அமேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமேர்
நகரம்
அமேர் is located in Rajasthan
அமேர்
அமேர்
அமேர் is located in இந்தியா
அமேர்
அமேர்
இராஜஸ்தான் மாநிலத்தில் அமேரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°59′N 75°52′E / 26.983°N 75.867°E / 26.983; 75.867ஆள்கூறுகள்: 26°59′N 75°52′E / 26.983°N 75.867°E / 26.983; 75.867
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாநிலம்ஜெய்ப்பூர் மாவட்டம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

அமேர் அல்லது ஆம்பர் (Amer or Amber), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரமான செய்ப்பூர் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். முன்னர் இது ஆம்பர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. இங்கு இராசபுத்திரர்கள் கட்டிய அழகிய ஆம்பர் கோட்டை உலகப் பாரம்பரியக களங்களில ஒன்றாக உள்ளது.[1] முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் தக்காணப் பகுதியின் முக்கிய படைத்தலைவர்களில் ஒருவரான ஜெய்ப்பூர் இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஜெய் சிங் விளங்கினார். புரந்தர் உடன்படிக்கையில், முதலாம் ஜெய்சிங் மற்றும் சிவாஜி கையொப்பமிட்டனர்.

வரலாறு[தொகு]

ஆம்பர் கோட்டையிலிருந்து நகரம் மற்றும் கோயிலின் காட்சி
ஆம்பர் கோட்டையில் உட்பகுதிகள்
1985-இல் ஆம்பர் கோட்டை
பன்னா மீனா படிக்கிணறு, ஆம்பர் கோட்டை

ஜெய்கர் கோட்டை அருகே இராஜா கல்கி தேவன் 1036-இல் அமேர் நகரத்தில் தனது இராச்சியத்தின் தலைநகராக மாற்றினார். 1037-இல் கட்ச்வாகா குல இராஜபுத்திர குலத்தினர் அமேரை கைப்பற்றினர். [2]அமேர் நகரத்தின் ஆம்பர் கோட்டையை இராஜா மான் சிங் என்பவரால் கட்டப்பட்டது. மான் சிங்கின் பேரன் இரண்டாம் ஜெய் சிங் அமேர் நகரத்தின் தெற்கே 9 கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்ப்பூர் நகர அரண்மனையை நிறுவினார். மேலும் இவர் ஹவா மஹால், ஜல் மகால், ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்),ஜெய்கர் கோட்டை மற்றும் நாகர்கர் கோட்டைகளை நிறுவினார். மகாராஜா ஜெய் சிங் நினைவாக ஜெய்ப்பூர் நகரத்திற்கு என பெயரிடப்பட்டது. கட்ச்வாகா இராஜபுத்திர குலத்தினருக்கு ஜெய்ப்பூர் நகரம் 1727 முடிய தலைநகரமாக இருந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Amber". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. (1911). Cambridge University Press. 
  2. "Rajputana(amer)".

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமேர்&oldid=3027875" இருந்து மீள்விக்கப்பட்டது