சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை
வகைஇலாப நோக்கற்ற அமைப்பு
நிறுவுகை1990
தலைமையகம்வாசிங்டன், டி. சி., அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தொழில்துறைஊடகவியல், மனித உரிமை, சமூக நீதி, பெண்களின் உரிமைகள்
இணையத்தளம்iwmf.org

சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளை ( International Women's Media Foundation ), என்பது ஊடகத்துறையில் பெண்களின் நிலையை உயர்த்த சர்வதேச அளவில் செயல்படும் ஒரு அமைப்பாகும். இது வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ளது [1] அறக்கட்டளையானது ஊடகங்களில் பெண்கள் தங்கள் தொழில் மற்றும் வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளுக்கு நடைமுறை தீர்வுகளை உருவாக்க உதவும் திட்டங்களை உருவாக்கியுள்ளது. இதன் பணியானது, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் சர்வதேச அறிக்கையிடல் உதவித் தொகைகள் மற்றும் பெண் பத்திரிகையாளர்களுக்கு மானிய வாய்ப்புகளை வழங்குதல், ஊடகங்களில் பெண்களின் நிலை பற்றிய ஆராய்ச்சி மற்றும் பத்திரிகைத் துறையில் தைரியம், புகைப்பட இதழியலில் அஞ்சா நீட்ரிங்ஹாஸ் தைரியம் மற்றும் வாழ்நாள் சாதனை விருதுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியது. அறக்கட்டளை சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரத்திற்காக வாதிடுகிறது. மேலும் அடிக்கடி சர்வதேச அரசாங்கங்கள் சிறைப்பிடித்துள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்கவும், ஆபத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

வரலாறு[தொகு]

மார்ச் 2011 இல், அறக்கடளையானது ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பெண் தலைவர்களின் சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தது. அமைப்பின் இருபதாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் மற்றும் ஊடகங்களில் பெண்களின் நிலையை பிரதிபலிக்கிறது.

அறக்கட்டளையானது 2011 இல், "செய்தி ஊடகத்தில் பெண்களின் நிலை குறித்த உலகளாவிய அறிக்கை" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. [2]

தைரிய விருதுகள்[தொகு]

சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை ஆண்டுதோறும் பெண் பத்திரிகையாளர்களுக்கு " தைரியமான ஊடகவியளாளர்" விருதையும், புகைப்படப் பத்திரிக்கையாளர்களுக்கு அஞ்சா நீட்ரிங்காஸ் என்ற விருதையும் வழங்குகிறது. இந்த விருதுகள் அசாதாரண துணிச்சலுக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்ட பெண் பத்திரிகையாளர்களை கௌரவிக்கின்றன". [3] அறக்கட்டளையின் கூற்றுப்படி, விருதுகளில் தைரியமான பத்திரிக்கையாளர் விருதினை வென்றவர்கள் உண்மையை வெளிக்கொணர ஆபத்தை எதிர்கொள்கின்றனர். மேலும் [உயிர் பிழைத்துள்ளனர்]. மேலும் நிர்ப்பந்தத்தின் கீழ் அறிக்கையிடுவதற்கான தடையை உயர்த்தியுள்ளனர்". ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் விழாக்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்[தொகு]

சர்வதேச பெண்கள் ஊடக அறக்கட்டளை, பத்திரிக்கை துறையில் சாதனை படைத்த பெண்களுக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது"களை வழங்கி கௌரவிக்கிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது வென்றவர்கள் "உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் தங்கள் குரல்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் செவிசாய்ப்பதை சாத்தியமாக்குவதற்கு தடைகளை உடைக்கின்றனர்" என அறக்கட்டளை கூறுகிறது.[4] விருது பெற்றவர்களில் மெக்சிக்கோவைச் சேர்ந்த அல்மா கில்லர்மோப்ரிட்டோ (2010), இஸ்ரேலைச் சேர்ந்த அமிரா ஹாஸ் (2009) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எடித் லெடரர் (2008) ஆகியோரும் அடங்குவர். [5]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]