இந்தியப் பல் மருத்துவக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பல் மருத்துவக் கழகம்
சுருக்கம்IDA
உருவாக்கம்1949
வகைதொழிலக சங்கம்
தலைமையகம்மும்பை, இந்தியா
தலைமையகம்
சேவை பகுதி
உலகளாவிய
உறுப்பினர்
75,000+
தலைவர்
மருத்துவர் இரவீந்தர் சிங்
பொதுச் செயலர்
மருத்துவர் அசோக் தோப்லே
உடனடி மேனாள் தலைவர்
முனைவர் ஜான்க் ராஜ் சப்ஹர்வால்
முக்கிய நபர்கள்
மருத்துவர் ரபீயூதின் அகமது (நிறுவனர்)
சார்புகள்உலக பல்மருத்துவக் கழகம்
வலைத்தளம்www.ida.org.in

இந்தியப் பல் மருத்துவ கழகம் (Indian Dental Association) என்பது இந்தியாவில் உள்ள பல் மருத்துவர்களில் சங்கமாகும்.[1] இது 1946இல் நிறுவப்பட்டது.[2] இந்த சங்கத்தில் தற்போது 75,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், 500 உள்ளூர் கிளைகளும், 29 மாநில கிளைகளும் 9 ஒன்றிய பிரதேச கிளைகளும் 1 பாதுகாப்பு கிளை என இந்தியா முழுவதும் இதன் கிளைக் கழகங்கள் உள்ளன. இந்த தொழில்முறை சங்கம் பொது பற்ச் சுகாதாரம், நெறிமுறைகள், அறிவியல் மற்றும் பல் நிபுணர்களின் முன்னேற்றம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தரங்களின் மேம்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டில் உறுதிபூண்டுள்ளது.

கண்ணோட்டம்[தொகு]

இந்தியப் பல் மருத்துவக் கழகம் 1946ஆம் ஆண்டில் மருத்துவர் ரபியுதீன் அகமது என்பவரால் நிறுவப்பட்டது. இவர் இந்தியாவில் 'பல் மருத்துவத்தின் தந்தை' என்றும் அழைக்கப்படுகிறார். இச்சங்கத்தின் தலைவராக இரண்டு பதவிக் காலம் செயலாற்றினார். ஆரம்பத்தில், இந்த சங்கம் "அகில இந்தியப் பல் மருத்துவச் சங்கம்" என்று அழைக்கப்பட்டது, ஆனால் பின்னர் இன்று "இந்தியப் பல் மருத்துவ கழகம்" என்று பெயர் மாற்றப்பட்டது.

அகில இந்தியச் சங்கத்தின், மாநில கிளை மாநில எல்லைக்குள் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பல் மருத்துவர்களையும் உறுப்பினர்களாக உள்ளடக்கியது. ஒவ்வொரு மாநில கிளையும் உள்ளூர் கிளைகளுக்கும் மைய கிளைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இணைப்பாகச் செயல்படுகிறது. இது அதன் உள்ளூர் கிளைகளின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்கிறது.

இச்சங்கத்தின் உறுப்பினர்களாகப் பல் மருத்துவர்கள், பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் துணை நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.

இந்த அமைப்பு பல்வேறு ஐடிஏ சுகாதார முயற்சிகள் மற்றும் தேசிய பல்மருத்துவ சுகாதார திட்டத்தின் மூலம் பொது பல் மருத்துவ ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது.

பல் மருத்துவ கழக ஆய்விதழ், ஓரல் ஹெல்த், ஐடிஏ டைம்சு, பல் சுகாதாரம், பொருட்கள் விவரம், மாணவர் டைஜஸ்ட் போன்ற வெளியீடுகளை அதிகாரப்பூர்வ வெளியீடாக வெளியிடுகிறது.

பல் வல்லுநர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியான பல் கல்வியை ஆதரிக்கவும், ஊக்குவிப்பதற்கும் கல்வித் திட்டங்களிலும் இந்தியப் பல் மருத்துவக் கழகம் கவனம் செலுத்துகிறது.

ஆலோசனை[தொகு]

இந்த சங்கம் பல் நிபுணர்களின் குரலாகும். இது 'அனைவருக்கும் உகந்த ஆரோக்கியம்' என்பதை அரசுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் பரிந்துரைக்கிறது.[3] இந்த சங்கம் இந்தியப் பல் மருத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நோயாளிகள் மற்றும் தொழில் சார்பாக, நியாயமான அறிவியல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Dental Association Official Website. About IDA". Archived from the original on 2011-11-18. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.
  2. "Indian Dental Association Official Website. 'Our History'". Archived from the original on 2011-12-16. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.
  3. "Indian Dental Association Official Website. 'Advocacy Laws'". Archived from the original on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.