வினய் இராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினய் ராஜ்குமார் ( Vinay Rajkumar ) (பிறப்பு மே 7 ) இவர் கன்னட சினிமாவில் பணிபுரியும் இந்திய நடிகராவார். நடிகர் ராஜ்குமாரின் பேரனும், திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் நடிகருமான ராகவேந்திராவின் மகனுமான இவர், 2014 ஆம் ஆண்டில் சித்தார்த்தா என்றத் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வினய் ராஜ்குமார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ராகவேந்திரா மற்றும் மங்களா ஆகியோருக்கு பிறந்தார். இவர் நடிகர் ராஜ்குமாரின் பேரனாவார். இவருக்கு குரு என்ற தம்பி உள்ளார். நடிகர்கள் சிவ ராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமார் ஆகிய இருவரும் இவரது மாமாக்கள். வினய் பெங்களூரு செயின்ட் ஜோசப் வணிகக் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

வினயின் தாத்தா ராஜ்குமார் இவரை முதன்முதலில் ஐந்தாவது வயதில் ஆகாஸ்மிகா (1993) என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.[2] வினய் இதைத் தொடர்ந்து ஒடஹுதிதாவாரு (1994), தனது தந்தையின் படமான அனுரகடா அலேகலு (1993) மற்றும் நவிபரு நமகிபாரு (1993), மற்றும் மாமா சிவாவின் ஓம் (1995) மற்றும் ஹ்ருதயா ஹ்ருதயா (1999) ஆகிய படங்களில் தோன்றினார் .[3][4]

வினய் ஒரு நடிகராக "நாடகங்களில் பயிற்சி பெறுமுன்" "ஓரிரு நபர்களுடன் நடிப்பு பட்டறைகளில்" பயிற்சி பெற்றார். பின்னர் தனது மாமாக்களின் படங்களின் பயிற்சியாளர்களிடமிருந்து நடனம் மற்றும் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றார்.[5] 2012ஆம் ஆண்டில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த ஒரு பேட்டியில், [மாமா புனீத்தின் படம்] யாரே கூகதலி படப்பிடிப்பில் தான் ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார். புனீத்தின் முந்தைய படமான அண்ணா பாண்ட் (2012) படப்பிடிப்பில் ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.[6]

விருதுகள்[தொகு]

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்

குறிப்புகள்[தொகு]

  1. "Vinay Rajkumar kickstarted to become a star". தி டெக்கன் குரோனிக்கள். 4 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
  2. "Rajkumar's grandson Vinay's first interview". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
  3. "Vinay Rajkumar: On the run". The Hindu. 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017.
  4. "Rajkumar's grandson to make his debut with 'Siddartha'". The Hindu. 2 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017.
  5. Desai, Dhwani (23 December 2014). "Puneeth is like a good buddy: Vinay Rajkumar". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017.
  6. "No pressure from my family: Vinay Rajkumar". The Times of India. Archived from the original on 2 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2 March 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்_இராஜ்குமார்&oldid=3505932" இலிருந்து மீள்விக்கப்பட்டது