அமைரா ஹாஸ்
Amira Hass | |
---|---|
Amira Hass | |
பிறப்பு | 28 சூன் 1956 எருசலேம், இஸ்ரேல் |
தேசியம் | இஸ்ரேலியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் |
பணி | பத்திரிக்கையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–தற்போது வரை |
பணியகம் | ஹாரெட்ஸ் நாளிதழ் |
அறியப்படுவது | பாலஸ்தீனிய பிரதேசங்களில் அன்றாட வாழ்க்கையின் அறிக்கை |
அமிரா ஹாஸ் ( Amira Hass ; பிறப்பு 28 ஜூன் 1956) ஒரு இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்த மேற்குக் கரை மற்றும் காசாக்கரையில் பாலஸ்தீனிய விவகாரங்களை உள்ளடக்கிய ஹாரெட்ஸ் என்ற தினசரி செய்தித்தாளில் தனது கட்டுரைகளுக்காக அறியப்படுகிறார்.
சுயசரிதை
[தொகு]போஸ்னிய நாட்டில் பிறந்த செபராது யூதத் தாய்க்கும், உருமேனிய நாட்டில் பிறந்த அஸ்கனாசு யூதரான தந்தைக்கும் ஒரே மகளாகப் எருசலேமில் பிறந்தார்.[1] எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகத்தில் நாசிசத்தின் வரலாறு மற்றும் பெரும் இன அழிப்புடன் ஐரோப்பிய இடதுகளின் உறவைப் படித்தார்.
பத்திரிகை வாழ்க்கை
[தொகு]1991 இல் பாலஸ்தீனிய பிரதேசங்களில் இருந்து அறிக்கை செய்யத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1993 முதல் 1997 வரை காசாவில் மற்றும் ரமல்லாவில் பாலஸ்தீனியர்களிடையே முழுநேரமாக வாழ்ந்த ஒரே யூத இஸ்ரேலிய பத்திரிகையாளர் ஆவார். [2]
செப்டம்பர் 2014 இல், இடதுசாரி ஜெர்மன் ரோசா லக்சம்பர்க் அறக்கட்டளை மற்றும் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு ஆய்வுகள் மையம் ஏற்பாடு செய்திருந்த பிர்சீட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். [3] மாநாட்டில் இஸ்ரேலியர்கள் (இஸ்ரேலிய யூதர் என்று கருதியதால்) மாநாட்டில் இருப்பதற்கு எதிரான விதியின் காரணமாக இரண்டு பிர்சீட் விரிவுரையாளர்களால் இவர் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
[தொகு]- 2000 ஆம் ஆண்டில் சர்வதேச பத்திரிகை நிறுவனத்திடமிருந்து உலக பத்திரிகை சுதந்திர நாயகி விருதைப் பெற்றார். [4]
- ஜூன் 27, 2001 அன்று, உரோமை தளமாகக் கொண்ட ஆர்க்கிவோ டிசார்மோ என்ற அமைப்பால் வழங்கப்பட்ட கோல்டன் டவ் ஆஃப் பீஸ் பரிசை பெற்றார். [5]
- 2002 ஆம் ஆண்டில், டச்சு கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான பிரின்ஸ் கிளாஸ் நிதியத்தின் இளவரசர் கிளாஸ் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6]
- இவர் 2002 இல் புருனோ க்ரீஸ்கி மனித உரிமைகள் விருதையும், 2003 இல் யுனெஸ்கோ/கில்லர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திரப் பரிசையும், 2004 இல் அன்னா லிண்ட் நினைவு நிதியத்தின் தொடக்க விருதையும் வென்றார் [7]
- செப்டம்பர் 2009 இல், அல்பர் கோர்முஸ் என்பாருடன் சேர்ந்து கிரான்ட் டிங்க் சர்வதேச விருதைப் பெற்றார். [8]
- 20 அக்டோபர் 2009 அன்று, சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். [1]
- 27 டிசம்பர் 2008 முதல் ஜனவரி 18, 2009 வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது, ஹாரெட்ஸ் என்ற இஸ்ரேலிய நாளிதழுக்காக காசா பகுதியில் இருந்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான அறிக்கைகளுக்காக டிசம்பர் 2009 இல், இவருக்கு எல்லைகளற்ற செய்தியாளர்கள் விருது வழங்கப்பட்டது.[9]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Amira Hass | 2009 Lifetime Achievement Award". International Women's Media Foundation. பார்க்கப்பட்ட நாள் 19 July 2011.
- ↑ "Israeli Journalist Amira Hass Awarded World Press Freedom Prize 2003". UNESCO.
- ↑ "Rosa Luxemburg Foundation Palestine". முகநூல். 16 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
- ↑ "Amira Hass, Israel: World Press Freedom Hero (Honoured in 2000)". International Press Institute. Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
- ↑ "Israeli journalist among those awarded Italian peace prize". Associated Press Newswires. 28 June 2001.
- ↑ Prince Claus Fund. "Amira Hass". Archived from the original on 8 April 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Hrant Dink Ödülü Görmüş ve Hass'a" (in tr). Milliyet. 16 September 2009. http://www.milliyet.com.tr/Guncel/HaberDetay.aspx?aType=HaberDetay&ArticleID=1139761&Date=16.09.2009&Kategori=guncel&KategoriID=24&b=Hrant%20Dink%20odulu%20Gormus%20ve%20Hassa&PAGE=1.
- ↑ Today's Zaman, 17 September 2009, Journalists Görmüş and Haas receive International Dink Award
- ↑ "Press Freedom Prize Awarded to Israeli Reporter and Chechen Magazine". Reporters Without Borders. 3 December 2009. Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Press Freedom Hero award". Archived from the original on 3 August 2004. பார்க்கப்பட்ட நாள் 15 October 2003.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - Bruno Kreisky Human Rights Award
- World Press Freedom Prize
- Anna Lindh Award
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அமைரா ஹாஸ்