உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாசா
Ambassa
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தலாய்
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்16,407
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
வாகனப் பதிவுTR-04
திரிபுரா மாநிலத்தில் நான்கு மாவட்டங்கள் உள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் சிறிய தொடருந்து பாதையமைப்பு
திரிபுராவில் அம்பாசா ஒரு முக்கியமான தொடருந்து நிலையம்

அம்பாசா (Ambassa (Pron:/æmˈbæsə/)) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள தலாய் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

புவியியல் அமைப்பு

[தொகு]

23°55’10.8’’ வடக்கு 91°50’42’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அம்பாசா நகரம் பரவியுள்ளது.

மக்கள்தொகையியல்

[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] அம்பாசா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 6,052 பேர் ஆகும். இம்மக்கள் தொகையில் 54% பேர் ஆண்கள் மற்றும் 46% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 70% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 60 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 40 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறு வயதிற்குக் குறைவான சிறுவர்கள் 13% அளவில் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாசா&oldid=3574728" இலிருந்து மீள்விக்கப்பட்டது