அமிர்தா ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தா ஐயர்
பிறப்பு14 மே 1994 (1994-05-14) (அகவை 29)
பெங்களூர் , கர்நாடகா இந்தியா
மற்ற பெயர்கள்தென்றல்
படித்த கல்வி நிறுவனங்கள்செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2018 – தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்

அமிர்தா ஐயர் (Amritha Aiyer) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றுகிறார்.[1] இவர் ரெட் , 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற சில தெலுங்கு படங்களிலும் தோன்றினார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அமிர்தா கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தார். பெங்களூர் செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் இளங்கலை வணிகப் பட்டம் பெற்றார். பின்னர் வடிவழகியாக மாறினார்.[3]

தொழில்[தொகு]

லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் அமிர்தா சில அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

அமிர்தா படைவீரன் (2018) படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார். அதில் இவர் மலர் என்ற வேடத்தில் நடித்தார். தி இந்து திரைப்படத்தின் விமர்சனத்தில் "அமிர்தா தனது பாத்திரத்தில் பொருத்தமாக பொருந்துகிறார்" என்று கூறியது. பின்னர் இவர் காளி (2018) படத்தில் விஜய் ஆண்டனிக்கு இணையாக கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.[4] அட்லீயின் பிகில் (2019) திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவியாக தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார்.[5] கிராமாயணம் என்ற கன்னடப் படத்தில் வினய் இராஜ்குமாருடன் அறிமுகமாக உள்ளார்.[6]

அம்ரிதா, கிஷோர் திருமலா இயக்கிய ரெட் (2021) படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.[7] 2021ஆம் ஆண்டில், ஜி. வி. பிரகாஷ் குமார் ஆனந்தராஜ் ஆகியோருடன் இவரது முதல் வெளியீடான வணக்கம்டா மாப்ள படத்தில் நடித்திருந்தார். இவரது இரண்டாவது வெளியீடான லிப்ட் (2021), கவினுக்கு இணையாக நடித்தார். திரைப்படம் திரையரங்குகளிலும், நேரடியாக ஹாட் ஸ்டார் வழியாகவும் வெளியிடப்பட்டது.[8] இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களையும், அதிக நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.[9]

சான்றுகள்[தொகு]

  1. "All you want to know about #AmrithaAiyer". FilmiBeat.
  2. "Amritha Aiyer: Lesser known facts about 'Bigil' actress who is all set to make her Tollywood debut". The Times of India (in ஆங்கிலம்). 2020-01-31. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  3. "Amritha Aiyer: Lesser known facts about 'Bigil' actress who is all set to make her Tollywood debut". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 January 2020.
  4. Suganth, M (2017-07-27). "amritha: Amritha is one of the female leads in 'Kaali' | Tamil Movie News". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 4 October 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  5. "Amritha joins Vijay's 'Thalapathy 63' shoot | Tamil Movie News". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2019-05-17. Archived from the original on 20 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
  6. "Amrita Iyer to make her Sandalwood debut!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). Archived from the original on 22 October 2018. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  7. "Spotted: Ram Pothineni, Nivetha Pethuraj, Malvika Sharma, Amritha Aiyer, and Kishore Tirumala at the pre-release event of RED". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 January 2021.
  8. Jha, Lata (2021-09-27). "Tamil film 'Lift' to stream on Disney+ Hotstar". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.
  9. "LIFT Review: Kavin and Amritha lift this mildly-satisfying horror-thriller". m.timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தா_ஐயர்&oldid=3742354" இலிருந்து மீள்விக்கப்பட்டது