டிக்சு மற்றும் தடுப்பு பல் மருத்துவ சமூகத்தின் வாழ்நாள் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவரவார்.[5] மேலும் இந்தியப் பல் மருத்துவ சங்கம்[6] மற்றும் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் உறுப்பினராகவும் உள்ளார்.[7] சண்டிகர் மாநகராட்சியின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார்.[8][9]

முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் இந்நிறுவனத்தின் தகைசால் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்விதழ்களில் பல மருத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[10] மேலும் புளோரைடுகள் மற்றும் பல் நோய்கள்: ஒரு தொகுப்பு என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். இந்திய அரசாங்கம் 1992-இல் இவருக்கு நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம சிறீ விருதை இவருக்கு வழங்கியது. திவாரி, பயிரே பாச்சர்டு கல்வி நிறுவனத்தின் தகுதிச் சான்றிதழைப் பெற்றவர்.

குடும்பம்

[தொகு]

அம்ரித் கவுர் திவாரியின் தந்தை சர்தார் தீரத் சிங் முன்னாள் கிழக்கு பஞ்சாபில் அமைச்சராக இருந்தார். இவரது சகோதரர் பர்ஜிந்தர் சிங் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக இருந்தார். இவரது சகோதரி சுரிந்தர் கவுர் இந்தியத் தொடருந்து துறை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இவரது கணவர் வி. என். திவாரி பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பஞ்சாபி மொழிப் பேராசிரியராக இருந்தார். வி. என். திவாரி 1984-இல் பஞ்சாப் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர். இவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரது மகன் முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி மற்றும் மகள் புனித் திவாரி அமெரிக்காவில் குடியேறி வசித்துவருகின்றனர்.[11] மணீஷ் திவாரி இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தகவல் அமைச்சர். மற்றும் ஒளிபரப்பு அமைச்சரும் ஆவார்.

இறப்பு

[தொகு]

அம்ரித் கவுர் திவாரி, நீண்டகால உடல்நலக்குறைவு காரணமாக சனவரி 15, 2018 அன்று இறந்தார்[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Support Manish Tewari". Jassikangura. 15 April 2009. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
  2. "PGI starts dental treatment for young children". 6 February 2014. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
  3. 3.0 3.1 "Prof Amrit Tewari, former PGI Dean, passes away at 80". பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
  4. "obituary". பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
  5. "Life member of ISPPD" (PDF). Indian Society of Pedodontics and Preventive Dentistry. 2015. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
  6. "Fellow of Indian Dental Association". Indian Dental Association. 2015. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
  7. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
  8. "Congress leaders' kin in house". Times of India. 22 December 2011. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
  9. "MINUTES OF THE 211 th MEETING" (PDF). Chandigarh Municipal Corporation. Archived from the original (PDF) on 3 August 2016. பார்க்கப்பட்ட நாள் 15 October 2015.
  10. Lotika Wadhwa; Ashok Utreja; Amrit Tewari1c (January 1993). "A study of clinical signs and symptoms of temporomandibular dysfunction in subjects with normal occlusion, untreated, and treated malocclusions". American Journal of Orthodontics and Dentofacial Orthopedics 103 (1): 54–61. doi:10.1016/0889-5406(93)70105-W. பப்மெட்:8422032. http://www.ajodo.org/article/0889-5406(93)70105-W/abstract. 
  11. "Prof Amrit Tewari, former PGI Dean, passes away at 80". பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
  12. "Congress leader Manish Tewari's mother no more" (in ஆங்கிலம்). 2018-01-15. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரித்_திவாரி&oldid=3887901" இலிருந்து மீள்விக்கப்பட்டது